• Wednesday 22 January, 2025 06:40 AM
  • Advertize
  • Aarudhal FM

நாம் செய்யும் பிரசங்கம் எப்படி இருக்கிறது

இளம் தலைமுறை ஊழியர்களின் பிரசங்கங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன… தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அது துக்கத்தையே ஏற்படுத்துகிறது…..

ஆ…….. ஐ……….. ஊ…… ன்னு கத்துராய்ங்க…. மைக்கை உதட்டில் வைத்து கொண்டு ரிசீவ் பவர்…. ன்னு ஓயாமல் சொல்லி…. சொல்லி கழுதை போல கனைக்கிறார்கள்…. அதிலும் ஒரு பக்கம் ஒன் டு ரிதம் போட்டு காட்டு கத்தம் கத்தி…. ஹார்ட் அட்டாக் வராதவனுக்கெல்லாம் வந்திரும் போல…… டேய் என்னடா பண்றீங்க ன்னு உலகத்தாரின் பரியாசத்திற்கும் கேலி கிண்டலுக்கும் உரியதாக மாறுகிறது.

பிரசங்கம் செய்யும் போது மேடையில் அங்கும் இங்கும் வெறி பிடித்த நாயை போல அலைகிறார்கள்…. ஏன் என்று தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்று கொண்டு நிதானமாக பேசினால் என்ன…. இதை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.நிதானமாக அழகாக தெளிவாக பேசலாமே… ரொம்பவே வேகம் வேகமாக பேசுகிறார்கள்…. அது மக்கள் மனதில் எப்படி நிற்கும். நிதானமாக பேசினால் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் இருக்கும். அது கிரியை செய்யும்.

எடுக்கிற வசனத்திற்கும் பிரசங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை… ஏதோ ஒரு வசனத்தை வைத்து பேசுகிறார்கள்…தேவ சமூகத்தில் கிடைக்கும் மன்னா இன்று மண்ணாகி போனது.

மற்ற ஊழியர்களுக்கு கீழ் உட்கார்ந்து கற்றுக் கொள்ள ஆசை இல்லை… மற்றவர்களின் பிரசங்கத்தை கேட்பதும் இல்லை மதிப்பதும் இல்லை…

மொத்தத்தில் வசனத்தை தெளிவாக பேசும் ஊழியர்கள் தேசத்தில் குறைந்து விட்டார்கள்.காரணம் வேதம் வாசிக்கும் தியானிக்கும் பழக்கம் ஊழியர்களிடம் இப்போது குறைந்து விட்டது.

அவரவர்களுக்கு ஏற்றப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அதை குறித்து அவர்கள் எவருக்கும் பயப்படுவதில்லை.

நாம் செய்யும் பிரசங்கத்தில்…

இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட வேண்டும்.
இரட்சிப்பு
மனந்திரும்புதல்
உயிர்மீட்சி
புதுப்பிப்பு
சுத்திகரிப்பு
இயேசு கிறிஸ்துவின் வருகை
ஆத்தும ஆதாயம்
ஞானஸ்நானம்
பரிசுத்தத்தின் அவசியம்.
சபையின் நோக்கங்கள்
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்.. அதன் முக்கியத்துவம்.
பரலோகம்
தூதர்களின் பணிகள்
சாத்தானின் பொய்களும் அவனது தந்திரங்கள் என்னென்ன…
அவனின் முடிவு எப்படி இருக்கும்.
நரகம் பாதாளம்… யாருக்கு
கடைசி காலம் எப்படி இருக்கும்.

இப்படி அனைத்து சாரம்சமும் ஒரு பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஒரு பிரசங்கி என்பவன் ஒரு துப்பாக்கி வைத்து இருப்பவனை போல அல்ல.. யாரையாவது குறிவைத்து சுட…. மாறாக அவன் ஒரு பெரிய அணுகுண்டை கையில் வைத்திருக்கிறவனுக்கு சமானம். ஒரு அணுகுண்டுக்கு இருக்கும் வல்லமையை விட பிரசங்கத்திற்கு அதிகம் வல்லமை உண்டு. காரணம் எந்த அணுகுண்டும் சரீரத்தை உடைக்க முடியும் ஆனால் இருதயத்தை உடைக்க முடியாது. பிரசங்கம் மட்டுமே மனிதர்களின் இருதயத்தை உடைக்கும் வல்லமை படைத்தது. பிரசங்கிகள் தேவனின் வாயாக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரே அந்த பாத்திரத்தில் இருந்து பேசுகிறார். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பிரசங்கிகள்.

