• Friday 28 November, 2025 06:24 AM
  • Advertize
  • Aarudhal FM

மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனைவியை கொன்றுவிட்டு சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்றும், மதுபோதையில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொஞ்ச நேர கோபம் என்ன பண்ணிருக்கு பார்த்தீங்களா?

வாய், மூக்கில் ரத்தம்… பள்ளியில் 7 வயது மாணவன் மரணம்

காலையில் மகிழ்ச்சியாக பள்ளி சென்ற சிறுவன், மாலையில் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்துள்ளது. தனியார் CBSE பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்ற மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சென்றபோது, வாய், மூக்கில் ரத்தம் கசிந்தவாறு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன்களில் மூழ்கி இருப்பதை பார்த்து வருகிறோம். வேலை செய்யும் போது, சாப்பிடும் போது என அனைத்து அன்றாட செயல்முறைகளின் போதும் மொபைல் போன்களைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதிலும் தூங்கும் முன் செல்போன் பார்க்கும் பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி விட்டனர்.

மொபைல் போன்கள் மட்டுமல்லாமல் மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது வேறு சில திரைகளைப் பார்ப்பது பொதுவானதாக மாறிவிட்டது. ஆனால், சாப்பிடும் போது இந்த திரைகளைப் பார்ப்பது மிகவும் கெடுதலாகும். சாப்பிடும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைக் காணலாம்.

சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதன் பக்க விளைவுகள்

உணவு உண்ணும் போது மொபைல் போனைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும். இதில் உணவு உண்ணும் சமயத்தில் மொபைல் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்

கவனச்சிதறல்

உணவு உண்ணும் போது, டிவி பார்ப்பது, மொபைல் போன் பார்ப்பது போன்றவற்றால் மூளை திசைதிருப்பப்படுகிறது. இதனால் சாப்பிடுவதில் கவனம் இல்லாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. உணவை சரியான முறையில் கவனத்துடன் உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

அஜீரணக் கோளாறு

தொலைக்காட்சி, மொபைல் பயன்பாட்டின் போது சாப்பிடுவதால் சில சமயங்களில் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் இல்லாமல் போகலாம். இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் உடலால் உண்ணப்படும் உணவின் அளவையோ அல்லது எந்த வகையான உணவையோ சரியாக செரிமானம் செய்ய முடியவில்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடல் பருமன் பிரச்சனை

தொலைக்காட்சி அல்லது மொபைல் பார்க்கும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் அதிகம் சாப்பிடும் நிலை ஏற்படலாம். இதனால் சில சமயங்களில் அதிகளவு உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிகம் உணவு உட்கொள்வது உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

திருப்தியில்லாமல் இருப்பது

மனம் ஒரே நேரத்தில் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலையில், ஒன்றை மட்டும் சரியாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

குறைந்த வளர்ச்சிதை மாற்றம்

சாப்பிடும் போது திரைகளைப் பார்ப்பது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கிறது. இதனால் உணவு மெதுவாக செரிமானம் அடையலாம். மேலும், உடலில் கொலஸ்ட்ராலும் மெதுவாக கரைகிறது.

இவ்வாறு மொபைல், டிவி, மடிக்கணினி போன்ற பல்வேறு திரைகளைப் பார்ப்பது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூரத் தந்தை!

மகாராஷ்டிராவில் பெற்ற மகளை தந்தையே அடித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. +2 மாணவி சாதனா(17) நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அதற்கான மாதிரி தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால், ஆசிரியரான அவரது தந்தை போன்ஸ்லே ஆத்திரத்தில் பிரம்பால் தாக்கியுள்ளார். இதில், தலையில் காயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மார்க் வேண்டுமா? மகள் வேண்டுமா? பெற்றோரே சிந்தியுங்கள்..!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மறுகூட்டல் இன்று வெளியீடு

+2 மறுகூட்டல் இன்று வெளியீடு

  • 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. தேர்வு துறையின் – www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று (20 ஜூன் 2025) விமான சேவையில் ஏற்பட்ட முக்கிய கோளாறுகள்


🛫 சரிந்த விமான பயன்பாடுகள்

Air India – பல உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் அனுப்ப முடியாமல் இருத்தப்பட்டுள்ளன. கட்டாய பராமரிப்பு, வானிலை காரணமாக குறைபாடு ஏற்பட்டுள்ளது மற்றும் ஏழு முதல் ஒன்பது வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது .

தனித்துறை விமானங்களில் Boeing 787/777 மாடல்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றிற்கான அதிகமான பராமரிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

குறிப்பாக: டுபாய்–சென்னை (AI906), டெல்லி–மெல்போர்ன் (AI308), மெல்போர்ன்–டெல்லி (AI309), டுபாய்–ஹைதராபாத் (AI2204) சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன .

SpiceJet – ஹைதராபாத்திலிருந்து Renigunta (Tirupati அருகில்) புறப்பட்ட விமானம் தெஜ்னீக்கு பறக்கும் பத்தே நிமிடங்கள் கழித்து தொடர்ந்தது. எட்டுப்பேர்கள் நலமாக இருக்கின்றனர் .


🛩️ சென்னை (MAA) விமான நிலைய தடைகள்

Chennai விமான நிலையத்தில் தற்போது பரவலான தாமதங்கள் குறைவு; இது சிறந்த நிலையை காட்டுகிறது .

