• Monday 9 December, 2024 11:22 PM
  • Advertize
  • Aarudhal FM

ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்

ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் ! ‌‌ – டாக்டர். பிரதீப் அகர்வால்……கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !…ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ? நான் ஒரு மருத்துவர்; அதனால்தான் “அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்…!”மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ! எனில், மருத்துவர் கூறுகிறார் – Streptokinase ஊசி போடுங்கள்… என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்… என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ – முதல் 900/- வரை மட்டுமே. ஆனால் MRP ரூ. 9,000/- !… .அப்பாவி மக்கள்,  என்ன செய்வார்கள் ? ….டைபாய்டு வந்தது… எனில், மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் ! மொத்த விற்பனை விலை ரூ 25/- … ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்… மக்கள் என்ன செய்வார்கள் ??சிறுநீரகம் செயலிழந்து விட்டது..மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.., டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக ரூ.1800/- !அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது … ஏன் ?மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது !! அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார். மக்கள் என்ன செய்வார்கள் ??நோய் தொற்று ஏற்பட்டு விட்டது..! மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ.540/- அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ. 150/- மற்றும் ஜெனரிக் விலை ரூ. 45 /– ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம்.., என்பார்; மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்… அதாவது 540/- ? மக்கள் என்ன செய்வார்கள் ??சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது., அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது ! எனவே, ரூ. 750/- யில், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய் !எம்ஆர்ஐயில், டாக்டர் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/= வரை ! டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது!மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது ! மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளையிடுகின்றன !. .. இருவருமே அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறார்கள்…!!இதில், மிகப்பெரிய கேள்வி…ஊடகங்கள் இதைக் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்த காட்டுகின்றன ?…. . குழியில் விழுந்த இளவரசன்.., டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட், இதையெல்லாம் காட்டுகிறார்கள். ஆனால்… டாக்டர், மருத்துவமனை மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்ட வில்லை ?….. ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ?பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும் ?இந்த லாபி…. அரசாங்கத்தையே…. கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா ? ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன் ? ரூ. 20/- கூடுதலாக கேட்டால் ஆட்டோரிக்க்ஷாகாரரிடம், மக்கள் எகிறுவார்கள்,..! ஆனால், கொள்ளையிடும் டாக்டரை என்ன செய்வார்கள் ???இது உண்மை என்று நீங்கள் நினைத்தால், அனைவருக்கும் அனுப்புங்கள்! விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்; மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் ஆதரவை வழங்குங்கள் !!!….

https://www.facebook.com/DrPardeep-Aggarwal-381141815344043/

ஊட்டியில் அணை

TN ஊட்டியில் அணை* 🙏Please share atleast 1000 people so as to reach CM Desk👍🤝தமிழகத்திற்கு விடிவு ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை :அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா!தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கைஅணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் எந்நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிக்கக்கூடும்மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படாலம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இன்று பகல் 12 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 62,870 கன அடியாக உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டிள்ளது
மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் எந்நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு 6 மாவட்ட ஆட்சியர் உட்பட 15 துறைகளுக்கு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா திட்டத்தை முடிக்காததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் போது, அணையில் இருந்து திறக்கப்படும் உபர்நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க,
கடந்த அதிமுக ஆட்சியில் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நீரேற்று நிலையங்கள் மூலம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை எடுத்து, அதை குழாய் மூலம் கொண்டு சென்று, சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரம்பும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், முதற்கட்டமாக திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலைய பணிகள் முடிவடைந்ததால், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சரபங்கா திட்டத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்கிவைத்ததாக, எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

கேரளத்தின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்

30 ஜூலை 2024, 6:59 pm

கேரளத்தின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தொழிலாளி பலியானார். கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
காணாமல் போன பலரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் கேரள மாநிலத்தின் வயநாட்டை ஒட்டியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் தினமும் வேலைக்காக வயநாடு சென்று வருகின்றனர்.

அப்படிச் சென்றவர்களில் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் பலியானார். அவர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை, சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி நியூஸ்

நீட்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு


29th Jul, 2024 at 11:02 PM
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், நிகழாண்டு நடைபெற்ற நீட்-யுஜி தோ்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை(ஜூலை 26) வெளியிட்டது.

இதனையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில், 1.10 லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

மேலும், பல் மருத்துவப் படிப்புகளுக்கான 21,000 இடங்களும், ஆயுஷ் மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான இடங்களும் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. இந்த தகவலை தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலர் டாக்டர் பி. ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து அறிய..
அனைத்திந்திய இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள 15 சதவிகித இடங்களும், எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மெர், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தினமணி நியூஸ்

ICAI CA Results: சி.ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?


29 Jul 2024 18:57
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) சி.ஏ (CA) பவுண்டேசன் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. icai.nic.in மற்றும் icai.org இணையதளங்களில் ஜூன் 2024 அமர்வுத் தேர்வுக்கான சி.ஏ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். ஜூன் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஜூன் சி.ஏ தேர்வை ஐ.சி.ஏ.ஐ நடத்தியது.

சி.ஏ பவுண்டேசன் தேர்வு முடிவைத் தெரிந்துக்கொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான icai.org அல்லது icai.nic.in என்ற இணையதளப் பக்கங்களில் தங்கள் பதிவு எண்கள் அல்லது கடவுச்சொல் மற்றும் ரோல் எண்களுடன் உள்நுழைய வேண்டும்.