அது மட்டுமல்ல இப்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லாருடைய கையிலும் மொபைல் கேமாராவோடு உள்ளது. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம் ஆகவே மிகவும் கவனத்துடன் பிரசங்கம் செய்ய வேண்டும். இந்த கவனம் இல்லை என்று சொன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.

மொத்தத்தில் பிரசங்க மேடையில் தேவ பிரசன்னம் இல்லை…. தேவனுக்கு பயப்படும் பயம் இல்லை. ஏதோ ஒரு பட்டிமன்ற பேச்சாளர்களை போல பேசும் இவர்களை கொண்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை….

கர்த்தரை துதிப்பது

1) இன்பமானது – சங் 147:1
2) நல்லது – சங் 147:1
3) ஏற்றது – சங் 147:1
4) நலமானது – சங் 92:1,3
5) தகும் – சங் 33:1
6) கர்த்தருக்கு பிரியமானது – சங் 69:30,31
7) கர்த்தர் மகிமைபடுகிறார் – சங் 50:23

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1:4
2) உபத்திரவங்களில் – 2 தெச 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6:16
4) வியாதி நேரத்தில் – யாக் 5:15
5) ஜெபிக்கும் போது – மத் 21:21
6) இருதயம் கலங்கும் போது – யோ 14:1

யாரை கனம் பண்ண வேண்டும் ?

1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17

பரிசுத்த வேதாகமத்தில் சிறுவரின் பங்கு

1.‌சிறுவனாகிய சாமுவேல்

தரிசனத்தை அறிவிக்க கர்த்தர் சிறுவனாகிய சாமுவேலைப் பயன்படுத்தினார்
1சாமுவேல் 3:4,6,8,10,21

2.‌சிறுவனாகிய சாலொமோன்

நியாயத்தை விசாரிக்க கர்த்தர் சிறுவனாகிய சாலொமோனைப் பயன்படுத்தினார்
1இராஜாக்கள் 3:5-15

3.‌சிறுவனாகிய எரேமியா

ஜாதிகளுக்கு தீர்க்கத்தரிசியாக கர்த்தர் சிறுவனாகிய எரேமியாவைப் பயன்படுத்தினார்
எரேமியா 1:1-7

4.‌சிறுமியாகிய அடிமைப் பெண்

நாகமான் குஷ்டரோகம் நீங்கி சுகமடைய கர்த்தர் சிறுமியாகிய அடிமைப்பெண்ணைப் பயன்படுத்தினார்
2இராஜாக்கள் 5:1-16

5.‌சிறுவனாகிய பையன்

ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுக்க கர்த்தர் சிறு பையனைப் பயன்படுத்தினார் யோவான் 6:1-14

அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்

நமக்காக கர்த்தர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

பிரசங்கி 4:1; புலம்பல் 1:2,9,17,21
ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை.
ஏசாயா 66:13
தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
சங்கீதம் 94:19 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 142:4; எசேக்கியேல் 34:6
விசாரிப்பார் ஒருவருமில்லை
1பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 68:5

3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 69:20
பரிதபிக்கிறவன் ஒருவனும் இல்லை
சங்கீதம் 135:14; உபாகமம் 32:26
ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். மத்தேயு 15:32
இயேசு: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் (5 அப்பம் 2 மீன்)

4. நன்மைசெய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அப்போஸ்தலர் 10:38
நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
லூக்கா 6:35
அவர் நன்றியறியாதவர்களுக்கும் நன்மை செய்கிறாரே

5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

எசேக்கியேல் 22:30
தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்… ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
1யோவான் 2:1
இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசு…
லூக்கா 23:34
இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.

