• Saturday 6 September, 2025 07:16 PM
  • Advertize
  • Aarudhal FM

ஆசிர்வதியும் கர்த்தரே பாடல் உருவான விதம்

ஆசிர்வதியும் கர்த்தரே- பாடல் பிறந்த கதை

இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கு, சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த யுனிஸ் அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் அருள்திரு. டி. எஸ்.டேவிட் ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர் மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார்.வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.

ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்

498 பேருக்கு கொரோனா 8 பேர் மரணம்!

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நான் சேவிக்கிற கர்த்தர்

அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;

1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்.

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

3.முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.

4.பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்

சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்

யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

6.உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

கர்த்தரை சேவித்தால் கிடைக்கும் நன்மைகள்

1. நிச்சயமாகவே பலன் உண்டாகும்

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2.பிதாவானவர் கனம்பண்ணுவார்

யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

3. கர்த்தர் விடுவிப்பார்

தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
வட இந்திய ஊழியத்திற்க்கு உதவ வாஞ்சையுள்ளோர் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
Mobile no – 9437328604

வீட்டிலிருந்தபடியே வேதாகமத்தை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு – வல்லமை இறையியல் செமினரி

அங்கீகாரமும் & அந்தஸ்தும்: (Accreditation & Affiliation)

நமது வேதபாடசாலை தேவனுடைய அளவற்ற கிருபையினால் கீழ்கண்ட அங்கீகாரங்களையும் & சிலாக்கியங்களையும் பெற்றுள்ளது.

1) நமது இறையியல் செமினரியானது வல்லமை எழுப்புதல் ஊழியங்கள் அறக்கட்டளை மற்றும் சர்வதேச தர சான்று பெற்ற தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

2) கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ISO சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள அமைப்பாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

3) இறையியல் அங்கீகாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த வேதபாடசாலையில் யார் பயிலலாம்? (Who can study in this Bible school?)

சபை பாகுபாடின்றி அனைவரும் பயிலலாம். ஆவிக்குரிய அனுபவமும், ஊழிய வாஞ்சையும் மிக அவசிய -மானதாக கருத்தில் கொள்ளப்படும்.

1) ஆண், பெண் இருபாலருக்குமான ஆன்லைன் கல்வி

2) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படிக்க அனுமதி.

3) வேதாகமத்தை முறையாக கற்க விரும்புவோர், ஊழிய வாஞ்சையுள்ளவர்கள், முழுநேர ஊழியர்கள் படிக்கலாம்.

4) முழு நேர ஊழிய அழைப்பு பெற்று முறையாக வேதாகம கல்லூரிகளில் தங்கி பயிலும் வாய்ப்பு கிடைக்காதவர் -கள் படிக்கலாம். (தங்கி படிக்கும் வாய்ப்புகள் இருக்குமானால் சிரமமின்றி எங்களை மறந்துவிட்டு அத்தகைய கல்லூரிகளில் போய் தங்கி படிக்கவும்)

5) பகுதி நேரமாக சபையோடு இணைந்து ஊழியம் செய்பவர்கள் (சிறுவர் & வாலிபர் ஊழியங்கள், ஜெபக்குழுக்கள், பராமரிப்பு குழுக்களில் ஈடுபடுவோர், சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடுவோர் அவர்களது சபை போதகரின் பரிந்துரையின் பேரில் இந்த வேதபாடசாலையில் படிக்கலாம்.

நமது வேத பாடசாலையின் கூடுதல் விவரங்கள், போதனை முறைகள் மற்றும் கல்வி கட்டணம் வங்கி முகவரி போன்றவற்றை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அறிக்கை லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்

வீடு தேடி வரும் ₹5000… யார் யாருக்கு தெரியுமா?

மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 வரை ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான “எட்டு போடுதல்”

🔴ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான “8 போடுதல்” பயிற்சி – அதன் பின்னணி தெரியுமா?ஓட்டுநர் உரிமம் (Driving Licence) என்பது, பொதுவெளியில் வாகனம் ஓட்ட உத்தியோகபூர்வமாக அனுமதி தரும் ஆவணம். இந்த உரிமத்தைப் பெறுவதற்கான ஒரு முக்கியத் தேர்வாகவே “8 போடுதல்” பயிற்சி (Figure-8 Test) RTO அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

🔴எதற்காக ‘8’ வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்கிறார்கள்?

