• Thursday 4 September, 2025 10:35 AM
  • Advertize
  • Aarudhal FM

திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்குமரன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி திறந்த நாள் முதல் பள்ளிக்குச் சென்று வரும் ஆகாஷிடம் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் உள்பட பள்ளி பாடங்களை முறையாக படிக்க வேண்டும் மற்ற மாணவர்களை விட ஆகாஷை கடுமையாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் ஆகாஷ் மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளார். இதையடுத்து இன்று (ஜூன் 13) பள்ளியில் ஆசிரியர்களை பார்த்து விபரத்தை கூறுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையிலும் பள்ளி வகுப்பையில் வைத்து மாணவனை பள்ளி ஆசிரியர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் காலை 9.50 மணியளவில் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென ஆகாஷ் கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவன் ஆகாஷை கார் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே வந்த மாணவன் பள்ளியில் அதிக அளவு டார்ச்சர் செய்வதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் சத்யா மற்றும் ஆகாஷின் வகுப்பு ஆசிரியர் பொன்ராணி உள்பட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. தேர்வர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ‘NEET UG 2025 RESULT’ என்ற லிங்க்கை கிளிக் செய்து உங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு முடிவுகளை அறியலாம். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

கோவிலில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

விருதுநகர் மாவட்டம், திருச்சுளி தாலுகா, கல்லுமடை கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தபோது, அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவுப் பொருளில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

விவரங்கள்:

  • விஷயம்:விருதுநகர் மாவட்டம், திருச்சுளி தாலுகா, கல்லுமடை கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தபோது அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
  • விசாரணை:உணவுப் பொருளில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 
  • சிகிச்சை:பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
  • கூடுதல் விவரம்:மானாமதுரையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மீன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டபோது, ​​இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்தில் கோயில் திருவிழாவை கொண்டாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அங்கன்வாடியில் குழந்தைக்கு தாத்தா கொடுத்த பாலியல் தொல்லை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அங்கன்வாடி பள்ளியில் நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

பிள்ளையார் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி – வனிதா தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை, ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் நான்கு வயது பெண் குழந்தையை தார்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் சேர்த்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு அங்கன்வாடியில் இருந்து அழைத்துவரப்பட்ட குழந்தை அன்று இரவு திடீரென அழுதுள்ளது. பெற்றோர் விசாரித்ததில் அங்கன்வாடி பள்ளியில் இருந்த ஒரு தாத்தா தன்னை பல்வேறு பகுதியில் கடித்து வைத்ததாக குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பெற்றோர் அங்கன்வாடி பள்ளிக்கு சென்று அங்குள்ள ஊழியர் மற்றும் ஆசிரியருடன் தனது குழந்தைக்கு நேர்ந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து சம்பவத்தை கேள்விப்பட்டு பள்ளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கன்வாடி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பற்றி விசாரித்தனர். நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் மற்ற பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா பாதிப்பு 7121 ஆக உயர்வு.. ஒரே நாளில் 6 பேர் பலி

கொரோனா பாதிப்பு 7121 ஆக உயர்வு.. ஒரே நாளில் 6 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 7,121 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 306 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத கொரோனா என அரசு தெரிவித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் மெல்ல உயர்வதால், மீண்டும் லாக்டவுன் வருமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன்

இயேசுவே ஒளியானவர் – அவரே வழியானவர்

அவரிடம் ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்

வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்

கடவுளைச் சார்ந்தவன்

கடவுளைச் சார்ந்தவன்

கடவுளுக்குச் செவி கொடுப்பான்

சார மறப்பவன்

சாரமற்றுப்போகிறான்

சார்ந்திருப்போம்

சார்பாய் இருப்போம்

ஆண்களுடைய உடையை பெண்கள் அணியக் கூடாதா?

ஆண்களுடைய உடையை பெண்கள் அணியக் கூடாதா?

1) உபாகமம் 22:5 வசனத்தில் பெண்கள் ஆண்களுடைய உடையையும், ஆண்கள் பெண்களுடைய உடையையும் அணியக் கூடாது என்று வேதம் சொல்கிறது. முதலாவது இந்த வசனம் எதற்காக யாருக்காக எப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு பெண்கள் அணியும் சில உடைகளுக்கு எதிராக சில ஊழியக்காரர்கள் இந்த வசனத்தை பயன்படுத்துகின்றனர்.