ஆனால் Air India மற்றும் SpiceJet சில விமானங்கள் சென்னை–டெல்லி, சென்னை–மும்பய், சென்னை–தூத்துக்குடி, ஹைதராபாத்–சென்னை வழிகள் ரத்து செய்யப்பட்டன .


🧭 ஏன் இத்தகைய கோளாறு?

  1. Boeing 787 விமானங்களின் பராமரிப்பு சோதனை:

12 ஜூன் AI171 விமான விபத்துக்குப் பிறகு டிஜிஏசிஏ ஆரோக்கிய ஆய்வுகளை அதிகரித்தது .

  1. வானிலை மற்றும் வானப் பாதை கட்டுப்பாடுகள்:

மධ්‍යமத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா–கிழக்கு ஆசிய வான்பாதையில் கட்டுப்பாடுகள் உள்ளன .

  1. சாதாரண பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள்:

சில விமானங்கள் (இயந்திர பிரச்சினைகள் போன்றவை) பறக்க முடியாமல் கொண்டிருந்தன .


✅ பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான ஆலோசனைகள்

பரிந்துரை பகுதி விளக்கம்

சமீபத்திய தகவல்களை பார் உங்கள் விமான நிலைய செயல்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ App அல்லது இணையதளத்தில் (அல்லது உங்கள் விமான நிறுவனம்) செல்லவும்
மாற்று வழி ஏற்பாடுகள் Air India – ரீபுக்கிங், ரீஃபண்ட் குறித்த செயல்களை வழங்குகிறது
விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நேரம் தவறாமல், முன்கூட்டியே சென்று நிலையை சரிபார்க்கவும்
மதிப்பிட்ட கையாளுவோரிடம் தொடர்பு விமான நிலைய உதவி அல்லது Airline counters–ல் செல்லவும்


✈️ சுருக்கமாக:

இன்று (20 ஜூன் 2025) Air India பல விமானங்களை பராமரிப்பு மற்றும் வானிலை காரணங்களால் ரத்து செய்துள்ளது.

SpiceJet Q400 விமானம் வழித்தவறி திரும்பியது, ஆனால் பயணிகள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

சென்னை விமான நிலையம் தாமதங்கள் மிகவும் குறைவாகச் செயல்படுகிறது, ஆனால் Air India மற்றும் SpiceJet–ஐ தொடர்ந்து த்ருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.


🛠️ சிவப்பு அடிப்படையிலான நடவடிக்கை:

உங்கள் விமானங்கள் அல்லது பயணங்கள் இன்று பாதிக்கப்பட்டிருந்தால்:

  1. Airline–இன் அதிகாரப்பூர்வ தகவல்தளத்தை மீண்டும் சரிபார்க்கவும்
  2. ரீபுக்கிங்/ரீஃபண்ட்–க்கு உடனடியாக முடிவு எடுக்கவும்
  3. விமான நிலைய உதவி/எயர்லைன் டெஸ்க்–க்கு முன்கூட்டியே சென்று தேவையான உதவி பெறவும்

பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2025-26 ஆம் கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210. அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடை விடுமுறை என அனைத்தும் சேர்த்து 115 நாட்கள் விடுமுறை ஆகும். இதுதவிர உள்ள நாட்கள் தேர்வுகள் நடைபெறும் நாட்களாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மகளிர் உரிமை தொகை டெபாசிட்! என்ன மகிழ்ச்சியா?

பெண்களின் வங்கிக் கணக்கில், மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 அரசால் டெபாசிட் செய்யப்படும்.

அதன்படி நாளை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அதனால் இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான எஸ்எம்எஸ் வந்ததும் ₹1,000 டெபாசிட் செய்யப்பட்டதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்

அகமதாபாத் விமான விபத்து… டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது ”டாடா குழும வரலாற்றின் இருண்ட நாள்…” எனக் குறிப்பிட்டுள்ளார் அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்.

இந்த நிலையில், ’ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்கும் ‘போயிங் 787- 8’, ‘போயிங் 787- 9’ ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகள், Take off தொடர்பான சோதனை, ஹைட்ராலிக் சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை விமானம் புறப்படும் முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், விமான கட்டுப்பாட்டு ஆய்வுகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி காம்பெல் வில்சன் சந்தித்துப் பேசினார்.  சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விமான விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் காம்பெல் வில்சன் விவரித்ததாகக் கூறப்படுகிறது

திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்குமரன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி திறந்த நாள் முதல் பள்ளிக்குச் சென்று வரும் ஆகாஷிடம் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் உள்பட பள்ளி பாடங்களை முறையாக படிக்க வேண்டும் மற்ற மாணவர்களை விட ஆகாஷை கடுமையாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் ஆகாஷ் மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளார். இதையடுத்து இன்று (ஜூன் 13) பள்ளியில் ஆசிரியர்களை பார்த்து விபரத்தை கூறுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையிலும் பள்ளி வகுப்பையில் வைத்து மாணவனை பள்ளி ஆசிரியர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் காலை 9.50 மணியளவில் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென ஆகாஷ் கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவன் ஆகாஷை கார் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே வந்த மாணவன் பள்ளியில் அதிக அளவு டார்ச்சர் செய்வதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் சத்யா மற்றும் ஆகாஷின் வகுப்பு ஆசிரியர் பொன்ராணி உள்பட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.