• Tuesday 1 July, 2025 10:30 PM
  • Advertize
  • Aarudhal FM

இந்திய வேதாகம சங்கத்தின் புதிய அப்டேட் பைபிள் மொழிபெயர்ப்பு

இந்திய வேதாகம சங்கத்தின் புதிய அப்டேட் பைபிள் மொழிபெயர்ப்பு

எதற்காக இதை நாம் பயன்படுத்த வேண்டும்…

காரணங்களை அறிந்து கொள்வோம்

  • Re – Edited Version (நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பின் Updated Translation)

மிக முக்கியமானதை மட்டுமே,
அதுவும் மிகவும் எளிமையாக படிப்பதற்காக,
Point by Point -ஆகவே பதிவு செய்திருப்பதால், இறுதி வரை கண்டிப்பாக வாசிக்கும் படியாக அன்போடு வேண்டுகிறேன் 🙏🏻

முதலாவது :
✨ பரிசுத்த வேதாகமத்தை மாற்றுதல் என்பது வேறு.
✨ பரிசுத்த வேதாகமத்தின் நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதற்காக, இன்னும் சிறப்பாக Update செய்வது என்பது வேறு.

  • என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உன்னதமான தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையாகிய : பரிசுத்த வேதாகமம் 💯% Perfect.
ஒருவராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது.

  • கர்த்தருடைய வார்த்தை : எப்போதுமே மாறாதது.

ஆகவே,
Translation Updation என்பது வேறு.
அது தவிர்க்கவே முடியாத காலத்தின் கட்டாயம்.

  • ஏனென்றால் : ஒரு மொழி என்பது காலா காலத்திற்கும் : எழுத்துகளிலும், வார்த்தைகளிலும் & பேச்சு வழக்கிலும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக, நம்முடைய தமிழ்நாட்டில் மிஷினரிகள் (சீகன் பால்க் முதல் பல மிஷினரிகள்) கர்த்தருடைய வார்த்தையை :
அடுத்தடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டு போய் சேர்ப்பதில் மிக கவனமாக செயல்பட்டார்கள்.

ஆகவே, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பு 150 ஆண்டுகளுக்கு மேலாக எந்த Updation -ம் இல்லாமல் இருப்பதால்,

இப்போது இருக்கிற இளம் தலைமுறை முதல் வருகிற அடுத்த தலைமுறைக்கும் கர்த்தருடைய வார்த்தையை கவனமாக, சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய மிகக் கட்டாயமான அவசியத்தை உணர்ந்து,

❤️ Bible Society of India (BSI) தற்போது நம்முடைய இந்த தமிழ் மொழிபெயர்ப்பை Updation செய்து வெளியிட்டு இருப்பது :

  • மெய்யாகவே கர்த்தருடைய மாபெரும் கிருபையே !….

💥 Translation Updation -ல் 5 மிக முக்கிய அம்சங்கள் உள்ளன.

  • ✨ 1). எழுத்துகளில் Updation
  • ✨ 2). வார்த்தைகளில் (By Words) Updation
  • ✨ 3). இலக்கண பிழைகளை சரிசெய்து, Grammatical Mistakes Correction & Updation
  • ✨ 4). வசனங்களின் Concept -ல் உள்ள பிழைகளை சரிசெய்து Concept Accuracy Updation
  • ✨ 5). சிறப்பு அம்சங்களில் உள்ள Updations

❤️ 1). எழுத்தில் Updation :

உதாரணத்திற்கு :
லை என்ற எழுத்து நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பில், பழைய எழுத்து, அதாவது : என்ற எழுத்தில் ஒரு சுழி இருக்கும்.
அது : லை – என்று, மாற்றமடைந்து பல ஆண்டு காலமாகிறது.

  • என் பிள்ளைகளே கேட்டார்கள். தமிழில் இப்படி ஒரு எழுத்து இல்லவே இல்லையே – என்று !….
  • இப்போது, இந்த Updated Translation -ல் இது அனைத்தும் (இதே போலவே : “னை” – என்ற எழுத்தும்) சரி செய்யப்பட்டு விட்டது.

