சகலமும் சந்தை மயம்
இறைவன் கொடுத்த
இலவச தண்ணீரை-மனிதன்
பைகளில் அடைத்து
பணம் பண்ணுகிறான்
உடுப்பு கடைக்கு
உடையெடுக்கச் சென்றால்-வியாபாரி
உடுத்தி இருப்பதையும்
உருவப் பார்க்கிறான்
மழைக்குக் காரணமான
மரங்களை அழித்து விட்டு
மழைக்கு யாகம் பண்ணுகிறான்
மனிதன் மாயம் பண்ணுகிறான்
கார்ப்பரேட்டு களவாணிக்கு
காவல் பண்ணுகிறான் – அதுவே
ஏழைகள் என்றால்
ஏளனம் பண்ணுகிறான்
மனசாட்சி செத்தவன்
மருத்துவன் ஆகிறான்
மருத்துவம் வியாபாரமானதால்
மனித நேரத்தை மறந்து போகிறான்
மெய்யை மைய்யால் மறைத்து
பொய்யை பரப்புகிறான்
பத்திரிகை யாளன் -தன்
பையை நிரப்புகிறான்
நவீன இசையுடன்
நயவஞ்கத்தை கலந்து
உலாவவிடுகிறான் – ஊடகத்தான்
ஊசியில் விஷம் ஏற்றுகிறான்
விளைச்சல் நிலங்களை
வீட்டு மனையாக்கிவிட்டு – வியாபாரி
விலைவாசி உயர்வு என்று
வேடம் போடுகிறான்
நலிந்தவன் நம்பிக்கையோடு
நீதிமன்றம் நாடுகிறான்
நீதியரசரோ வழக்கில்
நீசருக்கு துணைபோகிறான்
சாலையோர சிற்றண்டிகள்
சாகக்கிடக்குது-அந்நிய
மெக்டொனால்டும் கேஎப்சியும்
மொத்தத்தையும் வாரிச்சுருட்டுது
சமுதாயத்தின் அவலங்களை
சிந்திக்காத கிறிஸ்தவனே
சபையில் நிரம்பி வழிகிறான்
சவாலகளை சந்திக்க மறுக்கிறான்
சிந்திக்க மறுத்து கிறிஸ்தவன்
சீரழிந்து போகிறான்
சமூகத்தை மறந்து- சபையில்
சத்தம் போடுகிறான்
விசாவுக்கு ஜெபம்
வேலைக்கு ஜெபம் – என்று
கோபுரம் கட்டுகிறான்-மதவாதி
கல்லாவை நிரப்புகிறான்
கிறிஸ்தவன் திருந்துவது-எப்போது
கேடுகள் மறையும் அப்போது
சிந்தித்தால் மலரும் புதுயுகம்
சாதிக்க முயலுவோம் அனைவரும்