6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 63:5
துணை செய்வார் ஒருவனும் இல்லை;
ஏசாயா 50:7,9
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5; 115:10-11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13-14

7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 59:16
ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை
ரோமர் 8:34
நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே
யோவான் 17:1,9,15,20இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார்

ஆவியினாலே

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் எபே 3: 16

1 . ஆவியினாலே ஆராதனை செய்யுங்கள். பிலி 3 : 3, எபே 5 : 18 — 21, 6: 18, 1 கொரி 14 : 14 – 16, யூதா 1 : 20

2 . ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படியுங்கள் 1 பேது 1 : 22

3 . ஆவியினாலே சரீரத்தின் கிரியை அழியுங்கள் ரோமர் 8 : 13

4 . ஆவியினாலே உள்ளான மனுஷரில் பலப்படுங்கள் எபே 3 : 16.

5 . ஆவியினாலே அனலாயிருங்கள் ரோம 12 : 11, அப் 18 : 5

6 . ஆவியினாலே நிருணயம் பண்ணுங்கள் அப் 19:21

7 . ஆவியினாலே நடத்தப்படுங்கள் ரோம 8 : 14

8 . ஆவியினாலே காத்துகொள்ளுங்கள். 2 தீமோ 1 : 14, 1 யோவா 3 : 24

9 . ஆவியினால் வைராக்கியமாயிருங்கள். அப் 17 : 16 , 18 : 5

10 ஆவியினாலே பிரசங்கியுங்கள் 1 பேது 1 : 12, 2 பேது 1 : 21, அப். 4 : 1 , 31, 6 : 5, அப் 13 : 9

இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ விசுவாசி எப்படிபட்டவராக இருக்கவேண்டும்

  1. 👉 நற்போதகத்தில் தேறினவனாயிருக்க வேண்டும். — 1Tim 4:6
  2. 👉🏾 நற்கந்தமாய் ஜீவிக்க வேண்டும். — Luk 1:19
  3. 👉 நற்சாட்சியாக இருக்கவேண்டும். — Act 6:3 / Act 16:2 / Luk 4:22
  4. 👉🏾 நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டும். — Act 17:11 / Rom 15:14 / Gal 5:22 / Eph 5:9
  5. 👉 நற்கனி கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும். — Jas 3:17 / John 15:8
  6. 👉🏾 நற்கிரியை செய்கிறவர்களாயிருக்க வேண்டும். — _Matt 5:16 / Matt 26:10 / Col 1:10 / 1Tim 2:10 / 1Tim 5:10
  7. 👉 நற்செய்தி அறிவிக்கிறவர்களாயிருக்க வேண்டும். — Luk 1:19 / Luk 2:10 / Luk 8:1 / 1Thess 3:6 / 2King 7:9 / Rom 10:14- 15 / Rom 1:14-16
  8. 👉🏾 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவனாக இருக்க வேண்டும். — Ps 15:2
  9. 👉 கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். — Rom 16:19
  10. 👉🏾 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாக இருக்க வேண்டும். — Phil 2:15
  11. 👉 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல் இருக்க வேண்டும். — 2Cor 1:12
  12. 👉🏾 தேவபக்தியுள்ளவனாக இருக்க வேண்டும். — Acts 10:2
  13. 👉 தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்கிறவராக இருக்க வேண்டும். — Acts 10:2
  14. 👉🏾 சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவர்களாவும் இருக்க வேண்டும். — Acts 22:12
  15. 👉 தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறவர்களாக இருக்கவேண்டும். — 2Cor 2:17
  16. 👉🏾 அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திரவர்களாக இருக்க வேண்டும். — Acts 2:42
  17. 👉 நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். — Tit 2:14 / Tit 3:8
  18. 👉🏾 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் இருக்க வேண்டும். — Luk 12:37
  19. 👉 இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். — Matt 5:8
  20. 👉🏾 கிறிஸ்துவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, கிறிஸ்துக்கு பின்செல்லுகிறவராக இருக்க வேண்டும். — John 10:27

