• Tuesday 15 July, 2025 07:04 PM
  • Advertize
  • Aarudhal FM

ஆன்மீக நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்; கோவில் சுவர் விழுந்து 9 சிறுவர்கள் பலி

 Aug 4, 2024, 4:37 PM

மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தின், ஷாபூர் கிராமத்தில் ஹர்தௌல் பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று காலை 8.30 மணியளவில் மத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான கட்டிடங்கள் மழை நீரில் நனைந்து வலுவிழந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின் போது கோவிலின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததால் சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 9 சிறுவர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் அண்மை காலமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அண்மையில் ரேவா மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் அதே போன்ற விபத்தில் 9 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

thanks to asianet news tamil