கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்தார். 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர், மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், 2 வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் மாநகர் மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.