• Monday 9 September, 2024 07:36 AM
  • Advertize
  • Aarudhal FM

இந்தியா வந்த மிஷனரி – இராபர்ட் தெ நோபிலி

தத்துவ போதக சுவாமிகள் (1577 – 1656) என அழைக்கப்படும் இராபர்ட் தெ நோபிலி (Robert de Nobile S.J.உரோமப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். 26 வயதில் இயேசு சபையில் சேர்ந்து கத்தோலிக்கக் குருவாகி, தமிழ் நாட்டில் சமயப்பணியாற்ற விரும்பி, 1605 மே 20இல் கோவா வந்து சேர்ந்தார். 1606-ஆம் ஆண்டில் மதுரையை அடைந்து தமிழ்த்துறவி போல் வாழத்தொடங்கி கத்தோலிக்க மறைபணியாளராகப் பணி புரிந்தார். இறுதியில் மயிலையில் 1656-இல் இறைவன் திருவடி யடைந்தார். இவர் தமிழில் 40 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பங்களிப்பால் இவர் தமிழ் உரைநடையின் தந்தை என்று அறியப்படுகிறார்.

தமிழகத்தில் இவர் காலத்தில் உயர் இனத்தவராகக் கருதப்பட்டு வந்த பிராமணர்களைத் தம் சமயத்தில் ஈடுபடுமாறு செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டார். காவியுடையும் பூணூலும் அணிந்தார். புறத்தோற்றத்தில் தமிழ்த்துறவியாக மாற்றம் கொண்டாலும் அகவுணர்வில் சமயக்கோட்பாடுகளினின்று சிறிதும் வழுவவில்லை. தாம் அணிந்திருந்த ஐம்புரிகள் தமதிரித்துவத்தையும், இரண்டு வெள்ளிப் புரிகள் கிறிஸ்து பிரானின் உடலையும் உயிரையும் குறித்தனவாகக் கூறினார்.

இவரின் இத்கைய செயல்பாடுகள் பிற இயேசு சபையினருடைய எதிர்ப்பையும், அப்போது கோவாவின் ஆயராக இருந்த கிறிஸ்தவோவுடைய எதிர்ப்பையும் பெற்றது. இது திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியிடம் முறையிடப்பட்டது. அவர் 31 சனவரி 1623இல் வெளியிட்ட மடலில் (Apostalic Constitution-Romanæ Sedis Antistes) இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காதவரை எத்தடையும் இல்லை என அறிவித்தார். மேலும் இம்மடலில் இந்திய குருமடத்தில் பயிற்சிபெறுபவர்களிடம் இருத்த சாதி வெறியையும் குறிப்பாக பறையர் இனமக்களிடம் இருந்த வெறுப்பையும் விட்டுவிட வற்புறுத்தியிருந்தார்.

வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றை ஆய்ந்தறிய வடமொழிதமிழ்தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தமிழில் நாற்பது உரைநடை நூல்கள், மூன்று கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் ஞானோபதேச காண்டம்மந்திர மாலைஆத்தும நிர்ணயம்தத்துவக் கண்ணாடிசேசுநாதர் சரித்திரம்ஞான தீபிகைநீதிச்சொல்புனர்ஜென்ம ஆக்ஷேபம்தூஷண திக்காரம்நித்திய சீவன சல்லாபம்கடவுள் நிர்ணயம்அர்ச். தேவமாதா சரித்திரம்ஞானோபதேசக் குறிப்பிடம்ஞானோபதேசம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றைவிட சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள், அதிலே ஒன்றுக்குப் பெயர் ‘கிறிஸ்து கீதை’, நான்கு தெலுங்கு நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார். இவா் ஒருமுறை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியுடன் சமய வாதம் செய்தா்ா என்று கூறுவா்.

Thanks to https://ta.wikipedia.org/s/ye

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

Aug 1, 2024, 12:01 PM

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தர்மலிங்கம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி பால்பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் பால்பாண்டியை மறக்க முடியாததால் ஜோதி அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி விடுமுறைக்கு ஊருக்கு வந்த தர்மலிங்கம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திட்டமிட்டு வேனை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனைவி ஜோதி, கொலைக்கு உதவியாக இருந்த 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

thanks to asianet news tamil