• Saturday 30 August, 2025 04:00 AM
  • Advertize
  • Aarudhal FM

நான் பரிசுத்தமானவன் எனக்கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன்.

சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும் போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் ரெஜிமோன்.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிச்சென்று தனது உறவினர்களிடமும், போலீஸிடமும் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரெஜிமோனை கைது செய்துள்ள நிலையில், அவர் சபையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்து கோயிலாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்

ராஜஸ்தான் கிராம மக்கள் மீண்டும் இந்துக்களாக மாறியதால் கோயிலாக மாறிய தேவாலயம்

அர்ச்சகராக மாறிய கிறிஸ்தவ மத போதகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக் கள் அதிகளவில் வசிக்கின்றனர்.கவுதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் (சர்ச்) கட்டி பிரார்த்தனை செய்து வந் துள்ளார்.இந்த சூழ்நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதையடுத்து, தேவாலயத் துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறி யீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.இந்நிலையில், அந்த கோயி லில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. முன்னதாக, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட் டனர். கிறிஸ்தவ மத போதக ராக இருந்த கவுதம், இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

SELF CARE QUESTIONNAIR

Research shows that people who take time to recharge and restore are more creative happier and more successful. This questionnaire will help you identify the areas of your life that are well-tended, and those that could use more time and attention. This is not meant to be a diagnostic assessment. Instead, it is a tool to help you see what you are doing to care for yourself. There are no right or wrong answers to these questions and some of them may require a bit of thought. Take your time and answer each question to the best of your ability based on your self-care practices right now.

For the following question please rank each item on a scale of 0-50-Never1-Rarely2-sometimes3-often4-Regularly5-Always

Physical Wellbeing – How often do you:

1. Eat a whole foods-based diet rich in colourful fruits and vegetables, drink enough water எல்லா வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், தேவையாள தன்னீர் எடுத்து கொள்கிறீர்களா?

2. Exercise for more than 20 minutes தினமும் உடற்பயிற்சி 20 நிமிடத்திற்கு மேல் செய்கிறீர்களா?

3. Wake feeling refreshed from sleep தூக்கத்திலிருந்து புத்துனர்ச்சியுடன் எழுந்திருக்கிறீர்களா?

4. Engage in stress-reducing activities (excluding TV or screen time) மன அழுத்தத்தை குறைக்கும் காரியங்களில் ஈடுபடுத்தி கொள்ளுகிறீர்களா? இவை தவிர (mobile tv, laptop )

5. Spend time in nature.‌ இயற்கையோடு நேரம் செலவு பண்ணுகிறீர்களா?

Emotional Wellbeing – Do You:

1. Give and receive affection regularly? பிறருக்கு அன்பு காட்டுவதும், பிறர் உங்களுக்கு அன்பு காட்டுவதும் வழக்கமாக இருக்கிறதா?

2. Feel gratitude on a daily basis? தினமும் நன்றியுணர்வை உணர்கிறீர்களா?

3. Find meaning in life even during difficult times? கடினமான காலங்களிலும் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டறிய முடிகிறதா?

4. Treat yourself with kindness? உங்களை அன்புடன் நடத்துகிறீர்களா?

5. Remember to make your dreams and goals a priority? உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் முக்கியத்துவப்படுத்த மறக்காமல் இருக்கிறீர்களா?

Ministry life-Do you

1. Find a sense of meaning and enjoyment in your work? உங்கள் வேலையில் தொழில் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் காண்கிறீர்களா?

2. Empathize and connect with believers, new people and co-pastors? விசுவாசிகள் புதிய மக்கள் மற்றும் சக போதகர்களுடன் உணர்வுகளை புரிந்து தொடர்பு கொள்ளுகிறீர்களா?

3. Have confidence in your ability to address challenges in your ministry life? உங்கள் ஊழிய வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் திறனில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா ?

4. Have someone you can rely on if you need help or guidance? உங்களுக்கு உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் நீங்கள் நம்பக்ககூடிய ஒருவர் இருக்கிறார்களா?

5. Take vacation or holiday breaks to allow for some down time? சோர்வான தளர்ந்த நேரங்களில் விடுமுறை அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளுகிறீர்களா?

Social life-Do you

1. Have a dependable person who listens to you? உங்கள் பேச்சைக் கேட்கும் நம்பகமான நபர் இருக்கிறாரா?

2. Get enough social time with people who make you happy? உங்களை மகிழ்விப்பவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுகிறீர்களா?

