- 352
- 20250402
- by KIRUBAN JOSHUA
- 9 months ago
- 0
நீ அழகா இருக்கே..
உன் கேரக்டர் புடிச்சிருக்கு..
Friendly-யா பேசுறதுல என்ன தப்பிருக்கு..
இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்..
சரியான பட்டிக்காடா இருக்கியே..
Whatsapp, Facebook-ல தானே பேசுறாங்க..
சும்மா பேசிப்பாரு..
என்னது BoyFriend-டே இல்லையா..
எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு இருக்காங்க..
இந்த காலத்துல எந்த பொண்ணு தப்பு பண்ணாம இருக்கு..
Teenage-ன்னா அப்படி இப்படி தாம்பா இருக்கும். இதெல்லாம் சகஜம்..
சீரியஸா
நீ அந்த மாதிரி
ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா..?
Friend கூட சினிமா போனா என்ன தப்பு..?
இதெல்லாம் கூடவா வீட்ல சொல்வாங்க..
சும்மா ஜாலி டிரிப் தானே..
Hot வேணாம் Beer வேணா லைட்டா சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது..
தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத
அப்புறம் வெளியவே விடமாட்டாங்க.
எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க..
Photo வச்சி என்ன பண்ண போறான், அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு..
சும்மா லவ் பண்ணி பாரு
Set ஆனா ஓகே.
இல்லன்னா Breakup பண்ணிடு
அவ்ளோதானே.
இதுக்கு ஏன் பயப்புடுறே..
Etc etc etc..
=> இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை..
அத்தனை பாலியல் பிரச்சனைகளும் இது போன்ற சாதாரண உரையாடல்களில்
இருந்து தான் தொடங்குகிறது.
வளர்கிறது.
அல்லது தூண்டப்படுகிறது..
சபை ஜனங்களாகிய நாமும் இந்த பொல்லாத உலகத்தில் இருக்க வேண்டியது இருப்பதால், காமுகர்களைப்பற்றிய போதுமான
விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான சமூகவலைதளங்களில் உலாவருவதும், ஒழுக்கத்தின் மீதான மதிப்பை இழந்துவிட்டதும், சினிமாவை வாழ்க்கையோடு பொருத்தி வாழ்வதும், பொறுப்பற்ற வளர்ப்பும்,
பொய் பேசுவதும், தவறை மறைப்பதும்
தாமே தீர்வு தேடுவதும் போன்ற
பலப்பல காரணங்கள் சேர்ந்து
இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்
சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது..
எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே
பெற்றோரிடம் சொல்லிவிடும்
பெண் பிள்ளைகள் பெரும்பாலும்
இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை..
இழந்ததை திரும்ப பெற முடியாது,
இனி இருக்கின்ற பெண்களாவது மேலே சொன்ன ஆபத்தான போலி வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்..
Dangerous fake words