• Friday 9 May, 2025 09:05 PM
  • Advertize
  • Aarudhal FM

தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12ம் வகுப்புதேர்வு எழுதிய மாணவன் – எவ்வளவு மார்க் தெரியுமா?

தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநராக பணிபுரிந்த அப்பா

சிவகங்கை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் செந்தில்வேலன் சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு உயிரி கணிதம் பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் செந்தில்வேலனும் அதற்கு தன்னை தயார் படுத்தி தேர்வெழுத காத்திருந்தபோது முதல் நாளான 3 ஆம் தேதி தமிழ் தேர்வெழுத காலையில் தயாரானபோது நிலையில் திடிரென செந்தில்வேலனின் தந்தை தர்மலிங்கம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்ற மாணவன்

இருந்தபோதிலும் அந்த துக்கத்தையும் மறந்து செந்தில்வேலன் தேர்வு மையம் சென்று தமிழ் தேர்வை எழுதியதுடன் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தந்தை தர்மலிங்கத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செந்தில்வேலன் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றியடைந்துள்ளார். இதனை தனது தாயிடம் மாணவன் தெரிவித்த நிலையில் கனவரின் புகைப்படம் முன்பு கதறி அழுத தாய் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மாணவனுக்கு ஆசீர்வாதம் செய்தார். மாணவன் செந்தில்வேலன் தனது தந்தையின் கனவான மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதே தனது லட்சியமென சூளுரைத்தார். தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.