2) அநேக சபைகளில் வெளிப்புறமான பாரம்பரிய காரியங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மீசை வைத்தால் ஊழியக்காரனாக அங்கிகரிக்க மாட்டார்கள். வெள்ளை உடை அணியவில்லையென்றால் பிரசங்கம் பண்ண அனுமதிக்க மாட்டார்கள். கையில் மோதிரம் போட்டிருந்தால் கழற்ற சொல்லி விடுவார்கள். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இல்லாத பாரம்பரியங்களை சபையில் கடைபிடிக்க சொல்கிறார்கள். மேல் சொல்லப்பட்ட உடை விஷயத்தில் வைராக்கியமாக இருக்கும் ஊழியக்காரர்கள் அதே அதிகாரத்தின் 12ம் வசனத்தில் நீ தரித்து கொண்டிருக்கிற மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டு பண்ணுவாயாக என்ற வசனத்தின்படி தொங்கல்களை உண்டு பண்ணி தாங்களும் கடைப்பிடித்து தங்கள் சபை ஜனங்களையும் கடைபிடிக்க சொல்வார்களா?

3) இன்றைக்கு பல தேசங்களில் வேறுபட்ட பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கிறது. குளிர் தேசங்களில் மைனஸ் வெப்ப நிலை இருக்கும் பகுதிகளில் சேலை அணிய முடியாது. அங்கு போகும் போது குளிர் தாங்கும் படிக்கு ஆண்களை போல தான் உடை அணிகிறார்கள். சில தேசங்களில் ஆண்களின் உடையும் பெண்களின் உடையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. சில தேசங்களில் பெண்களின் உடை இன்னொரு தேசத்தில் ஆண்களுடைய உடையாக இருக்கிறது. இப்படி தேசத்துக்கு தேசம் மாறுபட்ட கலாச்சாரம் இருக்கிறது. உதாரணமாக கேரளாவில் சில பகுதிகளில் பெண்கள் லுங்கி அணிந்து பிளவுஸ் அணிந்திருப்பார்கள். அங்கு போகும் நீங்கள் சுவிசேஷம் அறிவிப்பீர்களா அல்லது உடையை மாற்ற சொல்வீர்களா?

4) இயேசு கிறிஸ்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்ற வரவில்லை. நம்மை மாற்றும் படியாக வந்தார். நாம் மனம் திரும்பி இரட்சிக்கப்படும் படியாக வந்தார்.
கனி கொடுங்கள் அப்பொழுது பிதா மகிமைபடுவார் என்றார்.
அவரை போல அவரது சாயலாக மாறும் படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று பவுல் சொன்னார். அதற்காக அவர் அணிந்தது போல உடை அணிய வேண்டுமா? ஆனால் சில ஊழியக்காரர்கள் உங்களின் வெளிப்புறத்தையே மாற்றுவதற்கு படாத பாடு படுகின்றனர்.
என்றைக்காவது இந்த பிரசங்கிகள் உங்களை பார்த்து இயேசுவை போல உலகத்துக்கு ஒளியாக இருக்கிறாயா? கனி கொடுக்கிறாயா? தீமையை சகிக்கிறாயா? பரிசுத்தமாக தேவனுக்கு முன்பாக சாட்சியாக வாழ்கிறாயா என்று உங்களை பார்த்து கேட்டிருக்கிறார்களா? முக்கியமாக “நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்களா?” – என்று கேட்கிறார்களா?

5) தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோல் உடையை கொடுத்தார். எனவே முதன் முறையாக தேவன் மனிதனுக்கு கொடுத்த தோல் உடையை எல்லாரும் அணிய வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆலயத்துக்கு போகும் போது நம் நடையை காத்து கொள்ள வேண்டும். பரிசுத்த அலங்காரத்தோடே அதாவது உள்ளேயும் வெளியேயும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். நம்முடைய உடை பிறருக்கு இடறலை உண்டு பண்ண கூடாது. தேவன் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு நமக்கு இருக்குமானால் நாம் தகுதியான உடையை அணிவோம்.
ஆலயத்திலும் சரி பொது இடத்திலும் சரி ஒரு பெண் உடை விஷயத்தில் தேவனுக்கு பிரியமானவளாய் இருக்க வேண்டும்.

