• Friday 13 December, 2024 02:51 AM
  • Advertize
  • Aarudhal FM

AG தமிழ் நாடு வேதாகம கல்லூரியில் பயின்ற போதகர்களுக்கு சமர்ப்பணம்

AG தமிழ் நாடு வேதாகம கல்லூரியில் பயின்ற போதகர்களுக்கு சமர்ப்பணம். 👇👇👇🔻🔺🔻🔺🔻🔺🔻🔺தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்தோம்…தமிழ்நாடு வேதாகம பள்ளியில் சங்கமித்தோம்.

மூன்று ஆண்டுகள் ஒட்டிக்கொண்டோம் – முட்டிக்கொண்டோம்,மோதிக்கொண்டோம்..

மெஸ்ஸில் வயிறை வளர்த்தோம்,வகுப்பறையில் வேத அறிவை வளர்த்தோம்..நூலகத்தில் சிந்தையில் தெளிவை வளர்த்தோம்.. சிற்றாலயத்தில் தேவ உறவை வளர்த்தோம்..ஆனால்……………..இந்த எல்லா இடத்திலும் நம் நட்பை வளர்த்தோம்…

ஒன்றாய் சாப்பிட்டோம்உறங்கினோம், நடந்தோம், திரிந்தோம்,விளையாடினோம்,ஆடினோம், பாடினோம் இறையியல் பயில சென்ற இடத்தில் கூடுதலாக நட்புயியல் பயின்றோம்

முடிவிலே அந்த நாள் வந்தது… பட்டம் பெற்றோம் – தேவ திட்டம் பெற்றோம்… கனத்த இதயத்துடன் ஒருவருக்கொருவர் விடையும் பெற்றோம்

சிலர் வந்த இடமே திரும்பினோம்…சிலர் தந்த இடம் சென்றோம்… அன்று தமிழ் நாட்டின் பல ஊர்களில் இருந்து வந்தோம்… இன்று நம் நட்பின் மூலமாய் தமிழகமே ஒரே ஊராய் மாறிப்போனது…

என்ன ஒன்று…!!அன்று நாம் பிரியும் போது கைப்பேசி இல்லை, ஸ்கைப் இல்லை, வாட்ஸ்அப் இல்லை, ஜூம் மும் இல்லை… ஆனால் தொட்டு விட, தொடர்பு கொள்ள துடித்தோம்…. இன்றோவிரலசைவில் பேச, முகம் பார்க்க வசதிகள் உண்டு ….ஆனால்…. !!!???? – உங்களில் ஒருவன்