• Friday 29 August, 2025 08:32 AM
  • Advertize
  • Aarudhal FM

தேவனால் பிறந்தவனின் அடையாளம்

( 1 யோவான் நிருபத்திலிருந்து ) தேவனால் பிறந்தவர்களை நாம் எப்படி அடையாளம் காண முடியும் ?
அப்.யோவான் தனது முதலாவது நிருபத்தில் “தேவனால் பிறந்தவனின் 7 அடையாளங்களை” குறிப்பிடுகிறார்.

1. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பான். 5:1

2. நீதி செய்கிறவனாயிருப்பான். 2:29, 3:10

 3. பாவம் செய்யமாட்டான். 3:8, 5:18

4. தேவ வார்த்தைக்கு செவிகொடுப்பான். 4:6

 5. அன்புள்ளவனாயிருப்பான். 4:7

 6. உலகத்தை ஜெயிக்கிறவனாயிருப்பான். 5:4, 4:4

 7. தன்னை காக்கிறவனாயிருப்பான். 5:18

Thanks to Bro. Vivek

பரத்திலிருந்து வருகிற ஞானம்

தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் தேவஞானமுள்ளவர்களாய் வாழ வேண்டியது அவசியம். தேவஞானமென்பது லெளகிகமானதல்ல, அது பரத்திலிருந்து இறங்கிவருவதாகும். அந்த பரமஞானத்தின் 7 தன்மைகளை யாக்கோபு தனது புத்தகத்தில் விளக்குகிறார்.

பரத்திலிருந்து வருகிற ஞானம். யாக் 3:17

1. சுத்தமுள்ளது
2. சமாதானமுள்ளது
3. சாந்தமுள்ளது
4. இணக்கமுள்ளது
5. இரக்கமும், நற்கனிகளும் நிறைந்தது
6. பட்சபாதமில்லாதது
7. மாயமற்றது.

Thanks to Bro. vivekananth

ஒரேதரம் செய்துமுடித்தார்

ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27)
லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும், நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

கிறிஸ்து எதை ஒரேதரம் செய்து முடித்தார்?

1. ஒரேதரம்… பாடுபடும்படி இந்த பூமியில் வெளிப்பட்டார். (எபி 9:26, 25)
2. ஒரேதரம்… எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்தார். (எபி 9:28)
3. ஒரேதரம்…  தம்மை தாமே பலியிட்டார்.  (எபி 7:27)
4. ஒரேதரம்… நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். (எபி 10:10)
5. ஒரேதரம்… மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நம்மையும் அந்த சிலாக்கியத்திற்கு உட்படுத்தினார். (எபி 9:12)
6. ஒரேதரம்… நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணினார். (எபி 9:12)
7. இனி இரண்டாந்தரம்… தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். (எபி 9:28)

Thanks to கே. விவேகானந்த்