தைரியமாயிரு

கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக.. 2சாமுவேல் 10:12

கலங்கி போய் இருக்கிறீங்களா… மனதில் அமைதி இல்லாமல் காணப்படுறீர்களா… என் காரியத்தை குறித்து யார் எனக்காக செயல்படுவார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா..மனம் தளர்ந்து சோர்ந்து போய் இருக்கிறீங்களா.. கவலைப்படாதீங்க.. உங்கள் பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார்..தைரியமாயிரு என்று ஆண்டவர் உரிமையோடு உங்களை பார்த்து சொல்லுகிறார்..நீங்க நன்றாக இருக்க வேண்டும் என்று மனிதன் நினைக்க மாட்டான் ஆனால் நீங்க நன்றாக இருக்கவேண்டும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிறவர் ஆண்டவர் மட்டுமே.. உங்கள் காரியம், தொழில், வேலை, ஊழியம் எல்லாவற்றிலும் நலமானதை செய்வார்.. சோர்ந்து போகாதீங்க.. ஆண்டவரின் பார்வைக்கு நலமானதை உங்க வாழ்க்கையில் செய்வார்.. உங்களை சந்தோஷப்படுத்துவார்.. ஆண்டவரை மாத்திரம் நோக்கி கூப்பிடுங்க.செல்வின் 👉🏻

ஆசீர்வாதங்கள்

ஆதி-26:1-35.இதில் ஈசாக்கு பெற்றமூன்று ஆசீர்வாதங்கள்உள்ளது.நாமும் அவைகளைப் பெற்றுக்கொள்ளதேவன் கிருபை செய்வாராக!

1-நூறு மடங்கு ஆசீர்வாதம்-ஆதி-26:12,1-13.இங்கே ஈசாக்கு நூறுமடங்கு பலன் அடைந்ததாக வேதம் கூறுகிறது.இதற்குக் காரணம்கர்த்தர் சொன்ன தேசத்தில் அவன் குடியிருந்தான்.ஆதி-26:1-6.இன்று நாமும் கர்த்தர்சொல்லுகிற இடத்தில்குடியிருக்கும்போதுநிச்சயம் நூறு மடங்குபலன் அடையலாம்.பஞ்சம் வந்தவுடன் வேறு இடங்களுக்குச்சென்றுவிட வேண்டாம்.

2-விட்டுக்கொடுத்தான்.ஆதி-26:14-22.இங்கே ஈசாக்கு பலதுன்பங்களை அனுபவிக்கிறான்.ஆனாலும்அவன் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குசென்றுவிடுகிறான்.மேலும் அவன் வேலைக்காரர்கள் தோண்டிய பலதுரவுகளை பிறர் வந்துசொந்தம் கொண்டாடியபோது அப்படியே விட்டுவிடுகிறான்.கடைசியில்தேவன் அவனுக்கு ஒருரெகொபோத்தைக்கொடுத்தார்.அங்கே அவன் பலுகிப் பெருகினான்.அங்கே கர்த்தர்அவனோடு பேசினார்.ஆதி-26:24,25.நாமும் பிறருக்கு விட்டுக்கொடுப்போம்.அப்பொழுது தேவன்நம்மை ஆசீர்வதிப்பார்.

3-சத்துருக்களோடும்சமாதானம் செய்தான்.ஆதி-26:26-31.இங்கே அபிமெலேக்கும்அவன் மனிதர்களும்ஈராக்கிடம் வந்து உடன்படிக்கை செய்கின்றனர்.இவன் ஈசாக்கைத் துரத்திவிட்டவன்.ஆதி-26:13-18.ஆனாலும் ஈசாக்கு அவர்களை ஏற்றுக்கொண்டுஅவர்களுடன் சமாதானமாக இருந்தான்.அன்றேஈசாக்கின் வேலைக்காரர்கள் புதிய துரவுகளைவெட்டினார்கள்.இதுவேபெயெர்சபாவின் ஆசீர்வாதமாகும்.ஆமென்.மத்-5:44-48-ன்படி நாமும்சத்துருக்களை சிநேகிப்போம்.பரமபிதாவின்ஆசீர்வாதங்களைப்பெற்றுக் கொள்வோம்.அல்லேலூயா!

மோகன்ராஜ் -உடன்குடி9965253726