USஇல் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் 18,000 பேர்

டிரம்ப் பொறுப்பேற்றதும், சட்டவிரோத குடியேற்றத்தை தடை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அடையாளம் காணவும், நாட்டுக்கு திரும்பி அழைத்து வரவும், இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளது. இதுவரை 18,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களை அழைத்துக் கொள்வதன் மூலம், அமெரிக்காவுடன் இணக்கமான உறவை தொடரவுள்ளது இந்தியா.