தேவனுடைய ஜனங்கள் என்பது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள மாபெரும் சிலாக்கியம். அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தில் நாம் யார் என்பதை பல கோணங்களில் அழகாக விளக்குகிறார்.
1 பேதுரு 2ஆம் அதிகாரத்திலிருந்து
1. மறுபடி பிறந்த குழந்தைகள். – 2:3
2. ஜீவனுள்ள கற்கள். – 2:5
3. தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி. – 2:9
4. பரிசுத்த இராஜரீக ஆசாரிய கூட்டம். – 2:5,9
5. தேவனுடைய ஜனங்கள். – 2:10
6. தேவனுக்கு அடிமைகள். – 2:16
7. திருப்பப்பட்ட மந்தை. – 2:25
இவைகளில் தேவனுடைய ஜனங்கள் என்பது நம்மை அடையாளப்படுத்தும் வார்த்தை. நாம் யார்? நமது மேன்மை என்ன? நாம் யாருடையவர்கள்? நமது உரிமை என்ன? நமது பொறுப்பு என்ன? நம்மை குறித்ததான நோக்கம் என்ன? போன்றதான ஏராளமான காரியங்களை இந்த வார்த்தை வலியுறுத்துகிறது.
நம்முடைய பழைய நிலை, நாம் தேவ ஜனங்களாக இருக்கவில்லை என்பதாகும். ஆனால் தேவனுடைய ஜனங்கள் என்கிற இந்த சிலாக்கியம் அவருடைய இரக்கத்தினால் நமக்கு கிடைத்திருக்கிறது (2:10, 1:4).
தேவ ஜனங்கள் என்பது நமது சிலாக்கியத்தை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பையும் வலியுறுத்துகிறது.
தேவனுடைய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாக வாழவேண்டும் என்பதை பேதுரு கீழேயுள்ள வசனங்களில் கூறுகின்றார்
1. அந்நியரும் பரதேசிகளும் என்ற மனநிலையோடு வாழுங்கள். – 2:11
2. மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள். – 2:11
3. மற்றவர்களுக்கு முன் நல் நடக்கை உள்ளவர்களாய் இருங்கள். – 2:12
4. மனிதக் கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். – 2:13
5. தேவனுக்கு அடிமைகளாய் இருங்கள். – 2:16
6. எல்லாரையும் கனம் பண்ணுங்கள். – 2:17
7. பாடுகளை பொறுமையோடு சகித்திருங்கள். – 2:20, 21
தேவனுடைய ஜனங்கள் நாம் என்ற மேன்மையை உணர்ந்தவர்களாய், அதற்கேற்ற வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக.
Thanks to கே. விவேகானந்த்