• Friday 7 November, 2025 12:37 AM
  • Advertize
  • Aarudhal FM

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகையை சேர்ந்த 15 வயது சிறுமி சற்று மனநலம் குன்றியவர். இவரது வளர்ப்புத் தந்தை கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டு பாட்டி ஒருவரிடம், சிறுமி சொல்லியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பாட்டி, சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வளர்ப்புத் தந்தையை பிடித்து, மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.—-

15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், தனது மகளான 15 வயது சிறுமிக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தந்தை சார்லஸ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்..

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கோகிலா பாலியல் தொல்லை அளித்த சார்லஸ் என்பவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தை தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்து கொடுமை

உலகம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியவில்லை. 13 வயது சிறுவன் ஒருவன், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அடிகொப்பகா என்ற இடத்தில் நடந்துள்ளது. வீட்டுக்கு அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த கொடுமையை செய்திருக்கிறான். அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்துவிட்டு, இந்த குற்றத்தை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றோரே கவனிங்க.

உஷார் மக்களே.. இப்படித்தான் ஏமாத்துவாங்க!

சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், எப்படியெல்லாம் மோசடியாளர்கள் ஏமாற்றுவார்கள் என ஒரு லிஸ்ட்டை போலீசார் வெளியிட்டுள்ளனர். • உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக கூறி வீடியோ காலில் பணம் கேட்பார்கள் • 1% வட்டியுடன் லோன் தருகிறோம் என்பார்கள் • வாட்ஸ் அப்பில் SBI REWARDS என வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் திடீரென கால் செய்து OTP கேட்டால் சொல்ல வேண்டாம்.

பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் கூறுவது

பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் சிவராமன் கூறுவது என்ன?
நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம்

காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.

நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.

இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.

அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.

நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.

இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.

அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

மேலும், சைனசிட்டீஸ் இருந்தாலும், ஜுரம், உடல்நலப் பிரச்னை இல்லை என்றால் தலைக்கு குளிக்கலாம் என்கிறார். மேலும், சுக்கு தைலம், நொச்சி தைலம் ஆகியவற்றை தேய்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.

சைனசிட்டீஸ் இருப்பவர்கள் தூதுவலை, கற்பூரவல்லி, வெற்றிலை, மிளகு ஆகியவற்றைப் போட்டு, 2 டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கால் டம்ப்ளராக்கி கசாயம் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவமரான அறிவுறுத்துகிறார். மேலும், மிளகு பாவனம் செய்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதா..?

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதாகிபோன மகாராஷ்ட்ராவில் 10ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன், தனது தந்தையிடம் ஐபோன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். ஏழை விவசாயியான அவனது தந்தையோ, தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, அதை வாங்கி தர மறுத்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் அங்குள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுக் கொள்ள, அதே மரத்தில் தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துவிட்டார். வறுமையிலும் தன்னை படிக்க வைத்த அப்பாவின் அன்பை விட, ஐபோன் பெரிதாகிவிட்டதா?

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1:4
2) உபத்திரவங்களில் – 2 தெச 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6:16
4) வியாதி நேரத்தில் – யாக் 5:15
5) ஜெபிக்கும் போது – மத் 21:21
6) இருதயம் கலங்கும் போது – யோ 14:1

யாரை கனம் பண்ண வேண்டும் ?

1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17

கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம் இலவச உணவு, பயண செலவு

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா: முழு விவரம்

  • பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
  • பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும்.

வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள் கால சிறை ஆகியவையும் விதிக்கப்படும். காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்பு காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும்.பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.

ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்ச்சி மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் சட்டம் முழு வேகத்துடன் கையாளப்படுவதற்கும், அது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகிறது.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை உறுதியாக தடுக்க இந்த சட்டத் திருத்தம் முன் மாதிரியாக இருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளோம். ரெயில் முன்பு தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையை வாங்கி கொடுத்திருக்கிறோம்.

தமிழக அரசின் இது போன்ற பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 2 லட்சத்து 39 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்திருத்தத்தை இன்று நான் தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்