இப்படி இன்னும் பல…. (Tamil Font -ம் எளிதாக படிப்பதற்கு ஏதுவான Font -ஐ தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்).

❤️ 2). வார்த்தைகளில் Updation :

🔥 ஜாதி – என்ற மிகத் தவறான வார்த்தை : முற்றிலும் களையப்பட்டு அதற்கு பதிலாக :

  • தேசங்கள், மக்களினம் என்ற சரியான வார்த்தை Update செய்யப்பட்டு இருக்கிறது (“புறஜாதிகள்” – என்ற வார்த்தை : “பிற ஜனத்தார்” என்று சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது).

மேலும், இஸ்ர வே ல் என்ற வார்த்தை :
எபிரேய உச்சரிப்பில் உள்ளபடி :

  • இஸ்ர யே ல் (ஏல்) என்று சரியான உச்சரிப்பில் Update செய்யப்பட்டு இருக்கிறது.
  • இஸ்ம வே ல் – இஸ்ம யே ல் (ஏல்)
  • மிகா வே ல் – மிகா யே ல் (ஏல்)
    என்று மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், புரியவே புரியாத பல வார்த்தைகள் மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது :

யோபு – 33 : 23 -ல் :

  • சாமாசி பண்ணுகிற தூதனானவர் – என்ற புரியாத வார்த்தை :
  • மத்தியஸ்தம் (Mediate) பண்ணுகிற தூதனானவர் – என்று மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

நீதிமொழிகள் 25 : 12 :

  • அபரஞ்சிப் பூஷணம் என்ற புரியாத வார்த்தை :
  • பசும்பொன் ஆபரணம் – என்று மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

ஆதியாகமம் – 42 : 23 -ல் :

  • துபாசி என்ற புரியாத வார்த்தை :
  • மொழிபெயர்ப்பாளன் (Translator – interpreter) – என்று மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

லேவியராகமம் – 4 : 9 (இன்னும் பல வசனங்களில் உள்ள) :
மிகவும் கொச்சையாக இருக்கிற வார்த்தை :

  • சிறுநீரகங்கள் (Kidneys) – என்று, மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

✨ மேலும், பல வசனங்களில் உள்ள :

  • அகத்தியமாய் – என்ற புரியாத வார்த்தை :
  • அவசியமாய் / நிச்சயமாய் – என்று, சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படி இன்னும் பல….

  • சுருக்கம் கருதி இத்துடன், இதை முடிக்கிறேன்.

❤️ 3). இலக்கண பிழைகளை சரிசெய்து, Grammatical Updation :

உதாரணத்திற்கு :
ஒருமை, பன்மை (Singular, Plural) பிழைகள் பல இடங்களில் சரி செய்யப்பட்டு இருக்கிறது.

  • லூக்கா – 2 : 32 :
  • என் கண்கள் கண்ட து – என்பதை :
  • கண்ட – என்று,
  • இலக்கண பிழை சரி செய்யப்பட்டு, Grammatical Updation -ம் செய்யப்பட்டு இருக்கிறது.

❤️ 4). வசனங்களின் Concept -ல் மிகச்சரியான (Accuracy) Updation :

உதாரணத்திற்கு :
ரோமர் – 5 : 20 -ல் :

  • மீறுதல் பெருகும் படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது – என்று, (பாவம் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் வேதத்தை கொடுத்தார் – என்று மிக அபத்தமான அர்த்தம் ஆகக்கூடிய மாபெரும் Blunder Mistake -ஆக இருப்பது : மிகச் சரியாக :
  • நியாயப்பிரமாணம் வந்தபடியால் மீறுதலின் மிகுதி தெரிந்தது – என்று மிகச் சரியாக Accurate -ஆக Update செய்யப்பட்டு இருக்கிறது.