3. Spend time with people who make you laugh? உங்களை சிரிக்க வைப்பவர்களுடன் நேரத்தை செலவிடுகிறீர்களா?

4. Have the ability to comfortably say no? இல்லை அல்லது இயலாது என்று சொல்லும் திறன் உள்ளதா?

5. Do something fun with family or fiends at least once a week? வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவு பண்ணுவதுண்டா?

6. Feel like your personal life brings balance to your professional life? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கொண்டு உங்கள் அலுவலக வாழ்க்கையை சம நிலையாக வைத்திருக்க முடிகிறதா?

7. Feel comfortable asking for help when you need it? உங்களுக்கு உதவி தேவைபடுகிறபோது மற்றவர்களிடம் தயக்கமில்லாமல் கேட்க முடிகிறதா?

The higher the score, the better you may be at taking time for self-care and wellness in each aspect of your life. Trying to improve your scores can help creat more balance in your life.Consider items on which you scored 3 or lower. How can you modify your behaviour to improve your self-care practices? What goals might you need to set in order to make these changes?

இவர்களை விட்டு விலகுங்கள் அது உங்களுக்கு நல்லது

கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும்

மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவனறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேசத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்

இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.2 தீமோத்தேயு 3:1-5

இன்றைய கிறிஸ்தவத்தில் இவ்வசனம் 100% அப்படியே நிறைவேறிவிட்டதை நாம் பார்த்து வருகிறோம்.ஆக, இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள். அது உங்களுக்கு நல்லது.

நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன்

இயேசுவே ஒளியானவர் – அவரே வழியானவர்

அவரிடம் ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்

வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்

கடவுளைச் சார்ந்தவன்

கடவுளைச் சார்ந்தவன்

கடவுளுக்குச் செவி கொடுப்பான்

சார மறப்பவன்

சாரமற்றுப்போகிறான்

சார்ந்திருப்போம்

சார்பாய் இருப்போம்

ஆண்களுடைய உடையை பெண்கள் அணியக் கூடாதா?

ஆண்களுடைய உடையை பெண்கள் அணியக் கூடாதா?

1) உபாகமம் 22:5 வசனத்தில் பெண்கள் ஆண்களுடைய உடையையும், ஆண்கள் பெண்களுடைய உடையையும் அணியக் கூடாது என்று வேதம் சொல்கிறது. முதலாவது இந்த வசனம் எதற்காக யாருக்காக எப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு பெண்கள் அணியும் சில உடைகளுக்கு எதிராக சில ஊழியக்காரர்கள் இந்த வசனத்தை பயன்படுத்துகின்றனர்.

2) அநேக சபைகளில் வெளிப்புறமான பாரம்பரிய காரியங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மீசை வைத்தால் ஊழியக்காரனாக அங்கிகரிக்க மாட்டார்கள். வெள்ளை உடை அணியவில்லையென்றால் பிரசங்கம் பண்ண அனுமதிக்க மாட்டார்கள். கையில் மோதிரம் போட்டிருந்தால் கழற்ற சொல்லி விடுவார்கள். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இல்லாத பாரம்பரியங்களை சபையில் கடைபிடிக்க சொல்கிறார்கள். மேல் சொல்லப்பட்ட உடை விஷயத்தில் வைராக்கியமாக இருக்கும் ஊழியக்காரர்கள் அதே அதிகாரத்தின் 12ம் வசனத்தில் நீ தரித்து கொண்டிருக்கிற மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டு பண்ணுவாயாக என்ற வசனத்தின்படி தொங்கல்களை உண்டு பண்ணி தாங்களும் கடைப்பிடித்து தங்கள் சபை ஜனங்களையும் கடைபிடிக்க சொல்வார்களா?

3) இன்றைக்கு பல தேசங்களில் வேறுபட்ட பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கிறது. குளிர் தேசங்களில் மைனஸ் வெப்ப நிலை இருக்கும் பகுதிகளில் சேலை அணிய முடியாது. அங்கு போகும் போது குளிர் தாங்கும் படிக்கு ஆண்களை போல தான் உடை அணிகிறார்கள். சில தேசங்களில் ஆண்களின் உடையும் பெண்களின் உடையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. சில தேசங்களில் பெண்களின் உடை இன்னொரு தேசத்தில் ஆண்களுடைய உடையாக இருக்கிறது. இப்படி தேசத்துக்கு தேசம் மாறுபட்ட கலாச்சாரம் இருக்கிறது. உதாரணமாக கேரளாவில் சில பகுதிகளில் பெண்கள் லுங்கி அணிந்து பிளவுஸ் அணிந்திருப்பார்கள். அங்கு போகும் நீங்கள் சுவிசேஷம் அறிவிப்பீர்களா அல்லது உடையை மாற்ற சொல்வீர்களா?

