• Friday 24 January, 2025 04:38 AM
  • Advertize
  • Aarudhal FM
பாஜக கூட்டணியில் ஒரு கிறிஸ்தவ எம்.பி கூட இல்லை

பாஜக கூட்டணியில் ஒரு கிறிஸ்தவ எம்.பி கூட இல்லை

பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களில் ஒருவர் கூட பாராளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.