நாகையில் அரசு காப்பகத்தில் ஒரே நாளில் 8 சிறுமிகள் மாயம்; கடத்தல் கும்பல் கைவரிசை?
Aug 3, 2024, 3:05 PM
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அடுத்த சாமந்தான்பேட்டை பகுதியில் தமிழக அரசின் சத்யா அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவிகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 11ம் வகுப்பு படிக்கக் கூடிய 8 மாணவிகள் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து காப்பகத்திற்கு வரவேண்டிய குழந்தைகள் வரவில்லை.
சிறிது நேரம் காத்திருந்த விடுதி காப்பாளர் சக மாணவிகளிடம் இது குறித்து விசாரித்துள்ளார். ஆனால், அதில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளி, விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே மாயமான மாணவிகள் சென்னையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அன் அடிப்படையில் சென்னை சென்று மாணவிகளிடம் விசாரித்தபோது, விடுதி காப்பாளர் திட்டியதால் சென்னைக்கு சென்றதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மீட்கப்பட்ட மாணவிகள் அனைவரும் இன்று மாலை மீண்டும் நாகைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
thakns to asianet news tamil