நீதிமொழிகள் – 16 : 4

  • தீங்குநாளுக்காக துன்மார்க்கனையும் “உண்டாக்கினார்” – (கர்த்தருடைய படைப்பின் நோக்கமே தவறான நோக்கமுடையது என்ற அபத்தமான அர்த்தம் ஆகக்கூடிய) Blunder Mistake -ஆக இருப்பது :
  • தீங்குநாளுக்காக துன்மார்க்கனையும் “வைத்திருக்கிறார்” – மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

யோவான் – 8 : 23 -ல் :

  • நான் உயர்விலிருந்துண்டானவன் (ஆண்டவராகிய இயேசுவும் படைக்கப்பட்ட ஒரு படைப்பு தான் – என்று, அவரே சொல்கிறாரே : என்று, மிகத் தவறான, அபத்தமான அர்த்தம் ஆகக்கூடிய) Blunder Mistake -ஆக இருப்பது :
  • நான் மேலேயிருந்து வந்தவர் – என்று மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படி, இன்னும் பல வசனங்களில், பிழையாக இருப்பது : சரி செய்யப்பட்டு மிகச் சரியான Updations செய்யப்பட்டு இருக்கிறது.

  • சுருக்கம் கருதி, இத்துடன் முடிக்கிறேன்.

5). சிறப்பு அம்சங்களில் Updation :

✨ அடிக்குறிப்புகள்,
✨ இணைவசனங்கள்,
✨ ஒவ்வொரு புத்தகத்திற்கும் முன்னுரை (அந்த புத்தகத்தின் கருப்பொருள், முக்கிய நபர்கள், முக்கிய பகுதிகள் போன்றவை)
✨ ஒவ்வொரு சம்பவங்களுக்கும், பகுதிகளுக்கும் ஏற்ற தலைப்புகள்
✨ ஒவ்வொரு சம்பவமும், பகுதிகளும் : இதே சம்பவம், இதே பகுதி : பரிசுத்த வேதாகமத்தின் மற்ற புத்தகத்திலும் எங்கிருக்கிறது என்ற Reference அந்தந்த தலைப்புகளுக்கு கீழேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

உதாரணத்திற்கு :
🔥 மத்தேயு – நற்செய்தியை படிக்கும் போது அதில் 3 -ஆம் அதிகாரத்தில் -13 முதல் 17 வசனங்கள் வரையுள்ள : இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் – சம்பவம்

  • மற்ற சுவிசேஷங்களில் எங்கிருக்கிறது என்ற Reference :
  • அந்த தலைப்பின் கீழேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.

✨ மேலும், பல வார்த்தைகளுக்கான விளக்கங்கள் :

  • அடிக்குறிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உதாரணத்திற்கு :
மத்தேயு – 23 : 5 -ல் :

  • காப்பு நாடா என்பதின் விளக்கத்தை :
  • அடிக்குறிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

✨ மேலும் : மூன்றாம் மணி நேரம், ஒன்பதாம் மணி நேரம் என்றால் :

  • நம்முடைய நேரப்படி அது எந்த நேரம் என்பதும்,

மத்தேயு – 14 : 25 -ல் :

  • நான்காம் ஜாமம் – என்றால் அது எந்த நேரம் என்கிற விளக்கம் :
  • அதே Page -ன் அடிக்குறிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

❤️ மேலும், இறுதிப்பகுதியில் :
பிற் சேர்க்கைகள் – என்ற பகுதியில் :

  • அருஞ்சொல் அகராதி என்ற தலைப்பில் :
  • பல வார்த்தைகளுக்கான விளக்கங்கள் உள்ளன.
  • உதாரணத்திற்கு : “அம்பறாத்தூணி” – என்றால் என்ன ? என்ற வார்த்தைக்கான விளக்கம்.

✨ பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் நடந்த வரலாற்று சுருக்கம்
✨ வேதாகம காலக் கணிப்பு – புதிய வரைபடங்கள்

போன்ற இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளிவந்திருக்கிறது :

  • இந்த : Re – Edited Version

My Final Conclusion :

  • இதை வேறு ஏதோ ஒரு மொழிபெயர்ப்பு என்று நினைத்து விடக் கூடாது.

