
மவுண்ட் எவரெஸ்ட்டை விட அதிக உயரமான எரிமலை
மார்ஸ் கிரகத்தில் இருக்கும் ‘Arsia Mons’ “என்ற மிகப்பெரிய எரிமலையின் முதல் போட்டோக்கள் வெளிவந்துள்ளன. நாசாவின். Mars Odyssey விண்கலம் மேகங்களை விபுல உயரமாக எழுந்து நிற்கும் இந்த எரிமலையை படம் பிடித்துள்ளன. கடல்மட்டத்தில் இருந்து 20 கி.மீ-க்கு மேல் உயர்ந்து இந்த எரிமலை. நிற்கிறது. பூமியின் மிக உயரமான எரிமலை வெறும் 9 கி.மீ தான். அவ்வளவு ஏன், மவுண்ட் எவரெஸ்டின் உயரமே 8 கி.மீ தான்!

வேகமெடுக்கும் கொரோனா.. 591 பேர் பலியான சோகம்
வீரியம் குறைவான கொரோனா என அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், பலிக எண்ணிக்கை உயர்வதால் லாக்டவுன் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் உள்பட புதிதாக 4 பேரும், நடப்பாண்டில் மொத்தமாக 59 பேரும் உயிரிழந்தது மத்திய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள், முதியோர் பாதுகாப்பாக இருங்கள்!

ஆசிர்வதியும் கர்த்தரே- பாடல் பிறந்த கதை
இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கு, சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த யுனிஸ் அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் அருள்திரு. டி. எஸ்.டேவிட் ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர் மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார்.வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.
ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 வரை ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் வசதிக்காக பழைய பஸ் பாஸையே பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் நாளிலேயே நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிடுங்கள். தற்போது கொரோனா மெல்ல தலை தூக்கி வருவதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.

