• Friday 29 August, 2025 07:42 AM
  • Advertize
  • Aarudhal FM

போதை மருந்து கொடுத்து மாணவனை சீரழித்த ஆசிரியை

மும்பையில், 40 வயது ஆங்கில ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுக்கு மது மற்றும் மாத்திரைகள் கொடுத்து ஓராண்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆண்டு விழாவில் நெருங்கிப் பழகிய ஆசிரியை, தனது தோழியின் உதவியுடன் மாணவனை மயக்கி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் 1,000 கூடுதல் காலியிடங்கள்

சென்னை: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2023-24-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்.9-ம் தேதி அறிவிப்புவெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வரும் 21-ம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுதஉள்ளனர். தற்போது புதிதாக 1,000 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் டிஆர்பி மூலம் நிரப்பப்படும் மொத்த காலி ணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக அதிகரித்துள்ளது.