💥 இது நம்முடைய கையில், நாம் வைத்திருக்கிற நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பின் Updation தான் இந்த Re – Edited Version

  • என்பதை நாம் சரியாக புரிந்து கொண்டு,

இதை வாங்கி நாம் பயன்படுத்துவதன் மூலம்,

  • இப்போது இருக்கிற நம்முடைய இளம் தலைமுறைக்கும்,
  • வரப்போகிற அடுத்த தலைமுறைக்கும் மிகச் சரியாக நம்முடைய பரிசுத்த வேதாகமத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்முடைய மாபெரும் தலையாயக் கடமை என்பதின் Seriousness மிகத் துல்லியமாக நமக்கு புரியும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன் !

By Bro. Muthu Kumar copy-Yaso

பரிசுத்த வேதாகமத்தில் சிறுவரின் பங்கு

1.‌சிறுவனாகிய சாமுவேல்

தரிசனத்தை அறிவிக்க கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலைப் பயன்படுத்தினார்
1சாமுவேல் 3:4,6,8,10,21

2.‌சிறுவனாகிய சாலொமோன்

நியாயத்தை விசாரிக்க கர்த்தர் சிறுவனாகிய சாலொமோனைப் பயன்படுத்தினார்
1இராஜாக்கள் 3:5-15

3.‌சிறுவனாகிய எரேமியா

ஜாதிகளுக்கு தீர்க்கத்தரிசியாக கர்த்தர் சிறுவனாகிய எரேமியாவைப் பயன்படுத்தினார்
எரேமியா 1:1-7

4.‌சிறுமியாகிய அடிமைப் பெண்

நாகமான் குஷ்டரோகம் நீங்கி சுகமடைய கர்த்தர் சிறுமியாகிய அடிமைப்பெண்ணைப் பயன்படுத்தினார்
2இராஜாக்கள் 5:1-16

5.‌சிறுவனாகிய பையன்

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுக்க கர்த்தர் சிறு பையனைப் பயன்படுத்தினார் யோவான் 6:1-14

அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்

மடிக்கணிணி /செல்லிடப்பேசி மூலமாக வேத வசனத்தை வாசித்து பிரசங்கிக்கிறார்கள். இது சரிதானா?

பதில்: தவறில்லை. முழுவேதமும்,வேத அகராதிகளும் லேப் டாப்பில் காணப்படுகிறது. வாசிக்கிறதற்கு ஆராய்வதற்கு லேப்டாப் டேபிளில்,மொபைலில் உள்ள வேத புத்தகம் பிரயோஜனப்படுகிறது. பெரிய வேத புத்தகத்தில் எடுத்து செல்வதற்கு பதில் உள்ளங்கை அளவிலே உள்ள மொபைலில் முழுவேதமும் பெரிய எழுத்துகளின் அதை அகலப்படுத்தி வாசிக்கமுடிகிறது.

நவீன காலத்துக்கு ஏற்ப அப்படிப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது நல்லது. அந்த காலத்தில் பவுல் எருசலேம் முதல் இல்லிரக்கம் வரை நடந்து பிரயாணம் செய்து ஊழியம் செய்தான். இந்த காலத்திலும் இத்தனை வாகன வசதிகள் உள்ள காலத்தில் பவுலைப்போல நான் நடந்துதான் போய் ஊழியம் செய்வேன் என்பது முட்டாள்தனம். ஊழியத்துக்கு வாகனங்களை நவீன கருவிகளை பயன்படுத்துவதில் தவறில்லை.

ஆனால் மனிதர் பார்வையில் வேத புத்தகத்திலிருந்து தான் நான் பிரசங்கிக்கிறேன் என்று மக்கள் உணர லேப் டாப் உபயோகித்தாலும், அருகே வேத புத்தகத்தை மக்கள் பார்வையில் வைப்பது நல்லது என்னதான் நவீன கருவிகள் முழு வேதமும் கிடைத்தாலும் வேத புத்தகத்தை திறந்து வாசிப்பதுபோல் ஒரு சந்தோஷம். பயபக்தி,லேப்டாப்பிலோ, மொபையிலிலோ டேபிலட்டிலோ நிச்சயம் கிடைக்காது.

தயவுசெய்து புறமதத்தினர்களிடம் ஊழியத்துக்குபோகும்போது கை வேத புத்தகத்தை எடுத்துப்போவதே நல்ல சாட்சியாகும்.

thanks to தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்