4) இயேசு கிறிஸ்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்ற வரவில்லை. நம்மை மாற்றும் படியாக வந்தார். நாம் மனம் திரும்பி இரட்சிக்கப்படும் படியாக வந்தார்.
கனி கொடுங்கள் அப்பொழுது பிதா மகிமைபடுவார் என்றார்.
அவரை போல அவரது சாயலாக மாறும் படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று பவுல் சொன்னார். அதற்காக அவர் அணிந்தது போல உடை அணிய வேண்டுமா? ஆனால் சில ஊழியக்காரர்கள் உங்களின் வெளிப்புறத்தையே மாற்றுவதற்கு படாத பாடு படுகின்றனர்.
என்றைக்காவது இந்த பிரசங்கிகள் உங்களை பார்த்து இயேசுவை போல உலகத்துக்கு ஒளியாக இருக்கிறாயா? கனி கொடுக்கிறாயா? தீமையை சகிக்கிறாயா? பரிசுத்தமாக தேவனுக்கு முன்பாக சாட்சியாக வாழ்கிறாயா என்று உங்களை பார்த்து கேட்டிருக்கிறார்களா? முக்கியமாக “நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்களா?” – என்று கேட்கிறார்களா?

5) தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோல் உடையை கொடுத்தார். எனவே முதன் முறையாக தேவன் மனிதனுக்கு கொடுத்த தோல் உடையை எல்லாரும் அணிய வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆலயத்துக்கு போகும் போது நம் நடையை காத்து கொள்ள வேண்டும். பரிசுத்த அலங்காரத்தோடே அதாவது உள்ளேயும் வெளியேயும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். நம்முடைய உடை பிறருக்கு இடறலை உண்டு பண்ண கூடாது. தேவன் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு நமக்கு இருக்குமானால் நாம் தகுதியான உடையை அணிவோம்.
ஆலயத்திலும் சரி பொது இடத்திலும் சரி ஒரு பெண் உடை விஷயத்தில் தேவனுக்கு பிரியமானவளாய் இருக்க வேண்டும்.

6) ஒரு முறை ஒரு போதகர், தன் சபையில் ஒரு பெண், சுடிதார் அணிந்து கொண்டு வந்ததற்காக அந்த பெண்ணை எல்லாருடைய முன்னிலையிலும் திட்டி தீர்த்தார்.
சேலை அணிந்து வர வேண்டும் என்று கட்டளையிட்டார். சுடிதார் அணிந்து விட்டு வந்தால் communion தர மாட்டேன் என்றார். ஒரு ஊழியக்காரர் சுடிதார் ஆபாசமான உடை என்று சொல்கிறார். அதாவது சேலையை விட சுடிதார் முழு கவனத்திற்குரியது. பிரச்சனை என்னவென்றால் சிலரது பார்வை சரியில்லை. நம்முடைய கண் தெளிவாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

7) ஒரு முறை ஒரு சபையில் பிரசங்கம் பண்ண வந்த ஒரு போதகர் பிரசங்கத்தின் நடுவே Pant, shirt அணிந்திருந்த ஒரு பெண்ணை திட்ட ஆரம்பித்தார். எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
ஆராதனை முடிந்தவுடன் பார்த்தால் அந்த பெண் 5 ம் வகுப்பு படிக்கும் சின்ன பெண். உடனே அந்த போதகர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

8) உங்கள் பிள்ளைகளை school க்கு அனுப்பினால் இரட்டை சடை பின்னி school க்கு வர சொல்வார்கள். மயிரை பின்னுதல்… என்ற உபதேசத்தின் படி அது தவறு தானே.
School uniform சுடிதார் தானே. உங்கள் எண்ணங்களின் படி சுடிதார் தகுதியான உடை அல்லவே. அநேக Engineering கல்லூரிகளில் ஆண்களை போல பெண்களும் Pant shirt போடும்படியாக சீருடை வைத்திருக்கிறார்கள். ஆண்களுடைய உடையை எப்படி பெண்கள் அணியலாம்? Science படித்தால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று வேதாகமத்துக்கு புறம்பாக போதிப்பார்கள். தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு அந்த முடிவுக்கு வந்துவிடுவார்கள்!
வேலைக்கு அனுப்பினால் பெரும்பாலான வேலைகளில் ஆண்களின் உடை மாதிரி பெண்கள் உடை அணிய வேண்டிய சூழ்நிலை.
ஆண்களின் உடையை பெண்கள் அணிய கூடாது என்பது உங்கள் உபதேசத்தின் படி தவறான காரியம். எனவே உங்க பிள்ளைகளை வீட்டிலே வைத்து கொள்ளுங்கள். அவர்கள் சமயலறையில் இருப்பது தான் உங்கள் கொள்கைப்படி சரியானது.