ஒவ்வொரு தாளிலும் 40 மதிப்பெண்கள் மற்றும் நான்கு தாள்களின் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள் சி.ஏ பவுண்டேசன் தேர்வில் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். சி.ஏ தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களைப் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு “டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி” என்ற தகுதி நிலை வழங்கப்படும்.

கடந்த ஆண்டு, 29.99 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அவர்களில் 29.77 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 30.19 சதவீதம் பேர் ஆண்கள். மொத்தம் 137153 பேர் (71966 ஆண்கள் மற்றும் 65187 பெண்கள்) தேர்வெழுதினர், அவர்களில் 41132 பேர் (21728 ஆண்கள் மற்றும் 19404 பெண்கள்) சி.ஏ பவுண்டேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

TN SSLC Results: 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?

TN SSLC Results: 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; செக் செய்வது எப்படி?தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆன்லைனில் ரிசல்ட் எப்படி பார்ப்பது என்பது இங்கே தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் இன்று (ஜூலை 30) எஸ்.எஸ்.எல்.சி துணைத்தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்டது. tnresults.nic.in, dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் துணை தேர்வு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில், இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – tnresults.nic.in

படி 2: முகப்புப்பக்கத்தில் கிடைக்கும் ‘10 ஆம் வகுப்பு SSLC முடிவு 2024’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: உள்நுழைவு சாளரத்தில், தேர்வு எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி (DOB) மற்றும் கொடுக்கப்பட்ட பட உரையை (கேப்ட்சா) உள்ளிடவும்.
படி 4: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது திரையில் உங்கள் மதிப்பெண் பட்டியல் காண்பிக்கப்படும்.

படி 5: பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 அன்று முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் 91.39 சதவீதத்திலிருந்து ஒரு சிறிய அதிகரிப்பு ஆகும் மற்றும் 2022 இல் தேர்ச்சி 90.07 சதவீதமாகும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டமும், அதைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டும் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

மொத்தம் 260 சிறை கைதிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர், அவர்களில் 228 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சிறை கைதிகளின் தேர்ச்சி சதவீதம் 87.69. கடந்த ஆண்டு 42.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இம்முறை, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தெரிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் நியூஸ்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? மாணவர்களுக்கு குட் நியூஸ்

30 Jul 2024 16:37

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் கடந்த வாரம் விநியோகம் செய்யப்பட்டு, தற்போது மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் அல்லது மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; “இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் (Original Mark Certificates) / (Statement of Mark) சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆண்டில் 10 நாட்கள் புத்தக மூட்டைக்கு பை-பை; என்.சி.இ.ஆர்.டி வழிகாட்டுதல் வெளியீடு6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தக பையில்லா தினம் கொண்டு வரப்பட உள்ளது என என்.சி.இ.ஆர்.டி கூறியுள்ளது.

30 Jul 2024 15:02

கல்வியாண்டில் 10 நாட்கள் மாணவர்கள் புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வந்து மற்ற தொழில் மற்றும் அறிவு சார் திறனங்களை கற்றுக் கொள்ள ஊக்குவிக்கப் பட வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி கூறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ல், அனைத்து வகுப்பு மாணவர்களும் கல்வி ஆண்டில் 10 நாட்கள் புத்தக பையில்லா வகுப்பில் பங்கேற்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தக பையில்லா தினங்களை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் புத்தகத்தை தாண்டி பலதரப்பட்ட அறிவுத் திறன்கள் பெறவும், புத்தக அறிவுக்கும்- செயல்பாட்டு அறிவுக்கும் இடையேயான எல்லைகளை குறைக்கும் நோக்கத்துடனும் புத்தக பையில்லா தினம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் மாணவர்களுக்கு தச்சு, மின்சார வேலை, உலோக வேலை, தோட்டக்கலை, மண்பாண்டங்கள் செய்தல் போன்ற கைவினைத் தொழில்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை காண்பித்து சொல்லிக் கொடுக்கலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதை கற்றுக் தர முன்கூட்டியே யோசித்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஓராண்டில் 10 புத்தக பையில்லா நாட்களை பள்ளிக்குத் தகுந்தாற் போல் பிரித்துக் கற்றுக் கொடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

மத்திய தேர்வாணையத்தின் தேர்வை எழுதுபவர்கள் | கோப்புப் படம்

புதுடெல்லி: மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் மற்றும் ஹவில்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு, 2024-ஐ அக்டோபர் – நவம்பரில் கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெறாத சி பிரிவு, பொது மத்திய சேவை, அமைச்சு நிலை அல்லாத பணி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பல்வேறு அரசியல் சட்டப்படியான அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள் / தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் பல்வகைப் பணி ஊழியர் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத்துறை, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆகியவற்றில் ஹவில்தார் பணிக்குப் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதியினரும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள் ஆவர்.

பதவி, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பற்றி 27.06.2024 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளமான ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.07.2024 (23:00 மணி). இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்த கடைசி நாள் 01.08.2024 (23:00மணி). ஆந்திரப்பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, தெலங்கானாவில் 3, புதுச்சேரியில் 1 என 21 மையங்களில் 2024, அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தென்மண்டலத்திற்கான கணினி வழி தேர்வுகள் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.