- 21
- 20250708
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து 3 பேர் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் படி, ஓட்டுநர் மற்றும் 5 பள்ளிக் குழந்தைகள் வேனில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.