9) சிலபோதகர்கள் தங்கள் சபைகளில் மருந்து எடுக்க கூடாது, மேலும் அது அடிப்படை விசுவாசத்துக்கு எதிரானது என்று சபையில் போதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகள் எந்த மருத்துவ சம்பந்தமான படிப்பும் படிக்க கூடாது என்று சொல்ல மாட்டார்கள். மருத்துவ அறிவியல் பற்றிய ஞானத்தை மனிதனுக்கு கொடுத்தது தேவன் தானே. இன்றைய நாள்களில் இவர்களது கொள்கை விபரீதத்தினால் பல குடும்பங்களில் வீம்புக்காக மருந்து எடுக்காமல் இருந்த பலர் மரணமடைந்திருக்கிறார்கள். இது தேவ நாமத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மனுஷரால் கூடாதது தேவனால் கூடும் என்ற விசுவாச வார்த்தையின் படி மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களை, அவர்களுக்காக ஜெபித்த போது தேவன் சுகமாக்கியிருக்கிறார்.

10) இன்றைக்கு ஜனங்களை வெளிப்புறமான பாரம்பரியத்துக்குள்ளாகவும் தங்கள் சபை சட்ட திட்டத்துக்குள்ளாகவும் நடத்தும் ஊழியக்காரர்கள் வேதாகமத்தில் சில வசனங்கள் எதற்காக எந்த காலக்கட்டத்தில் எந்த சூழ்நிலையில் யாருக்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். லூக்கா 24:45 ன் படி வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி அவர்கள் மனதை தேவன் திறப்பாராக.
அந்த நாள்களில் அஸ்தார்த் என்ற கடவுளை வணங்குகிற ஆண்களும் பெண்களும் தங்கள் உடைகளை ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து கொண்டு அந்த தெய்வத்தை ஆராதித்தார்கள்.
அந்த நாள்களில் இச்சையின் நிமித்தமாக அருவருப்பை நடப்பிக்கும் படி ஆண்களும் பெண்களும் பிறர் அணிந்த வியர்வை கலந்த உடையை அணிந்து கொண்டார்கள். தாவீதும் யோனத்தானும் தங்கள் அணிந்திருந்த வஸ்திரங்களை ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து கொண்டு உடன்படிக்கை பண்ணி கொண்டார்கள். இதற்கு ஆவிக்குறிய அர்த்தம் உண்டு.
மன நோயால் பாதிக்கப்பட்ட சில ஆண்கள், பெண்கள் அணிந்த உள் ஆடையை திருடி அணிந்து கொள்வார்கள். அதற்கு Transvetism.
என்று பெயர். அந்த நாள்களில் கானானிய பெண்கள் ஆண்கள் அணிந்த உடைகளை இச்சையின் நிமித்தம் அணிந்து கொண்டார்கள்.
சீர்திருத்த காலத்துக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கலாச்சாரத்தின்படியும் ஒழுங்கின்படியும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தேவன் பல ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கொடுத்திருந்தார். அந்த நாள்களில் கொடுக்கப்பட்ட பல ஆலோசனைகள் யூத பாரம்பரியத்தையும் யூத கலாச்சாரத்தையும் சார்ந்து கொடுக்கப்பட்டது. பிற இனத்தவர்களின் அருவருப்பானகாரியங்களை இஸ்ரவேல் ஜனங்களை கைக்கொள்ள கூடாது என்ற நோக்கத்துக்காகவும் தேவன் அவர்களுக்கு ஆலோசனைகளை கொடுத்தார்.

11) இன்றைய நாள்களில் சில அதிக பிரசங்கிகள் இந்த ஆலோசனைகளை பிடித்து கொண்டு அது எந்த நோக்கத்துக்காக சொல்லப்பட்டது எதற்காக சொல்லப்பட்டது என்பதை அறியாமல் ஜனங்களை நிர்பந்தம் பண்ணி குழப்பி விடுகிறார்கள்.
இன்றைக்கு செவிலியர்கள், விமானத்தில் பணிபுரிகிறவர்கள், போலீஸ் மற்றும் பல வேலைகளை செய்கிற பெண்களின் சீருடைகள் ஆண்கள் அணியும் உடையின் மாதிரியே தான். ஊழியக்காரர்களே உங்க கொள்கைப்படி அது தவறானால் இப்படிபட்ட வேலைக்கு பெண்கள் போகக்கூடாதா?

