• Friday 28 November, 2025 06:50 AM
  • Advertize
  • Aarudhal FM

நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. தேர்வர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ‘NEET UG 2025 RESULT’ என்ற லிங்க்கை கிளிக் செய்து உங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு முடிவுகளை அறியலாம். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

கோவிலில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

விருதுநகர் மாவட்டம், திருச்சுளி தாலுகா, கல்லுமடை கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தபோது, அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவுப் பொருளில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

விவரங்கள்:

  • விஷயம்:விருதுநகர் மாவட்டம், திருச்சுளி தாலுகா, கல்லுமடை கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தபோது அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
  • விசாரணை:உணவுப் பொருளில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 
  • சிகிச்சை:பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
  • கூடுதல் விவரம்:மானாமதுரையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மீன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டபோது, ​​இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்தில் கோயில் திருவிழாவை கொண்டாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

498 பேருக்கு கொரோனா 8 பேர் மரணம்!

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சாத்தான்குளம் கிணற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்களுக்கு கனிமொழி அஞ்சலி! கதறிய உறவினர்கள்

சாத்தான்குளத்தில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (18/05/2025) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.

உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த 5 பேரின் சடலங்களுக்கும் கனிமொழி அஞ்சலி செலுத்திய போது அவர்களது உறவினர் கதறி அழுத போது கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது.

தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது

நம் திருச்சபையில் அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்காக

✅TNPSC Group 1 Recruitment 2025
✅காலி இடங்கள்: 70 Deputy Collector, Deputy Superintendent of Police, District Employment Officer, Assistant Director of Rural Development, District Employment Officer, Assistant Commissioner of Labour Posts
✅உடனே விண்ணப்பிக்க Link: https://tamilanguide.in/tnpsc-recruitment-2025-70-group-1-posts-apply-now/
✅கல்வி தகுதி: Any Degree
✅இறுதி நாள்: 30.04.2025
💒 நமது திருச்சபையைச் சார்ந்த, பட்டப்படிப்பு படித்துள்ள அனைத்து பிள்ளைகளையும் இந்தத் தேர்வை எழுத ஊக்குவிக்கும்படி / வழிகாட்டும்படி அன்போடு வேண்டுகிறேன். 🙏

கிறிஸ்தவ மதபோதகரின் உடலை அடக்கம் செய்த இந்து, முஸ்லிம்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்திருக்கிறார்கள். மனிதநேயத்துக்கு சிறந்த எடுத்துக்கட்டாக இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் போற்றுகிறார்கள்.

தமிழ்நாடு எப்போதுமே மத ரீதியான பிரிவினைகளை ஏற்காது. எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் ஆகும். சாதி மத வேறுபாடுகள் மூலம் இங்கு அரசியல் செய்ய முடியாது. இன்ன சாதி என்றோ, இன்ன மதம் என்றோ கூறி, தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. மக்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்குவது இங்கு தான். இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்கு முதல் வரிசையில் செல்வது இந்துக்கள் தான். இதுபோல் வேளாங்கண்ணி மேரி மாத ஆலயம் தொடங்கி பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மக்கள் செல்வார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்துக்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம் என்கிற அளவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் 90 வயதாகும் இயேசு ரத்தினம் (வயது 90). இவர் தென்காசி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இயேசு ரத்தினம் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் இந்திரா காலனியில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு அப்பகுதியினர் உணவு வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இயேசு ரத்தினம் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் அவரை பார்க்கவே வரவில்லை. இதனை அறிந்த சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி, திரிகூடபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் செய்யது மீரான் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம்களும் சென்று, கிறிஸ்தவ மதச்சடங்கின்படி இயேசு ரத்தினம் உடலை அடக்கம் செய்தனர். கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்த நிகழ்ச்சி மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

கிழங்குகளும்… பயன்களும்…

*மரவள்ளிக் கிழங்கு – இதயத் துடிப்பை சீராக வைக்கும்.

*சேப்பக்கிழங்கு – உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.

கருணை கிழங்கு -இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

*சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதுகாப்புக்கு பயனுள்ளது.

*உருளைக் கிழங்கு – நார்ச்சத்தை அதிகரிக்கும்.

*பனங்கிழங்கு – செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?

உஷார்: சுட்டெரிக்கும் வெயில்

இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.