8 என்ற எண் வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்வதற்கான காரணம், ஓட்டுநரின் இயக்கத் திறனையும், நிலைத்தன்மையையும் சோதிப்பதற்காக ஆகும். இது ஒரு சவாலான பயிற்சி:

🔹வலப்பக்கம், இடப்பக்கம் திருப்புதல் திறன்

🔹குறைந்த இடைவெளியில் வாகன கட்டுப்பாடு

🔹பாதுகாப்பான யூ-டர்ன் பழக்கவழக்கம்

🔹பதட்டமின்றி வாகனம் ஓட்டும் மனநிலை

🔴ஏன் 8 என்ற வடிவம்?

🔹8 என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத தொடரும் வடிவம்.

🔹இந்த வடிவத்தில் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வரும் வளைவுகளுக்கும், கடுமையான சுழற்சி திருப்பங்களுக்கும் தயாராக வைத்துக்கொள்ளும் பயிற்சி.

🔹சைக்கிள் அல்லது டூ வீலர் ஓட்டும் பொழுது, கால்கள் தரையில் பதியாமல் வாகனத்தை நிலைபேறாக கட்டுப்படுத்தி சுழற்ற வேண்டும்.

🔹இது ஓட்டுநரின் பாதுகாப்பு, கவனம், திறமை ஆகியவற்றின் அளவுகோலாக பார்க்கப்படுகிறது.

🔴முக்கிய குறிப்பு:

🔹சிலர் “8 போடாமல்” விலக்குகள் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால், இது பாதுகாப்பு கற்றலுக்கே உங்களுக்கே தேவையானது என்பதை உணருங்கள்.

🔹“8 போடுதல்” என்பது உரிமம் பெறுவதற்கான ஒரு தேவை மட்டுமல்ல, வாழ்க்கை பாதுகாப்புக்கான முன்னோடியும் ஆகும்

🔴விளக்கம்:ஓட்டுநர் உரிமம் பெறும் முன் செய்யும் “8 போடுதல்” ஒரு கணித வடிவத்தைக் காட்டும் பயிற்சி அல்ல. அது ஒரு பயிற்சி வடிவம். இது, முன்னேற்பாடான சாலை பயணத்திற்கான அறிவாற்றலை வளர்க்கும் பயிற்சி.-

வெற்றி ரகசியத்தின் படிகள் – ஒரு குட்டி கதை

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே! என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர். இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறார், அதற்கு இவ்வளவு அலங்காரமா!

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!

கட்டளைகள் பறந்தன, காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான். மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா? தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்! அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?’

தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை! பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?

அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள். இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள், காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார். நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை, என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு! என்றான் மன்னன்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள்

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

  1. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
  2. அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பது. எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே

ஒரு பிரசங்கியார் ஏன் தனது பிரசங்கத்தில் தடம் புறள்கிறார்?

1 தான் நினைப்பது எல்லாம் கர்த்தர் பேசுவதாக கருதும் போது….

2. தான் வாசிக்கும் வேதாகமத்திற்கு இறுதி அதிகாரம் என்று நம்புவது சரி.ஆனால் அதில் தனக்கு கிடைத்த வெளிப்பாடுக்கும்அதே இறுதி அதிகாரம் இருப்பதாக கருதி சபை யாரை அச்சுறுத்தி பேசும் போது,

3. வேதாகம கொள்கைகளை போதிப்பதாக கருதி தனது விருப்பத்தை தனது சபையில் தேவ திட்டம் இதுதான் என்று துணிகரமாக பேசும் போது

4. சபையாரோடு நேரடியாக பேசி தீர்க்க வேண்டியதை தீர்க்க இயலாமல் கோழைத்தனமாக பிரசங்கத்தின் வாயிலாக தனக்கு கிடைத்த பலிபீடத்தை தவறாகப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போதுஎப்பேர்ப்பட்ட பிரசங்கியாரும் தடம் புறழ்வதற்கான அபாயம் உண்டு.

அவசியம் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள் உங்க போனில் இந்த எண்கள் இருக்கிறதா?

அவசியம் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்உங்க போனில் இந்த எண்கள் இருக்கிறதா.?

போக்குவரத்து அத்துமீறல் – 94875991001

போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

முதியோருக்கான அவசர உதவி -1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி -88832150001

கடலோர பகுதியில் அவசர உதவி 1093

ரத்த வங்கி – 1910

கண் வங்கி – 1919

சாத்தான்குளம் கிணற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்களுக்கு கனிமொழி அஞ்சலி! கதறிய உறவினர்கள்

சாத்தான்குளத்தில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (18/05/2025) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.

உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த 5 பேரின் சடலங்களுக்கும் கனிமொழி அஞ்சலி செலுத்திய போது அவர்களது உறவினர் கதறி அழுத போது கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.