12) தேவன் அவர்களை அனுமதிக்க மாட்டாரா அல்லது நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களா?
வேதாகமத்தின் படி தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற அலங்காரம் இருதயத்தில் மறைந்திருக்கும் சாந்தமும் அமைதலுள்ள ஆவியும்.
மாயக்காரனே வெளிப்புறம் சுத்தமாகும் படி பாத்திரத்தின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு என்று அந்த நாள்களில் வெளிப்புறமான பாரம்பரியத்தை முக்கியப்படுத்தி கொண்டிருந்த வேதபாரகர்களை பார்த்து தான் இயேசு கிறிஸ்து இப்படியாக கடிந்து கொண்டார். அவர்களை பார்த்து தான் குருடருக்கு வழிக்காட்டும் குருடர்களே என்றார். எனவே இந்த கடைசி நாள்களில் ஜனங்களை உங்கள் பாரம்பரியத்துக்கு நேராக நடத்தாமல் சத்தியத்துக்கு நேராக நடத்துங்கள். இயேசு கிறிஸ்து சொன்னப்படி உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனங்களை அவமாக்காதீர்கள். நன்றி!

நான் சேவிக்கிற கர்த்தர்

அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;

1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்.

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

3.முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.

4.பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்

சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்

யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

6.உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

கர்த்தரை சேவித்தால் கிடைக்கும் நன்மைகள்

1. நிச்சயமாகவே பலன் உண்டாகும்

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2.பிதாவானவர் கனம்பண்ணுவார்

யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

3. கர்த்தர் விடுவிப்பார்

தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
வட இந்திய ஊழியத்திற்க்கு உதவ வாஞ்சையுள்ளோர் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
Mobile no – 9437328604

வீட்டிலிருந்தபடியே வேதாகமத்தை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு – வல்லமை இறையியல் செமினரி

அங்கீகாரமும் & அந்தஸ்தும்: (Accreditation & Affiliation)

நமது வேதபாடசாலை தேவனுடைய அளவற்ற கிருபையினால் கீழ்கண்ட அங்கீகாரங்களையும் & சிலாக்கியங்களையும் பெற்றுள்ளது.

1) நமது இறையியல் செமினரியானது வல்லமை எழுப்புதல் ஊழியங்கள் அறக்கட்டளை மற்றும் சர்வதேச தர சான்று பெற்ற தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

2) கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ISO சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள அமைப்பாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

3) இறையியல் அங்கீகாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த வேதபாடசாலையில் யார் பயிலலாம்? (Who can study in this Bible school?)

சபை பாகுபாடின்றி அனைவரும் பயிலலாம். ஆவிக்குரிய அனுபவமும், ஊழிய வாஞ்சையும் மிக அவசிய -மானதாக கருத்தில் கொள்ளப்படும்.

1) ஆண், பெண் இருபாலருக்குமான ஆன்லைன் கல்வி

2) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படிக்க அனுமதி.

3) வேதாகமத்தை முறையாக கற்க விரும்புவோர், ஊழிய வாஞ்சையுள்ளவர்கள், முழுநேர ஊழியர்கள் படிக்கலாம்.

4) முழு நேர ஊழிய அழைப்பு பெற்று முறையாக வேதாகம கல்லூரிகளில் தங்கி பயிலும் வாய்ப்பு கிடைக்காதவர் -கள் படிக்கலாம். (தங்கி படிக்கும் வாய்ப்புகள் இருக்குமானால் சிரமமின்றி எங்களை மறந்துவிட்டு அத்தகைய கல்லூரிகளில் போய் தங்கி படிக்கவும்)

5) பகுதி நேரமாக சபையோடு இணைந்து ஊழியம் செய்பவர்கள் (சிறுவர் & வாலிபர் ஊழியங்கள், ஜெபக்குழுக்கள், பராமரிப்பு குழுக்களில் ஈடுபடுவோர், சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடுவோர் அவர்களது சபை போதகரின் பரிந்துரையின் பேரில் இந்த வேதபாடசாலையில் படிக்கலாம்.

நமது வேத பாடசாலையின் கூடுதல் விவரங்கள், போதனை முறைகள் மற்றும் கல்வி கட்டணம் வங்கி முகவரி போன்றவற்றை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அறிக்கை லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்→

1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22

2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6

3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14

4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26

5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2

6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8

7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5