- 15
- 20250626
கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர்.

(சங்கீதம்21:2)
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி,அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறீர்.
கர்த்தர் நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை கேட்கிறார்.
ஆபிரகாம் – கர்த்தர்
(ஆதியாகமம்17:20(18-20)
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த “விண்ணப்பத்தைக் கேட்டேன்”; நான் அவனை ஆசீர்வதித்து,அவனை மிகவும் அதிகமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன்.
அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்.
அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
ஆபிரகாமிடம் கர்த்தர் எதிர்பார்த்த குணங்கள் இல்லாமல் இருந்தது.
1)ஆபிரகாம் கர்த்தர் சொன்னதை நிறைவேற்றும் வரை காத்திருக்கவில்லை.
கர்த்தர் சொன்னதை நிறைவேற்றுகிறவர்.
(ஆதியாகமம்28:15)
நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை.
2)கர்த்தருடைய வார்த்தையைவிட மனைவியின் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான்.
(1சாமுவேல்2:29)
நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்.
3)உனக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான் என்பதற்காக என்னை மறந்து விட்டாயோ?பதின்மூன்று வருடமாக என்னைத் தேடவில்லையே?ஒரு குழந்தைக்காகத்தான் என்னை நம்பினாயா?
கர்த்தர் சொல்லுகிறார்:-
நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை(ஏசாயா 49:15)
உன்னை அழைத்தது நான் அல்லவா?(மத்தேயு7:11)
++++++++++++++++++++
நாம் தவறு செய்துவிட்டால் கர்த்தர் நம்மிடம் பாராமுகமாய் இருந்துவிடுவதில்லை,திரும்பவும் நம்மைத் தேடிவருகிறார்.
நம் விண்ணப்பத்தைக் கேட்கிறார். அரைகுறை மனதோடு அல்ல,ஏதோ,நீ கேட்டுவிட்டாய் என்பதற்காக அவனையும் ஆசீர்வதிக்கிறேன் என்று சொல்லவில்லை; முழுமனதோடு கேட்கிறார்,செய்கிறார்.
கர்த்தருக்கு நம் சூழ்நிலை தெரியும்,எந்த நிலையி்ல் தவறு செய்தோம் என்று கர்த்தர் அறிவார்.
(சங்கீதம் 103:14)
நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்.
ஆகவேதான்,ஆபிரகாமை மறுபடியும் தேடி வந்தார்,அவன் விண்ணப்பத்தைக் கேட்டார்,இஸ்மவேலை ஆசீர்வதித்தார்,இஸ்மவேலின் வம்சத்தார் இன்றுவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
(எண்ணாகமம் 23:19)
பொய்சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல;மனம்மாற அவர் மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
கர்த்தர் நம் பிள்ளைகளுக்காக ஏறெடுக்கும் விண்ணப்பங்களை நிச்சயமாக கேட்பார்,நம்முடைய எதிர்பார்ப்புக்கும் மேலாய் ஆசீர்வதிப்பார்.
GOD BLESS YOU.
போதகர் N.இக்னேஷியஸ் உலகநாதன்.
9841517622
மதுரவாயல்,சென்னை-95.