• Wednesday 23 October, 2024 11:30 AM
  • Advertize
  • Aarudhal FM

கிறிஸ்துவ மதத்தை திணிக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு கத்தோலிக்க பேரவையின் புதிய வழிகாட்டுதல்கள்

கிறிஸ்துவ மதத்தை திணிக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு கத்தோலிக்க பேரவையின் புதிய வழிகாட்டுதல்கள் நாட்டின் “தற்போதைய சமூக-கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகி வரும் சவால்களை” எதிர்கொள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள் இவை.

அனைத்து நம்பிக்கைகளையும் மரபுகளையும் மதிக்கவும், பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது கிறிஸ்தவ மரபுகளை திணிக்க வேண்டாம். தினசரி காலை பொழுதில் மாணவர்களின் அணிவகுப்பின்போது போது அரசியலமைப்பின் முன்னுரையை மாணவர்களை வாசிக்கச் செய்யுங்கள், பள்ளி வளாகத்தில் “அனைத்து வமத பிரார்த்தனை அறை” அமைக்கவும்.

 நாட்டின் “தற்போதைய சமூக-கலாச்சார, சமய மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக உருவாகி வரும் சவால்களை” எதிர்கொள்ள இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCI) அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கிய சில முக்கிய பரிந்துரைகள் இவை.

 சி.பி.சி.ஐ என்பது இந்தியாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாகும். அதன் கீழ், தோராயமாக 14,000 பள்ளிகள், 650 கல்லூரிகள், ஏழு பல்கலைக்கழகங்கள், ஐந்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 450 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இந்த பரிந்துரைகள் சி.பி.சி.ஐ.யின் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட 13 பக்க வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்.  ஆவணத்தின் ஒரு பகுதியாகும், ஜனவரி மாதம் பெங்களூரில் சி.பி.சி.ஐ-யின் 36 வது பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, விவாதிக்கப்பட்ட மையக் கருப்பொருள்களில் நாட்டின் தற்போதைய சமூக-அரசியல் நிலைமை ஆகும்.

கிறிஸ்தவ சமூகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் போராட்டங்களின் பின்னணியில் முதன்முறையாக இந்த வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திரிபுராவில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் பள்ளியின் ஆசிரியர் ஒரு மாணவனை இந்து சின்னம் பொருந்திய பேண்டை கையில் கட்டியிருந்தபோது அதைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து பஜ்ரங் தள் ஆர்வலர்கள் குழு ஒன்று பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தியது.

அதே மாதத்தில், அசாமில் உள்ள இந்து  அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளுக்கு 15 நாட்கள்  இறுதி எச்சரிக்கையை அளித்தது. அனைத்து கிறிஸ்தவ சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும்  பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பள்ளி வளாகத்தில் அவர்கள் மதத்தை வெளிப்படுத்தும் உடையை அணிய கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சி.பி.சி.ஐயின் தேசிய செயலாளரான ஃபாதர் மரியா சார்லஸ் எஸ்டிபி, இந்த தனித்தனி சம்பவங்களுக்கு இடையில் எந்த தொடர்பையும் உருவாக்க விரும்பவில்லை என்றாலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவாலயம் கவனமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்த்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

சி.பி.சி.ஐ வழிகாட்டுதல்கள் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் வலியுறுத்துகின்றன.”பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் மைதானங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த, பூட்டிய கதவுகள், நுழைவாயில் பாதுகாப்பு அமைப்புகள், பார்வையாளர்கள் சோதனை செய்யும் நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும்” என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

“இந்த நாட்களில் உருவாகி வரும் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையின் அடிப்படையில், கத்தோலிக்க பள்ளிகளைப் போல நாம் அதிக உணர்வுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்களின் பெரும்பான்மையான மாணவர்களும் ஆசிரியர்களும் எப்போதும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிபர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாமும் அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்போது மட்டுமல்ல, பல வருடங்களாக மாணவர்களுக்கு முன்னுரையை கற்பித்து வருகிறோம். பல ஆண்டுகளாக, எங்கள் மாணவர்கள் அனைவரும் முன்னுரையை அறிந்து, அரசியலமைப்பு விழுமியங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று தந்தை சார்லஸ் கூறினார்.

 பிரதான பள்ளி கட்டிடத்தின் நுழைவாயிலில் அரசியலமைப்பின் முகவுரையை காட்சிப்படுத்துவது மற்றும் காலை  மாணவர்களின் அணிவகுப்பின் போது மாணவர்களை வாசிக்க வைப்பது மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையே மத மற்றும் கலாச்சார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதையை ஊக்குவிக்கவும் வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. . கல்வி நிறுவனங்களில் வரவேற்பு மற்றும் இணக்கமான பணிச்சூழலை உருவாக்க, உள்ளடக்கிய நடைமுறைகள் குறித்த பயிற்சியை மேலும் பரிந்துரைக்கிறது.

 இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சிறுபான்மைச் சான்றிதழைத் தவிர, வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்குப் பரிந்துரைக்கின்றன, “சில முக்கிய  இந்திய சுதந்திரப்  போராட்ட  வீரர்கள்,  விஞ்ஞானிகள், கவிஞர்கள், தேசியத் தலைவர்கள் போன்றவர்களின் புகைப்படங்களை பள்ளி வளாகம்,  நூலகம்,  தாழ்வாரங்கள்  போன்றவற்றில் காட்சிப்படுத்த வேண்டும்.

” மேலும், பள்ளி வளாகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தனியான ‘சர்வமத பிரார்த்தனை அறை’ அல்லது சர்வதர்ம பிரார்த்தனாலையாவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த வழிகாட்டுதல்கள் எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மென்மையான நினைவூட்டல் அல்லது விழிப்புணர்வு அழைப்பு. இவை பாதுகாப்பு பொறிமுறையின் ஒரு முறையாக பரிந்துரைக்கப்படவில்லை, மாறாக அனைத்து பள்ளிகளையும் நினைவூட்டுகிறது, அவை எப்படி இருக்க வேண்டும், எப்படி எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார், ”  நடந்த சில நிகழ்வுகள், அவை அவ்வளவு சுவையாக இல்லை. மேலும், நாங்கள் எப்போதும் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் நாங்கள் கவலை படுகிறோம்.

 வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பள்ளிகளைக் குறிக்கும் அதே வேளையில், திருச்சபையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு இவை பொருந்தும் என்று தந்தை சார்லஸ் கூறினார்.