- 8
- 20251031
- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0

CBSE Public Exam 2026: Public Exam Schedule for Class 10, 12 Released
CBSE 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு, பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 மற்றும் ஏப்ரல் 9 வரை நடைபெறும். 45 லட்சம் மாணவர்கள் 46 நாடுகளில் எழுத உள்ளனர்.
2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிதப்பாடத்தில் தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிரெஞ்சு மொழிப்பாடத்துடன் நிறைவடையும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் +2 பொதுத்தேர்வு, ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பை பொறுத்தவரை, உயிரி தொழில்நுட்பம் பாடத்துடன் தொடங்கும் பொதுத்தேர்வு, data science எனப்படும் தரவு அறிவியல் பாடத்துடன் நிறைவடைகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 204 பாடங்களை, சுமார் 45 லட்சம் பேர் எழுத இருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா மட்டுமின்றி 46 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எழுத இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித குழப்பமும் இன்றி தேர்விற்கு தயாராக ஏதுவாக, தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முழு அட்டவணையை டவுன்லோடு செய்ய https://www.cbse.gov.in என்ற லிங்கில் சென்று Examinations என்ற டேப்பை கிளிக் செய்யவும். அந்த மெனுவில் Data Sheet என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் “CBSE Date Sheet X–XII Final 2026” என்பதை கிளிக் செய்து சிபிஎஸ்இ தேர்வின் முழு அட்டவணையை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.
CBSE Public Exam 2026: Public Exam Schedule for Class 10, 12 Released