• Tuesday 20 January, 2026 12:47 AM
  • Advertize
  • Aarudhal FM

வெற்றி ரகசியத்தின் படிகள் – ஒரு குட்டி கதை

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே! என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர். இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறார், அதற்கு இவ்வளவு அலங்காரமா!

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!

கட்டளைகள் பறந்தன, காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான். மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா? தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்! அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?’

தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை! பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?

அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள். இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள், காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார். நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை, என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு! என்றான் மன்னன்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள்

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

  1. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
  2. அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பது. எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே

ஒரு பிரசங்கியார் ஏன் தனது பிரசங்கத்தில் தடம் புறள்கிறார்?

1 தான் நினைப்பது எல்லாம் கர்த்தர் பேசுவதாக கருதும் போது….

2. தான் வாசிக்கும் வேதாகமத்திற்கு இறுதி அதிகாரம் என்று நம்புவது சரி.ஆனால் அதில் தனக்கு கிடைத்த வெளிப்பாடுக்கும்அதே இறுதி அதிகாரம் இருப்பதாக கருதி சபை யாரை அச்சுறுத்தி பேசும் போது,

3. வேதாகம கொள்கைகளை போதிப்பதாக கருதி தனது விருப்பத்தை தனது சபையில் தேவ திட்டம் இதுதான் என்று துணிகரமாக பேசும் போது

4. சபையாரோடு நேரடியாக பேசி தீர்க்க வேண்டியதை தீர்க்க இயலாமல் கோழைத்தனமாக பிரசங்கத்தின் வாயிலாக தனக்கு கிடைத்த பலிபீடத்தை தவறாகப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போதுஎப்பேர்ப்பட்ட பிரசங்கியாரும் தடம் புறழ்வதற்கான அபாயம் உண்டு.

அவசியம் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள் உங்க போனில் இந்த எண்கள் இருக்கிறதா?

அவசியம் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்உங்க போனில் இந்த எண்கள் இருக்கிறதா.?

போக்குவரத்து அத்துமீறல் – 94875991001

போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

முதியோருக்கான அவசர உதவி -1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி -88832150001

கடலோர பகுதியில் அவசர உதவி 1093

ரத்த வங்கி – 1910

கண் வங்கி – 1919

சாத்தான்குளம் கிணற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்களுக்கு கனிமொழி அஞ்சலி! கதறிய உறவினர்கள்

சாத்தான்குளத்தில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (18/05/2025) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.

உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த 5 பேரின் சடலங்களுக்கும் கனிமொழி அஞ்சலி செலுத்திய போது அவர்களது உறவினர் கதறி அழுத போது கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது.

தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்→

1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22

2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6

3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14

4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26

5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2

6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8

7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

1) மோசே – எண்ணாகமம் 11:17,25
2) இஸ்ரவேலின் 70 மூப்பர் – எண் 11:25,26
3) பிலேயாம் – எண்ணாகமம் 24:2
4) ஒத்னியேல் – நியாயாதிபதி 3:9,10
5) கிதியோன் – நியாயாதிபதி 6:34
6) யெப்தா – நியாயாதி 11:29
7) சிம்சோன் – நியாயாதிபதி 14:6,19/15:14
8) சவுல் – 1 சாமுவேல் 10:10, 11:6, 19:23
9) தாவீது- 1 சாமுவேல் 16:13, 2 சாமு 23:1,2
10) சவுலின் சேவகர் – 1 சாமுவேல் 19:20
11) எலிசா – 2 இராஜா 2:9-15
12) அமாசாயி – 1 நாளாகமம் 12:18
13) அசரியா – 2 நாளாகமம் 15:1
14) சகரியா – 2 நாளாகமம் 24:20
15) யோசேப்பு – ஆதியாகமம் 41:38
16) காலேப் – எண்ணாகம் 14:2
17) யோசுவா – எண்ணாகமம் 27:18
18) ஆரோன் – சங்கீதம் 133:2,3 & லேவியராகமம் 21:12
19)தானியேல் – தானியேல் 5:11,12,
6:3, 4:8

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்!

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்! கொலை செய்யப்பட்ட இவரின் மார்க்தான் அனைவரின் மனதையும் கணக்க வைத்துள்ளது. கரூர் குளித்தலையில், தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்த ஷியாம் சுந்தர் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், +2 தேர்வில் ஷியாம் 351 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று மார்க்கை பார்த்த பெற்றோரும், நண்பர்களும் கண்ணீரில் மூழ்கி இருக்கின்றனர்.

தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12ம் வகுப்புதேர்வு எழுதிய மாணவன் – எவ்வளவு மார்க் தெரியுமா?

தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநராக பணிபுரிந்த அப்பா

சிவகங்கை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் செந்தில்வேலன் சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு உயிரி கணிதம் பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் செந்தில்வேலனும் அதற்கு தன்னை தயார் படுத்தி தேர்வெழுத காத்திருந்தபோது முதல் நாளான 3 ஆம் தேதி தமிழ் தேர்வெழுத காலையில் தயாரானபோது நிலையில் திடிரென செந்தில்வேலனின் தந்தை தர்மலிங்கம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்ற மாணவன்

இருந்தபோதிலும் அந்த துக்கத்தையும் மறந்து செந்தில்வேலன் தேர்வு மையம் சென்று தமிழ் தேர்வை எழுதியதுடன் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தந்தை தர்மலிங்கத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செந்தில்வேலன் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றியடைந்துள்ளார். இதனை தனது தாயிடம் மாணவன் தெரிவித்த நிலையில் கனவரின் புகைப்படம் முன்பு கதறி அழுத தாய் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மாணவனுக்கு ஆசீர்வாதம் செய்தார். மாணவன் செந்தில்வேலன் தனது தந்தையின் கனவான மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதே தனது லட்சியமென சூளுரைத்தார். தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் மதிப்பெண்கள் 413

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி வீட்டின் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று ரிசல்ட் வெளியான நிலையில் மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவி 600 மதிப்பெண்களுக்கு மொத்தம் 413 மார்க் எடுத்துள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 42 மதிப்பெண்களும், பிசிக்ஸ் பாடத்தில் 65 மதிப்பெண்களும், கெமிஸ்ட்ரியில் 78 மதிப்பெண்களும், பாட்டனியில் 70 மதிப்பெண்களும், ஸ்வாலஜியில் 80 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

மேலும் மாணவி அவசரப்பட்டு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அதிகமாக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.