இஸ்ரவேல் ஜனங்களின் மேல் இரக்கமாயிருக்கின்ற தேவனைத் தான் ஏசாயா 43ம் அதிகாரத்தில் பார்க்கின்றோம்.
தமது ஜனங்களை பார்த்து “பயப்படாதே” என்றார் (ஏசா 43 :1, 5). அவர்களின் பாவமே பயத்தின் காரணம் (ஏசா 42 :24). ஆனாலும் மன்னித்து மறக்கிற கர்த்தர் நான் என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் (ஏசா 43 :25).
நமது பாவத்தினிமித்தம் அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கும்போது, மனந்திரும்பி அவரண்டை வந்தால், அதை மன்னித்து மறக்கிற கர்த்தர் மட்டுமல்ல, அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். தம்முடைய ஜனங்களின் மேல் தேவன் எவ்வளவாய் அன்புள்ளவராய் இருக்கிறார் என்பதை தான் இந்த அதிகாரத்தின் முதல் பகுதி விளக்குகிறது (ஏசா 43 :1-7).
இப்போதும் யாக்கோபே பயப்படாதே ஏசாயா 43:1
- நீ என்னுடையவன். (ஏசா 43 :1)
உன்னை சிருஷ்டித்தேன், உருவாக்கினேன், மீட்டுக்கொண்டேன், பேர்சொல்லி அழைத்தேன்.
- நான் உன்னுடன் இருக்கிறேன். (ஏசா 43 :2)
தண்ணீரை கடக்கும்போதும், ஆறுகளை கடக்கும்போது, அக்கினியில் நடக்கும்போதும் உடனிருந்து பாதுக்காப்போன்.
சோதனை வேளைகளில் கலவரப்படாமல் அதை பொறுமையாய் நடந்து செல்லுங்கள் (ஓட வேண்டாம்). நான் உங்களுடன் இருக்கிறேன் என்கிறார்.
- உன்னை விலை கொடுத்து மீட்டிருக்கிறேன். (ஏசா 43 :3)
நம்மை மீட்கும் பொருளாய் தமது சொந்த குமாரனையே தந்திருக்கிறார்.
- நீ எனக்கு முக்கியமானவன்(ள்). (ஏசா 43 :4).
நம்மை விலைமதிபுள்ள பொக்கிஷமாய் எண்ணுகிறார்.
- நான் உன்னை சிநேகித்தேன். (ஏசா 43 :4).
நம்மேல் அவர் கொண்ட அன்புக்காக எதையும் தர அவர் ஆயத்தமாயிருக்கிறார். தமது சொந்த குமாரனையே தந்துள்ளாரே!
- நான் உன் சந்ததியை கூட்டிச்சேர்ப்பேன். (ஏசா 43 :5-7).
உன்னை பழைய நிலைக்கு திரும்பப்பண்ணுவேன்
நமக்கு எதிர்கால நம்பிக்கையை தருகிறார்.
- உன்னை என் நாம மகிமைக்கென்று சிருஷ்டித்தேன். (ஏசா 43 :7).
நம்மூலமாய் அவர் மகிமைபடுவார். அதற்காகவே நம்மை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். (ஏசா 43: 21).
ஆகையால் யாக்கோபே, பயப்படாதே!
கே. விவேகானந்த்