• Wednesday 22 January, 2025 08:09 AM
  • Advertize
  • Aarudhal FM

கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம் இலவச உணவு, பயண செலவு

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

170 அறைகள்… பக்கிங்காம் அரண்மனையை விட பெரிய வீட்டில் வசிக்கும் இந்திய பெண் – பரப்பளவு என்ன தெரியுமா?

இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு சொந்தமான பக்கிங்காம் அரண்மனையைவிட மிகப்பெரிய
இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகவும் பெரிய அரண்மனை என்று சொன்னால், அது, குஜராத் மாநிலத்தில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை தான், இது பரோடாவின் கெய்க்வாட் குடும்பத்திற்கு சொந்தமானது. இது உலகின் மிகப்பெரிய தனியாருக்கு சொந்தமான வீடாக இருக்கிறது. இந்த அரண்மனை, இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான பக்கிங்காம் அரண்மனையை விட மிகப் பெரியது. பரோடாவின் முன்னாள் ஆட்சியாளர்களான கெய்க்வாட் குடும்பத்தினருக்கு உள்ளூர் மக்களிடையே இன்றும் மிகுந்த மரியாதை உள்ளது. இந்த குடும்பம் தற்போது சமர்ஜித் சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ராதிகா ராஜே கெய்க்வாட் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.
1978ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பிறந்த ராதிகா ராஜே கெய்க்வாட் குஜராத்தின் வான்கனேர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டர் எம்.ஜே.ரஞ்சித் சிங் ஜாலா, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுவதற்காக, அரச பட்டத்தை துறந்தார். லட்சுமி விலாஸ் அரண்மனையின் பரப்பளவு 3,04,92,000 சதுர அடி. ஆனால், லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் பரப்பளவு வெறும் 8,28,821 சதுரடி தான். அத்துடன், தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்பிலான அன்டிலியா வீட்டின் பரப்பளவு 48,780 சதுரடி மட்டுமே.
லட்சுமி விலாஸ் அரண்மனையில் சுமார் 170 அறைகள் உள்ளன. 1890ஆம் ஆண்டில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் 3வது மன்னரால் கட்டப்பட்டது. அந்த நேரத்தில் சுமார் 1,80,000 பிரிட்டன் பவுண்ட் செலவு செய்து கட்டப்பட்டது. இந்த அரண்மனை வளாகத்திற்குள் ஒரு கோல்ஃப் மைதானமும் இருக்கிறது