• Tuesday 15 July, 2025 11:27 PM
  • Advertize
  • Aarudhal FM

நான் சேவிக்கிற கர்த்தர்

அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;

1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்.

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

3.முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.

4.பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்

சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்

யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

6.உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

கர்த்தரை சேவித்தால் கிடைக்கும் நன்மைகள்

1. நிச்சயமாகவே பலன் உண்டாகும்

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2.பிதாவானவர் கனம்பண்ணுவார்

யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

3. கர்த்தர் விடுவிப்பார்

தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
வட இந்திய ஊழியத்திற்க்கு உதவ வாஞ்சையுள்ளோர் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
Mobile no – 9437328604

ஆவிக்குரிய வாழ்வில் விழ வைக்கும் காரியங்கள்

தேவ பிள்ளைகளை விழ வைக்கும் சில காரியங்கள்:


1) அலப்புகிற வாய் விழ வைக்கும் – நீதி. 10:8.

2) புரட்டு நாவு விழ வைக்கும் – நீதி. 17:20.

3) இடும்பு உள்ளவன் விழுவான் – எரே. 50:32.

4) அக்கிரமம் செய்கிறவன் விழுவான் – ஒசி. 5:5.

5) இரு வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:18.

6) இருதயத்தை கடினப்படுத்துகிறவன் விழுவான் – நீதி. 28:14.

7) பொல்லாத வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:10.

8) மனமேட்டிமை விழ வைக்கும் – நீதி. 16:18.

9) தன் ஐஸ்வர்யத்தை நம்புகிறவன் விழுவான் – நீதி. 11:28.
==================

இந்தியா தேசம் – குடியரசு தினம் பிரசங்க குறிப்புகள்

தேவன் நமக்கு தந்த இந்தியா தேசம் எப்படிப்பட்டது? இந்த பிரசங்க குறிப்பினை குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய முக்கிய தினங்களில் பிரசங்கிக்கலாம்.

தேசத்துக்காக நன்றி

1. கர்த்தர் கொடுத்த தேசம் உபாகமம் 8:1

2. கத்தர் பிரவேசிக்க பண்ணும் நல்ல தேசம் உபாகமம் 8:7

3. குறைவுபடாத தேசம் உபாகமம் 8:9

4.எல்லா ஆசீர்வாத ஊற்றுக்கள் புறப்படும் தேசம் உபா 8: 7

5. புசித்து திருப்தியாகி நல்ல வீடுகளை கட்டி குடியிருக்கும் தேசம் உபாகமம் 8:12

6. எல்லாம் பெருகி நம்மை வர்த்திக்கப்பண்ணும் உபாகமம் 8:13

7. கர்த்தரை ஸ்தோத்தரிக்க வைக்கும் தேசம் உபா 8 :10

தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

1) தேவன் நோவாவை காப்பாற்றிய போது வயது 600. நீதிமானாக இருந்த நோவாவை நீரில் மூழ்காமல் இருக்கும் கப்பல் கட்டும் பொறியாளனாக தேவன் பயன்படுத்தினார்.

2) தேவன் ஆபிரகாமை கானான் தேசம் அழைத்த போது வயது 75. விக்கிரக ஊரில் கணவனாக இருந்தவனை #கானான் அழைத்து விசுவாச தகப்பன் ஆக்கினார்.

3) தேவன் இஸ்ரவேலரை விடுதலையாக்க மோசேயை அழைத்த போது வயது 80. ஆடு மேய்த்தவனை இருபது லட்சம் மனிதர்களை மேய்க்கும் தலைவன் ஆக்கினார்.

4) தேவன் காலேப்பை நிலத்தினால் ஆசீர்வதித்த போது 85 வயது. 40 வருஷம் கால்நடையாக நடந்தவனுக்கு மலைதேசம் கொடுத்து கானானின் குடிமகனாக்கினார்.

5) அன்னாள் 84 வயதானபோது கைம்பெண்ணாக இருந்தவளை தீர்க்கதரிசி ஆக்கினார்.

6) சகரியா – எலிசபெத் வயதான பின்பும் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தையை கொடுத்தார்.

முதியவர்களையும் தனது பணிக்கு பயன்படுத்தியவர் தான் நம் தேவன்.

வேதத்தில் என்னென்ன மாடுகள் இருக்கிறது தெரியுமா?

வேதத்தில் உள்ள மாடுகள்

1) அடிக்கபடும்படி செல்லும் மாடு (நீதி 7:22) = தேவ ஜனங்கள் அடிக்கபடுகிற மாடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப் 8:32). தம்முடைய அடிச்சுவடியை தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார்( 1 பேது 2:21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14:22)

2) புல்லை தின்னும் மாடு (ஏசா 1:3) = மாடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங் 1:3)

3) எருது பலமுள்ளது (சங் 144:14) = வசனத்தை தியானிக்க தியானிக்க பெலன் அடைகிறோம். சீயோனில் தேவ சந்ததியில் காணப்பட பெலன் தேவை (சங் 84:7)

4) நிலத்தை உழுகிற எருது (ஏசா 30:24) = இது தேவ சித்தத்தை காட்டுகிறது.