6) ஒரு முறை ஒரு போதகர், தன் சபையில் ஒரு பெண், சுடிதார் அணிந்து கொண்டு வந்ததற்காக அந்த பெண்ணை எல்லாருடைய முன்னிலையிலும் திட்டி தீர்த்தார்.
சேலை அணிந்து வர வேண்டும் என்று கட்டளையிட்டார். சுடிதார் அணிந்து விட்டு வந்தால் communion தர மாட்டேன் என்றார். ஒரு ஊழியக்காரர் சுடிதார் ஆபாசமான உடை என்று சொல்கிறார். அதாவது சேலையை விட சுடிதார் முழு கவனத்திற்குரியது. பிரச்சனை என்னவென்றால் சிலரது பார்வை சரியில்லை. நம்முடைய கண் தெளிவாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

7) ஒரு முறை ஒரு சபையில் பிரசங்கம் பண்ண வந்த ஒரு போதகர் பிரசங்கத்தின் நடுவே Pant, shirt அணிந்திருந்த ஒரு பெண்ணை திட்ட ஆரம்பித்தார். எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
ஆராதனை முடிந்தவுடன் பார்த்தால் அந்த பெண் 5 ம் வகுப்பு படிக்கும் சின்ன பெண். உடனே அந்த போதகர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

8) உங்கள் பிள்ளைகளை school க்கு அனுப்பினால் இரட்டை சடை பின்னி school க்கு வர சொல்வார்கள். மயிரை பின்னுதல்… என்ற உபதேசத்தின் படி அது தவறு தானே.
School uniform சுடிதார் தானே. உங்கள் எண்ணங்களின் படி சுடிதார் தகுதியான உடை அல்லவே. அநேக Engineering கல்லூரிகளில் ஆண்களை போல பெண்களும் Pant shirt போடும்படியாக சீருடை வைத்திருக்கிறார்கள். ஆண்களுடைய உடையை எப்படி பெண்கள் அணியலாம்? Science படித்தால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று வேதாகமத்துக்கு புறம்பாக போதிப்பார்கள். தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு அந்த முடிவுக்கு வந்துவிடுவார்கள்!
வேலைக்கு அனுப்பினால் பெரும்பாலான வேலைகளில் ஆண்களின் உடை மாதிரி பெண்கள் உடை அணிய வேண்டிய சூழ்நிலை.
ஆண்களின் உடையை பெண்கள் அணிய கூடாது என்பது உங்கள் உபதேசத்தின் படி தவறான காரியம். எனவே உங்க பிள்ளைகளை வீட்டிலே வைத்து கொள்ளுங்கள். அவர்கள் சமயலறையில் இருப்பது தான் உங்கள் கொள்கைப்படி சரியானது.

9) சிலபோதகர்கள் தங்கள் சபைகளில் மருந்து எடுக்க கூடாது, மேலும் அது அடிப்படை விசுவாசத்துக்கு எதிரானது என்று சபையில் போதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகள் எந்த மருத்துவ சம்பந்தமான படிப்பும் படிக்க கூடாது என்று சொல்ல மாட்டார்கள். மருத்துவ அறிவியல் பற்றிய ஞானத்தை மனிதனுக்கு கொடுத்தது தேவன் தானே. இன்றைய நாள்களில் இவர்களது கொள்கை விபரீதத்தினால் பல குடும்பங்களில் வீம்புக்காக மருந்து எடுக்காமல் இருந்த பலர் மரணமடைந்திருக்கிறார்கள். இது தேவ நாமத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மனுஷரால் கூடாதது தேவனால் கூடும் என்ற விசுவாச வார்த்தையின் படி மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களை, அவர்களுக்காக ஜெபித்த போது தேவன் சுகமாக்கியிருக்கிறார்.

