• Thursday 11 December, 2025 06:25 AM
  • Advertize
  • Aarudhal FM

மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

மதம் மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற அதிமுக பெண் கவுன்சிலரின் தலைவர் பதவியை பறித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக் கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேரூர் பேரூராட்சியில் 2022-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானேன். பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த தேர்தலில் 2-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதாராணி வெற்றி பெற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். 2005-ம் ஆண்டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து, கிறிஸ்தவரை திருமணம் செய்தவர். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வேறு மதத்துக்கு மாறினால், அவர் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது.

இந்​நிலை​யில், கிறிஸ்​தவ​ரான அமு​தா​ராணி, தான் இந்து பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்று கூறி தேர்​தலில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றார். இது சட்​ட​விரோத​மானது. எனவே, தேரூர் பேரூ​ராட்​சித் தலை​வ​ராக உள்ள அமு​தா​ராணி​யின் பட்​டியலின சாதிச் சான்​றிதழை ரத்து செய்​து, அவரை தலை​வர் பதவி​யில் இருந்து தகுதி நீக்​கம் செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கௌரி விசாரித்து, “இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

ஒரு​வர் ஒரே நேரத்​தில் இரு சலுகைகளை அனுபவிக்​கக் கூடாது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஏமாற்​றும் செய​லாகும். எனவே, அமு​தா​ராணி தலை​வர் பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்​யப்பட வேண்​டும்” என்று உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அமுதா​ராணி மேல்​முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

இந்த வழக்​கின் உண்​மை​யான பிரச்​சினை அமு​தா​ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்​றுக்​கொள்​கிறா​ரா, அவர் ஞானஸ்​நானம் பெற்​றாரா என்​பது​தான். மனு​தா​ரர் ஞானஸ்​நானம் பெற்​றுக்​கொண்​டது உறு​திப்​படுத்​தப்​படு​கிறது. ஒரு​வர் ஒரு மதத்​திலிருந்து மற்ற மதத்​துக்கு மாறு​வது என்​பது அரசி​யலமைப்​பின் அடிப்​படை உரிமை​யாகும்.

ஆனால், ஞானஸ்​நானத்​துக்​குப் பிறகு புதிய அடை​யாளத்தை மறைத்​து, அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை அனுபவிக்​கும் நோக்​கத்​துக்​காக, பட்​டியல் இன சமூக நிலை​யில் தொடரும்​போது சிக்​கல் ஏற்​படு​கிறது.

இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைத் தழுவி உள்​ளார் என்​பது ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டு, மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.

16 வயது சிறுவனுக்கு வெட்டு

கவின் ஆணவப்படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சியே ஒயாத நிலையில், சேரன்மகாதேவியில் வீடு புகுந்து பள்ளி மாணவனை 5 சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியுடன் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவன் பழகியதால் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவன் சிகிச்சையில் உள்ள நிலையில், 5 சிறார்களும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

அப்பல்லோ ஹாஸ்பிடலில் CM ஸ்டாலின் அனுமதி

அப்பல்லோ ஹாஸ்பிடலில் CM ஸ்டாலின் அனுமதி

CM மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இது வழக்கமான பரிசோதனை என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. அவரின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,

அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி டிஜிட்டல் மயம்

அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி டிஜிட்டல் மயம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASY ஆக விண்ணபிக்கலாம்.

  1. பான்கார்டு: NSDL
  2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
  3. ஓட்டுநர் உரிமம் https://parivahan.gov.in/
  4. பாஸ்போர்ட் www.passportindia.gov.ink.
  5. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க.

தேங்காய் எண்ணெய்யில் இவ்ளோ நன்மையா

பல் சிதைவை தடுக்க உதவும்

சருமத்தின் நீரேற்றத்தை அதிகரிக்கிறது

மூளை சிறப்பாக செயல்பட உதவும்

தைராய்டு பிரச்சனையைச் சரிசெய்யும்

உதடுகளைப் பாதுகாக்கவும், சீரானதாகவும் வைத்திருக்க உதவும்

ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும்

காது குடைய buds யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை சாப்பிட்டால் HEART ATTACK எச்சரிக்கை

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்

குழந்தை வரம் கேட்டவளின் உயிரைப் பறித்த கொடூரம்

குழந்தை வரம் கேட்டது தப்பா… உயிரைப் பறித்த கொடூரம்

உ.பி.,யில், 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனுராதா(35), தாந்தரீகம் செய்யும் சந்துவின் உதவியை நாடியுள்ளார்.

சந்துவோ அனுராதாவுக்கு பேய் ஓட்ட வேண்டும் எனக் கூறி, உதவியாளர்களுடன் சேர்ந்து அவரது கழுத்தை அழுத்தி, வலுக்கட்டாயமாக வாயை திறந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார். இதில் உடல்நலம் மோசமடைந்த அனுராதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னும் மூடநம்பிக்கைகளில் சிக்கி இருப்பவர்களை என்ன செய்வது?

போதை மருந்து கொடுத்து மாணவனை சீரழித்த ஆசிரியை

மும்பையில், 40 வயது ஆங்கில ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுக்கு மது மற்றும் மாத்திரைகள் கொடுத்து ஓராண்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆண்டு விழாவில் நெருங்கிப் பழகிய ஆசிரியை, தனது தோழியின் உதவியுடன் மாணவனை மயக்கி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து 3 பேர் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் படி, ஓட்டுநர் மற்றும் 5 பள்ளிக் குழந்தைகள் வேனில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.