• Sunday 14 September, 2025 06:19 PM
  • Advertize
  • Aarudhal FM
திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

  • Tiruchendur
  • 20250613
  • 0
  • 224

திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்குமரன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி திறந்த நாள் முதல் பள்ளிக்குச் சென்று வரும் ஆகாஷிடம் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் உள்பட பள்ளி பாடங்களை முறையாக படிக்க வேண்டும் மற்ற மாணவர்களை விட ஆகாஷை கடுமையாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் ஆகாஷ் மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளார். இதையடுத்து இன்று (ஜூன் 13) பள்ளியில் ஆசிரியர்களை பார்த்து விபரத்தை கூறுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையிலும் பள்ளி வகுப்பையில் வைத்து மாணவனை பள்ளி ஆசிரியர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் காலை 9.50 மணியளவில் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென ஆகாஷ் கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவன் ஆகாஷை கார் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே வந்த மாணவன் பள்ளியில் அதிக அளவு டார்ச்சர் செய்வதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் சத்யா மற்றும் ஆகாஷின் வகுப்பு ஆசிரியர் பொன்ராணி உள்பட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion

மாணவர்களுக்கிடையே பரவலாக காணப்படும் இது போன்ற தற்கொலை எண்ணங்கள் தற்கொலை முயற்சிகள் முற்றிலும் மாற பாரத்தோடு ஜெபியுங்கள் ஆசிரியர்கள் மாணவர்களை புரிந்து நடக்கவும் மாணவனுடைய மனநிலையை அறிந்து கொள்ளவும் கருத்தாய் செயல்பட பாரத்தோடு ஜெபிக்கவும்

Summary

9th grade student attempts suicide from first floor of Tiruchendur private school