5) சர்வாங்க தகனபலியான மாடு (எண்ணாக 7-35) = நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோ 12:1

6) மேய்ப்பனை குறித்து அறிந்த மாடு (ஏசா 1:3) = மாட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங் 23:1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்.

7) மாடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள இடத்தில் மேயும் (ஏசா 30:23) = அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது. சத்தியத்தை கேட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும்

8) ஒய்வு நாளில் வேலை செய்யாத மாடுகள் (யாத் 23:12) = தேவபிள்ளைகள் ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது (ஏசா 58:13). ஏனென்றால் ஒய்வு நாள் கர்த்தருக்குரியது. Seventh day Adventist கார்ர்கள் ஓய்வு நாளுக்கான சாப்பாட்டை ஒரு நாள் முன்னாடியே (புளியோதரை, லெமன்) ஆயத்தம் செய்து விடுவார்கள். ஒய்வு நாள் அன்று வீட்டில் சமையல் கூட செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்ல சில கிறிஸ்தவ குடும்பங்களில் Sunday பிளளைகளை படிக்ககூட அனுமதிக்க மாட்டார்கள். பரிசுத்த ஒய்வு நாளில் உங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்படாதிருங்கள். ஒய்வு நாளில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லுதல், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுதல், களியாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்க்கவும். இந்த நாளை கர்த்தருக்கென்று பிரித்து வைத்து கர்த்தருக்குள் மகிழ்ந்து இருங்கள்
ஒய்வு நாளை கனப்படுத்தினால் நாம் ஆசிர்வதிக்கபடுவோம் (ஏசா 53:14) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக (யாத் 20:8)

9) நுகத்தை சுமக்கும் மாடு (மத் 11:29) = இது தாழ்மையான ஜிவியத்தை காட்டுகிறது. இயேசுவும் மாட்டை போல ஜிவித்து இருக்கிறார் (என் நுகத்தை ஏற்றுக் கொண்டு – மத் 11:29)

10) மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும் = இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை காட்டுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசி 3:18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.

11) களஞ்சியங்களை நிரப்பும் எருது (நீதி 14:4) = சபை ஆத்துமாக்களால் நிரப்பபட வேண்டும். ஜனங்கள் இரட்சிக்கபட நாம் அவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

ஜெபத்தில் எது இருக்க வேண்டும்? எது இருக்க கூடாதது? முக்கியமான குறிப்புகள்

என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கையிலும் என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும் அப்படியாயிற்று. யோபு 16 : 17

தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். அநேகரது ஜெபம் கேட்கப்படவில்லை காரணம் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள் அறியாமல் இருப்பதால் ஜெபம் கேட்கபடவில்லை. இந்தக் குறிப்பில் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்களையும் ஜெபத்தில் இருக்கக்கூடாத விஷயங்களையும் நாம் இதில்அறிந்துக்கொள்வோம்.

ஜெபத்தில் இருக்க வேண்டியவைகள்

1 .பாவ அறிக்கை
நெகே 1 : 4
தானி 9 : 4 , 20

2 . தாழ்மை
2 நாளாக 7 : 14

3 . பொருத்தனை
சங் 50 : 14 , 15

4 . தேவசித்தம்
1 யோவா 5 : 14

5 . இயேசுவின் நாமம்
யோவா 14 : 14,
யோவா 16 : 24

6 . விசுவாசம்
மாற்கு 11 : 24

7 . தேவன் பலன் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையோடுள்ள விசுவாசம். எபி 11 : 6

8 . ஸ்தோத்திரம்
பிலி 4 : 6

ஜெபத்தில் இருக்க கூடாதவைகள்

1 . அவிசுவாசம்
மாற்கு 9 : 22 , 23

2 . இச்சைகளை நிறைவேற்ற ஜெபித்தல்
யாக் 4 : 3

3 . இருமனம், சந்தேகம் யாக் 1 : 6 , 7

4 . சுயநலமாக கேட்காமல் தேவனுக்கென்று கேட்கவேண்டும்
உதாரணமாகஅன்னாள் ஜெபம்
1 சாமு 1 : 11

5 . சோர்வு லூக் 18 : 1

6 . பெருமை லூக் 18:11

7 .வீண்வார்த்தைகள்
யோபு 35 : 13
மத் 6 : 79 , 9

8 .மற்றவர்கள் குற்றத்தை மன்னிக்காத தன்மை மாற் 11 : 25

இந்தக் குறிப்பில் ஜெபத்தில் இருக்க வேண்டியவைகளும் இருக்கக்கூடாதவைகளையும் குறித்து
இதில் சிந்தித்தோம்

ஆமென் !