- 5
- 20250626
காயல்பட்டினத்தில் தீப்பற்றி எரிந்த கார்

திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் உள்ள அம்பலமரைகாயர் தேர்வு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.