10) இன்றைக்கு ஜனங்களை வெளிப்புறமான பாரம்பரியத்துக்குள்ளாகவும் தங்கள் சபை சட்ட திட்டத்துக்குள்ளாகவும் நடத்தும் ஊழியக்காரர்கள் வேதாகமத்தில் சில வசனங்கள் எதற்காக எந்த காலக்கட்டத்தில் எந்த சூழ்நிலையில் யாருக்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். லூக்கா 24:45 ன் படி வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி அவர்கள் மனதை தேவன் திறப்பாராக.
அந்த நாள்களில் அஸ்தார்த் என்ற கடவுளை வணங்குகிற ஆண்களும் பெண்களும் தங்கள் உடைகளை ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து கொண்டு அந்த தெய்வத்தை ஆராதித்தார்கள்.
அந்த நாள்களில் இச்சையின் நிமித்தமாக அருவருப்பை நடப்பிக்கும் படி ஆண்களும் பெண்களும் பிறர் அணிந்த வியர்வை கலந்த உடையை அணிந்து கொண்டார்கள். தாவீதும் யோனத்தானும் தங்கள் அணிந்திருந்த வஸ்திரங்களை ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து கொண்டு உடன்படிக்கை பண்ணி கொண்டார்கள். இதற்கு ஆவிக்குறிய அர்த்தம் உண்டு.
மன நோயால் பாதிக்கப்பட்ட சில ஆண்கள், பெண்கள் அணிந்த உள் ஆடையை திருடி அணிந்து கொள்வார்கள். அதற்கு Transvetism.
என்று பெயர். அந்த நாள்களில் கானானிய பெண்கள் ஆண்கள் அணிந்த உடைகளை இச்சையின் நிமித்தம் அணிந்து கொண்டார்கள்.
சீர்திருத்த காலத்துக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கலாச்சாரத்தின்படியும் ஒழுங்கின்படியும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தேவன் பல ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கொடுத்திருந்தார். அந்த நாள்களில் கொடுக்கப்பட்ட பல ஆலோசனைகள் யூத பாரம்பரியத்தையும் யூத கலாச்சாரத்தையும் சார்ந்து கொடுக்கப்பட்டது. பிற இனத்தவர்களின் அருவருப்பானகாரியங்களை இஸ்ரவேல் ஜனங்களை கைக்கொள்ள கூடாது என்ற நோக்கத்துக்காகவும் தேவன் அவர்களுக்கு ஆலோசனைகளை கொடுத்தார்.

11) இன்றைய நாள்களில் சில அதிக பிரசங்கிகள் இந்த ஆலோசனைகளை பிடித்து கொண்டு அது எந்த நோக்கத்துக்காக சொல்லப்பட்டது எதற்காக சொல்லப்பட்டது என்பதை அறியாமல் ஜனங்களை நிர்பந்தம் பண்ணி குழப்பி விடுகிறார்கள்.
இன்றைக்கு செவிலியர்கள், விமானத்தில் பணிபுரிகிறவர்கள், போலீஸ் மற்றும் பல வேலைகளை செய்கிற பெண்களின் சீருடைகள் ஆண்கள் அணியும் உடையின் மாதிரியே தான். ஊழியக்காரர்களே உங்க கொள்கைப்படி அது தவறானால் இப்படிபட்ட வேலைக்கு பெண்கள் போகக்கூடாதா?

12) தேவன் அவர்களை அனுமதிக்க மாட்டாரா அல்லது நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களா?
வேதாகமத்தின் படி தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற அலங்காரம் இருதயத்தில் மறைந்திருக்கும் சாந்தமும் அமைதலுள்ள ஆவியும்.
மாயக்காரனே வெளிப்புறம் சுத்தமாகும் படி பாத்திரத்தின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு என்று அந்த நாள்களில் வெளிப்புறமான பாரம்பரியத்தை முக்கியப்படுத்தி கொண்டிருந்த வேதபாரகர்களை பார்த்து தான் இயேசு கிறிஸ்து இப்படியாக கடிந்து கொண்டார். அவர்களை பார்த்து தான் குருடருக்கு வழிக்காட்டும் குருடர்களே என்றார். எனவே இந்த கடைசி நாள்களில் ஜனங்களை உங்கள் பாரம்பரியத்துக்கு நேராக நடத்தாமல் சத்தியத்துக்கு நேராக நடத்துங்கள். இயேசு கிறிஸ்து சொன்னப்படி உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனங்களை அவமாக்காதீர்கள். நன்றி!

ஆசிர்வதியும் கர்த்தரே பாடல் உருவான விதம்

ஆசிர்வதியும் கர்த்தரே- பாடல் பிறந்த கதை

இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கு, சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த யுனிஸ் அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் அருள்திரு. டி. எஸ்.டேவிட் ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர் மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார்.வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.

ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்