இந்திய வேதாகம சங்கத்தின் புதிய அப்டேட் பைபிள் மொழிபெயர்ப்பு
எதற்காக இதை நாம் பயன்படுத்த வேண்டும்…
காரணங்களை அறிந்து கொள்வோம்
மிக முக்கியமானதை மட்டுமே,
அதுவும் மிகவும் எளிமையாக படிப்பதற்காக,
Point by Point -ஆகவே பதிவு செய்திருப்பதால், இறுதி வரை கண்டிப்பாக வாசிக்கும் படியாக அன்போடு வேண்டுகிறேன் 🙏🏻
முதலாவது :
✨ பரிசுத்த வேதாகமத்தை மாற்றுதல் என்பது வேறு.
✨ பரிசுத்த வேதாகமத்தின் நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதற்காக, இன்னும் சிறப்பாக Update செய்வது என்பது வேறு.
உன்னதமான தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையாகிய : பரிசுத்த வேதாகமம் 💯% Perfect.
ஒருவராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது.
ஆகவே,
Translation Updation என்பது வேறு.
அது தவிர்க்கவே முடியாத காலத்தின் கட்டாயம்.
குறிப்பாக, நம்முடைய தமிழ்நாட்டில் மிஷினரிகள் (சீகன் பால்க் முதல் பல மிஷினரிகள்) கர்த்தருடைய வார்த்தையை :
அடுத்தடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டு போய் சேர்ப்பதில் மிக கவனமாக செயல்பட்டார்கள்.
ஆகவே, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பு 150 ஆண்டுகளுக்கு மேலாக எந்த Updation -ம் இல்லாமல் இருப்பதால்,
இப்போது இருக்கிற இளம் தலைமுறை முதல் வருகிற அடுத்த தலைமுறைக்கும் கர்த்தருடைய வார்த்தையை கவனமாக, சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய மிகக் கட்டாயமான அவசியத்தை உணர்ந்து,
❤️ Bible Society of India (BSI) தற்போது நம்முடைய இந்த தமிழ் மொழிபெயர்ப்பை Updation செய்து வெளியிட்டு இருப்பது :
💥 Translation Updation -ல் 5 மிக முக்கிய அம்சங்கள் உள்ளன.
❤️ 1). எழுத்தில் Updation :
உதாரணத்திற்கு :
லை என்ற எழுத்து நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பில், பழைய எழுத்து, அதாவது : ல என்ற எழுத்தில் ஒரு சுழி இருக்கும்.
அது : லை – என்று, மாற்றமடைந்து பல ஆண்டு காலமாகிறது.
இப்படி இன்னும் பல…. (Tamil Font -ம் எளிதாக படிப்பதற்கு ஏதுவான Font -ஐ தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்).
❤️ 2). வார்த்தைகளில் Updation :
🔥 ஜாதி – என்ற மிகத் தவறான வார்த்தை : முற்றிலும் களையப்பட்டு அதற்கு பதிலாக :
மேலும், இஸ்ர வே ல் என்ற வார்த்தை :
எபிரேய உச்சரிப்பில் உள்ளபடி :
மேலும், புரியவே புரியாத பல வார்த்தைகள் மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது :
✨ யோபு – 33 : 23 -ல் :
✨ நீதிமொழிகள் 25 : 12 :
✨ ஆதியாகமம் – 42 : 23 -ல் :
✨ லேவியராகமம் – 4 : 9 (இன்னும் பல வசனங்களில் உள்ள) :
மிகவும் கொச்சையாக இருக்கிற வார்த்தை :
✨ மேலும், பல வசனங்களில் உள்ள :
இப்படி இன்னும் பல….
❤️ 3). இலக்கண பிழைகளை சரிசெய்து, Grammatical Updation :
உதாரணத்திற்கு :
ஒருமை, பன்மை (Singular, Plural) பிழைகள் பல இடங்களில் சரி செய்யப்பட்டு இருக்கிறது.
❤️ 4). வசனங்களின் Concept -ல் மிகச்சரியான (Accuracy) Updation :
உதாரணத்திற்கு :
✨ ரோமர் – 5 : 20 -ல் :
✨ நீதிமொழிகள் – 16 : 4
✨ யோவான் – 8 : 23 -ல் :
இப்படி, இன்னும் பல வசனங்களில், பிழையாக இருப்பது : சரி செய்யப்பட்டு மிகச் சரியான Updations செய்யப்பட்டு இருக்கிறது.
5). சிறப்பு அம்சங்களில் Updation :
✨ அடிக்குறிப்புகள்,
✨ இணைவசனங்கள்,
✨ ஒவ்வொரு புத்தகத்திற்கும் முன்னுரை (அந்த புத்தகத்தின் கருப்பொருள், முக்கிய நபர்கள், முக்கிய பகுதிகள் போன்றவை)
✨ ஒவ்வொரு சம்பவங்களுக்கும், பகுதிகளுக்கும் ஏற்ற தலைப்புகள்
✨ ஒவ்வொரு சம்பவமும், பகுதிகளும் : இதே சம்பவம், இதே பகுதி : பரிசுத்த வேதாகமத்தின் மற்ற புத்தகத்திலும் எங்கிருக்கிறது என்ற Reference அந்தந்த தலைப்புகளுக்கு கீழேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உதாரணத்திற்கு :
🔥 மத்தேயு – நற்செய்தியை படிக்கும் போது அதில் 3 -ஆம் அதிகாரத்தில் -13 முதல் 17 வசனங்கள் வரையுள்ள : இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் – சம்பவம்
✨ மேலும், பல வார்த்தைகளுக்கான விளக்கங்கள் :
உதாரணத்திற்கு :
மத்தேயு – 23 : 5 -ல் :
✨ மேலும் : மூன்றாம் மணி நேரம், ஒன்பதாம் மணி நேரம் என்றால் :
மத்தேயு – 14 : 25 -ல் :
❤️ மேலும், இறுதிப்பகுதியில் :
பிற் சேர்க்கைகள் – என்ற பகுதியில் :
✨ பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் நடந்த வரலாற்று சுருக்கம்
✨ வேதாகம காலக் கணிப்பு – புதிய வரைபடங்கள்
போன்ற இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளிவந்திருக்கிறது :
My Final Conclusion :
💥 இது நம்முடைய கையில், நாம் வைத்திருக்கிற நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பின் Updation தான் இந்த Re – Edited Version
இதை வாங்கி நாம் பயன்படுத்துவதன் மூலம்,
By Bro. Muthu Kumar copy-Yaso