• Monday 3 November, 2025 07:43 AM
  • Advertize
  • Aarudhal FM

கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாளுக்கான சிறப்பு பிரார்த்தனை

பரமன்குறிச்சி பூரண கிருபை ஏ.ஜி. சபையில், நவம்பர் 2, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வழக்கமான ஆராதனையின் போது, “கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாளுக்கான சிறப்பு ஜெப நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த ஆன்மீக முக்கியத்துவமிக்க நிகழ்வில் சபையின் தலைமை போதகர் Rev. A. பெமிலிட்டன் அவர்கள் செய்தித்தாள் ஊழியத்திற்காக சிறப்பு ஜெபத்தை முன்னின்று நடத்தினார். ஜெபத்தின் போது அவர், “இந்த ஊடக ஊழியம் தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒரு சக்தியான கருவியாக பயன்படட்டும். பத்திரிகையின் வழியாக உண்மை செய்திகளும் சுவிசேஷ ஒளியும் பலரது வாழ்க்கைகளிலும் வெளிச்சம் தரட்டும்” என ஆர்வமுடன் வேண்டினார்.ஜெப நேரத்தில் கிங்டம் நெட்வொர்க் அலுவலக பணியாளரும் சபையின் உதவி போதகருமான Pastor. B. கிருபன் யோசுவா அவர்கள் அருகில் இணைந்து, தேவனுடைய கிருபையினால் இந்த ஊடக ஊழியம் தொடங்கி இன்று வரை பல பகுதிகளில் ஆசிர்வாதமாக இயங்கி வருவதைக் குறித்து சாட்சியமளித்தார். அவர் மேலும், “இந்த ஊடகப் பணிகள் மானிடப் புகழுக்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காகவே” என வலியுறுத்தி, அனைவரும் இணைந்து ஜெபிக்க ஊக்கமளித்தார்.சபை விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாள் ஒவ்வொரு ஆசிரியர், ரிப்போர்டர், மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவனுடைய பாதுகாப்பு நிலைத்திருக்க வேண்டும் என மனமார்ந்த ஜெபம் செய்தனர். அதேபோல, செய்தித்தாள் வழியாக சமூக நலன், உண்மை செய்திகள், கிறிஸ்தவ மதிப்புகள், மற்றும் சமாதானம் பரவ வேண்டும் என்பதற்காகவும் அனைவரும் வேண்டினர்.ஜெபத்தின் முடிவில், சபை தலைமை போதகர் Rev. A. பெமிலிட்டன் அவர்கள் செய்தித்தாள் பிரதியை உயர்த்திப் பிடித்து, தேவனுடைய ஆசீர்வாதத்துடன் அர்ப்பணித்து, “இந்த பத்திரிகை தமிழகம் முழுவதும் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி வல்லமையுடன் பயன்படட்டும்” என்று இறுதி ஆசீர்வாத ஜெபம் செய்தார்.