• Monday 16 June, 2025 01:38 PM
  • Advertize
  • Aarudhal FM

295 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை நோட்டீஸ்

ஜூலை 30, 2024 12:00 AM சென்னை:

பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வேலை பார்ப்பது போல கணக்கு காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, 295 இன்ஜினியரிங் கல்லுாரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல், நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் இல்லை என்று கருதப்படும். நடப்பு கல்வியாண்டில் கல்லுாரியில் நடத்தப்படும் அனைத்து படிப்புகளையும் அங்கீகரிக்காமல், தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கு அதிகாரம் உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஆசிரியர்களின் ஆதார் அட்டை விபரங்களை, அரசு இணையதளத்துடன் இணைக்கவும், பல்கலை ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது