• Wednesday 9 July, 2025 09:17 AM
  • Advertize
  • Aarudhal FM

பைபிளில் ஈரானின் சுவாரஸ்யமான செயல்

பைபிளில் ஈராக்கின் முக்கியத்துவம்

மிகவும் சுவாரஸ்யமானது, மனதைத் தொடும் மற்றும் கல்வி கற்பிக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?

1. ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது.

2. மெசபடோமியா, இப்போது ஈராக்கில் உள்ளது, நாகரிகத்தின் தொட்டில்!

3. நோவா ஈராக்கில் பேழையைக் கட்டினார்.

4. பாபேல் கோபுரம் ஈராக்கில் இருந்தது.

5. ஆபிரகாம் தெற்கு ஈராக்கில் உள்ள ஊர் நகரைச் சேர்ந்தவர்!

6. ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் ஈராக்கில் உள்ள நாகோரைச் சேர்ந்தவர்.

7. யாக்கோபு ஈராக்கில் ராகேலைச் சந்தித்தார்.

8. யோனா ஈராக்கில் உள்ள நினிவேயில் பிரசங்கித்தார்.

9. ஈராக்கில் உள்ள அசீரியா இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களைக் கைப்பற்றியது.

10. ஆமோஸ் ஈராக்கில் கூக்குரலிட்டார்!

11. ஈராக்கில் உள்ள பாபிலோன் எருசலேமை அழித்தது.

12. ஈராக்கில் தானியேல் சிங்கக் குகையில் இருந்தார்!

13. ஈராக்கில் 3 எபிரேய குழந்தைகள் நெருப்பில் இருந்தனர்.

14. பாபிலோன் மன்னர் பெல்ஷாத்சார் ஈராக்கில் “சுவரில் எழுதப்பட்டதை” கண்டார்.

15. பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சார் யூதர்களை ஈராக்கிற்கு சிறைபிடித்தார்.

16. எசேக்கியேல் ஈராக்கில் பிரசங்கித்தார்.

17. ஞானிகள் ஈராக்கிலிருந்து வந்தவர்கள்.

18. பேதுரு ஈராக்கில் பிரசங்கித்தார்.

19. வெளிப்படுத்தலில் விவரிக்கப்பட்டுள்ள “மனிதப் பேரரசு” ஈராக்கில் உள்ள ஒரு நகரமான பாபிலோன் என்று அழைக்கப்படுகிறது!

மேலும், அது உங்களுக்குத் தெரியுமா?

இஸ்ரேல் பைபிளில் அடிக்கடி குறிப்பிடப்படும் தேசம். ஆனால் எந்த தேசம் இரண்டாவது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஈராக்!

இருப்பினும், பைபிளில் பயன்படுத்தப்படும் பெயர் அதுவல்ல. பைபிளில் பயன்படுத்தப்படும் பெயர்கள் பாபிலோன், கல்தேயன், ஷினார் தேசம் மற்றும் மெசொப்பொத்தேமியா. மெசபடோமியா என்ற வார்த்தைக்கு இரண்டு நதிகளுக்கு இடையில், இன்னும் சரியாகச் சொன்னால் டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் என்று பொருள். ஈராக் என்ற பெயருக்கு ஆழமான வேர்களைக் கொண்ட நாடு என்று பொருள். உண்மையில் ஈராக் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு நாடு, பைபிளில் இது மிகவும் குறிப்பிடத்தக்க நாடு. அதற்கான காரணம் இதுதான்:

👉ஏதேன் ஈராக்கில் இருந்தது-ஆதியாகமம் 2:10-14
👉ஆதாமும் ஏவாளும் ஈராக்கில் படைக்கப்பட்டனர்-ஆதியாகமம் 2:7-8
👉சாத்தான் ஈராக்கில் முதன்முதலில் தோன்றினார்-ஆதியாகமம் 3:1-6
👉நிம்ரோத் பாபிலோனை நிறுவினார் & பாபேல் கோபுரம் ஈராக்கில் கட்டப்பட்டது-ஆதியாகமம் 10:8-97; 11:1-4
👉மொழிகளின் குழப்பம் ஈராக்கில் நடந்தது-ஆதியாகமம் 11:5-11
👉ஆபிரகாம் ஈராக்கில் உள்ள ஒரு நகரத்திலிருந்து வந்தார்-ஆதியாகமம் 11:31; அப்போஸ்தலர் 7:2-4
👉ஈசாக்கின் மணமகள் ஈராக்கிலிருந்து வந்தாள்-ஆதியாகமம் 24:3-4; 10
👉யாக்கோபு ஈராக்கில் 20 ஆண்டுகள் கழித்தார்-ஆதியாகமம் 27:42-45; 31:38
👉முதல் உலகப் பேரரசு ஈராக்கில் இருந்தது-தானியேல் 1:1-2;2:36-38
👉வரலாற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஈராக்கில் உள்ள ஒரு நகரத்தில் ஏற்பட்டது-யோனா 3
👉எஸ்தர் புத்தகத்தின் நிகழ்வுகள் ஈராக்கில்-எஸ்தரில் நடந்தன
👉நாகூம் புத்தகம் ஈராக்கில் உள்ள ஒரு நகரத்திற்கு எதிரான தீர்க்கதரிசனம்-நாகூம்
👉புத்தகம் அல்லது வெளிப்படுத்தல் பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைக் கொண்டுள்ளது, இது ஈராக் தேசத்தின் பழைய பெயராக இருந்தது-வெளிப்படுத்துதல் 17 & 18

இஸ்ரேலைத் தவிர வேறு எந்த தேசமும் ஈராக்கை விட அதிக வரலாற்றையும் தீர்க்கதரிசனத்தையும் கொண்டிருக்கவில்லை.

ஆச்சரியமாக இருக்கிறதா??? 🤔

நீங்கள் ஏதாவது கற்றுக்கொண்டீர்களா???
மற்றவர்களுக்கு கல்வி கற்பிக்க பகிரவும்

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி!!!

நான் சேவிக்கிற கர்த்தர்

அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;

1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்.

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

3.முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.

4.பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்

சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்

யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

6.உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

கர்த்தரை சேவித்தால் கிடைக்கும் நன்மைகள்

1. நிச்சயமாகவே பலன் உண்டாகும்

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2.பிதாவானவர் கனம்பண்ணுவார்

யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

3. கர்த்தர் விடுவிப்பார்

தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
வட இந்திய ஊழியத்திற்க்கு உதவ வாஞ்சையுள்ளோர் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
Mobile no – 9437328604

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்→

1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22

2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6

3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14

4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26

5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2

6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8

7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

1) மோசே – எண்ணாகமம் 11:17,25
2) இஸ்ரவேலின் 70 மூப்பர் – எண் 11:25,26
3) பிலேயாம் – எண்ணாகமம் 24:2
4) ஒத்னியேல் – நியாயாதிபதி 3:9,10
5) கிதியோன் – நியாயாதிபதி 6:34
6) யெப்தா – நியாயாதி 11:29
7) சிம்சோன் – நியாயாதிபதி 14:6,19/15:14
8) சவுல் – 1 சாமுவேல் 10:10, 11:6, 19:23
9) தாவீது- 1 சாமுவேல் 16:13, 2 சாமு 23:1,2
10) சவுலின் சேவகர் – 1 சாமுவேல் 19:20
11) எலிசா – 2 இராஜா 2:9-15
12) அமாசாயி – 1 நாளாகமம் 12:18
13) அசரியா – 2 நாளாகமம் 15:1
14) சகரியா – 2 நாளாகமம் 24:20
15) யோசேப்பு – ஆதியாகமம் 41:38
16) காலேப் – எண்ணாகம் 14:2
17) யோசுவா – எண்ணாகமம் 27:18
18) ஆரோன் – சங்கீதம் 133:2,3 & லேவியராகமம் 21:12
19)தானியேல் – தானியேல் 5:11,12,
6:3, 4:8

விசுவாசி என்றால் யார் ? பிரசங்க குறிப்பு

விசுவாசி என்றால் யார் ?

விசுவாசிகளாகிய திரளான கூட்டாத் தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர் களாயிருந்தார்கள் அப் 4 : 32

இந்த குறிப்பில் விசுவாசி என்பவர்கள் யார் என்பதைக் குறித்து அப் 12ம் அதிகாரத்தில் 1 to 14 வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்வோம்

வேதபாடம் அப் 12 : 1 to 14

ஊக்கமாய் ஜெபிக்கிறவனே விசுவாசி அப் 12 : 5

1 . ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது. யாக் 5 : 16

2 . இயேசு அதிக ஊக்கத்தோடு ஜெபித்தார் லூக்கா 22 : 44

3 . ஊக்கம் சுத்த இருதயத்தை தரும் 1 பேது 1 : 22

4 . ஊக்கமான ஜெபம் அன்பை தரும்  1 பேது 4 : 8

5 . சாமுவேல் இராமுழுவதும் ஊக்கமாய் ஜெபித்தான் 1 சாமு 5 : 11

கூடி ஜெபிக்கிறவன் விசுவாசி அப் 12 : 12

1 . கூடி ஜெபித்தால் இடம் அசையும் அப் 4 : 31

2 . கூடிப் பாடினால் இடம் அசையும் அப் 16 : 25

3 . கூடி வந்தால் பரிசுத்த ஆவி நிறப்பும் அப் 10:44

வார்த்தையை கேட்பவனே விசுவாசி அப் 12 : 13

1 . தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்பவன் விசுவாசி நீதி 4 : 10

2 . தேவ வார்த்தையை காத்துகொள்பவன் விசுவாசி நீதி 4 : 4

3 . தேவ வார்த்தையே ஜீவனும் பெலனும் எபி 4 : 12

4 . தேவ வார்த்தையை கேட்டவன்யார் ? எரே 23 : 18

5 . தேவ வார்த்தையை கனித்தவன் யார் ? எரே 23 : 18

6 . வார்த்தையை கேட்டு காத்துக்கொள்பவன் விசுவாசி லூக்கா 11 : 28

நற்செய்தி அறிவிக்கிறவன் விசுவாசி அப் 12 : 14.

1 . குஷ்டரோகிகள் நற்செய்தி சொன்னார்கள் 2 இராஜா 7 : 9

2 . தாமதமில்லாமல் சுவிசேஷம் அப் 9 : 20

3 . சந்தோசமான நற்செய்தியை சொல்பவன் விசுவாசி லூக்கா 2 : 10

4 . மற்றவர்களுடன் பேசி நற்செய்தி சொல்லனும் லூக்கா 1 : 9

5 . இயேசு கிராமங்கள் தோறும் நற்செய்தி பிரசங்கித்தார். லூக்கா 8 : 1

ஆவிக்குரிய வாழ்வில் விழ வைக்கும் காரியங்கள்

தேவ பிள்ளைகளை விழ வைக்கும் சில காரியங்கள்:


1) அலப்புகிற வாய் விழ வைக்கும் – நீதி. 10:8.

2) புரட்டு நாவு விழ வைக்கும் – நீதி. 17:20.

3) இடும்பு உள்ளவன் விழுவான் – எரே. 50:32.

4) அக்கிரமம் செய்கிறவன் விழுவான் – ஒசி. 5:5.

5) இரு வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:18.

6) இருதயத்தை கடினப்படுத்துகிறவன் விழுவான் – நீதி. 28:14.

7) பொல்லாத வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:10.

8) மனமேட்டிமை விழ வைக்கும் – நீதி. 16:18.

9) தன் ஐஸ்வர்யத்தை நம்புகிறவன் விழுவான் – நீதி. 11:28.
==================

ஆண்டவருக்கு வேண்டிய கழுதை – பிரசங்க குறிப்புகள்

ஆண்டவருக்கு வேண்டிய கழுதை – பிரசங்கக் குறிப்புகள் லூக்கா19:31

1.கழுத்து முறிக்கப்படவேண்டிய கழுதை. (யாத்திராகமம் 13:13)
ஆட்டுக்குட்டியால் மீட்கபட்டது. யோவான் 1:21

2.வழியில் விழுந்த கழுதை (உபாகமம் 22:4)
அது தூக்கி எடுக்கப்பட்டது. (லூக்கா 14:5)

3.காணாமல் போன கழுதை (1சாமுவேல் 9:3,20)
அது தேடி கண்டு பிடிக்கப்பட்டது (லூக்கா15:4,32)

4 .இருவழி சந்தில் கட்டப்பட்ட கழுதை. (மத்தேயு21:2,7)
அது கட்டவிழ்க்கப்பட்டது. (மாற்கு 11:2,4)

5.கட்டவிழ்க்கப்பட்ட கழுதை. (ஆதியாகமம் 49:11)
அது நற்குல திராட்சை செடியில் கட்டப்பட்டது. (ஆதியாகமம் 49:11)

6.கர்த்தர் வாயை திறந்த கழுதை (எண்ணாகமம் 22:28,30)
அது தீர்க்கதரிசிக்கு புத்தி சொன்னது. (2 பேதுரு 2:15,16)

7.ஆண்டவர் இயேசுவை சுமந்து சென்ற கழுதை.
அது மகா பாக்கியம் பெற்ற கழுதையானது. (மத்தேயு 21:7)

இந்தியா தேசம் – குடியரசு தினம் பிரசங்க குறிப்புகள்

தேவன் நமக்கு தந்த இந்தியா தேசம் எப்படிப்பட்டது? இந்த பிரசங்க குறிப்பினை குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய முக்கிய தினங்களில் பிரசங்கிக்கலாம்.

தேசத்துக்காக நன்றி

1. கர்த்தர் கொடுத்த தேசம் உபாகமம் 8:1

2. கத்தர் பிரவேசிக்க பண்ணும் நல்ல தேசம் உபாகமம் 8:7

3. குறைவுபடாத தேசம் உபாகமம் 8:9

4.எல்லா ஆசீர்வாத ஊற்றுக்கள் புறப்படும் தேசம் உபா 8: 7

5. புசித்து திருப்தியாகி நல்ல வீடுகளை கட்டி குடியிருக்கும் தேசம் உபாகமம் 8:12

6. எல்லாம் பெருகி நம்மை வர்த்திக்கப்பண்ணும் உபாகமம் 8:13

7. கர்த்தரை ஸ்தோத்தரிக்க வைக்கும் தேசம் உபா 8 :10

இயேசு கிறிஸ்து யார்? பிரசங்க குறிப்புகள்

இயேசு கிறிஸ்து நானே என கூறிய உருவகங்கள் (யோவான் நூல்)

  1. நானே ஜீவ அப்பம் நானே – 6:35
  2. நானே உலகிற்கு ஒளி – 9:5
  3. நானே வாசல் – 10:9
  4. நானே நல்ல மேய்ப்பன் – 9:11
  5. நானே உயிர்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன் – 11:25
  6. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் – 14:6
  7. நான் மெய்யான திராட்சை செடி – 15:1

தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

1) தேவன் நோவாவை காப்பாற்றிய போது வயது 600. நீதிமானாக இருந்த நோவாவை நீரில் மூழ்காமல் இருக்கும் கப்பல் கட்டும் பொறியாளனாக தேவன் பயன்படுத்தினார்.

2) தேவன் ஆபிரகாமை கானான் தேசம் அழைத்த போது வயது 75. விக்கிரக ஊரில் கணவனாக இருந்தவனை #கானான் அழைத்து விசுவாச தகப்பன் ஆக்கினார்.

3) தேவன் இஸ்ரவேலரை விடுதலையாக்க மோசேயை அழைத்த போது வயது 80. ஆடு மேய்த்தவனை இருபது லட்சம் மனிதர்களை மேய்க்கும் தலைவன் ஆக்கினார்.

4) தேவன் காலேப்பை நிலத்தினால் ஆசீர்வதித்த போது 85 வயது. 40 வருஷம் கால்நடையாக நடந்தவனுக்கு மலைதேசம் கொடுத்து கானானின் குடிமகனாக்கினார்.

5) அன்னாள் 84 வயதானபோது கைம்பெண்ணாக இருந்தவளை தீர்க்கதரிசி ஆக்கினார்.

6) சகரியா – எலிசபெத் வயதான பின்பும் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தையை கொடுத்தார்.

முதியவர்களையும் தனது பணிக்கு பயன்படுத்தியவர் தான் நம் தேவன்.