middle ad

Aaruthal fm

Non Stop Christian Super Station
ஹாய் குட்டிஸ்.. எப்படி இருக்கிறீங்க? நீங்க அனுப்பி தருகிற நல்ல கருத்துக்கள் சாட்சிகளுக்காக தேவனை துதிக்கிறேன். இது எக்ஸம் சீசன். நல்லா ஜெபம் பண்ணிட்டு படிங்க.. ஹெல்தியா சாப்பிடுங்க.. கட்டாயம் ஓய்வெடுங்க.. அப்புறம்.. ரிலாக்ஸா எக்ஸாம் எழுதுங்க.. உங்களுக்காக நாங்க ஜெபிக்கிறோம். ஆல் தி பெஸ்ட்.. 

என்ன குட்டிஸ்.. கதை கேட்க ரெடியாயிட்டிங்க.. அப்படித்தானே? ஓக்கே.. நடந்த ஓர் உண்மை சம்பவத்தை தான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். நல்லா கவனிக்கனும் ஓக்கே...

தென் கொரியாவில் புத்த மதத்தை சேர்ந்த ஒரு வாலிபன் தரையிலே விரிக்கப்பட்டிருந்த கிழிந்த பாயில் படுத்துக் கொண்டு, கந்தலான போர்வையை போர்த்திக் கொண்டு, மனதில் பல குழப்பங்களோடு உயிருக்காக போராடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று வாயிலிருந்து இரத்தம் வந்தது. பின்னர் மூக்கிலிருந்தும் இரத்தம் வந்துக் கொண்டே இருந்தது. மார்பு அடைத்தது. மூச்சுவிட முடியவில்லை. செத்தவனைப் போல இருந்த அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, 'காச நோயினால் ( TB ) நுரையீரல் அரித்து விட்டது. இனிமேல் இவனைக் காப்பாற்ற முடியாது. மரித்துப் போய் விடுவான்! என்று சொல்லி அனுப்பி விட்டனர்.

அதைக் கேள்விப்பட்ட ஒரு சிறு பெண், எப்படியாவது அவருக்கு புதிய ஏற்பாட்டை கொடுத்து விட வேண்டும் என்று அவரிடம் வந்தாள். கிறிஸ்தவர்களையும் வேதத்தையும் வெறுக்கும் அவன், கோபத்துடன் "நீ வெளியே போய் விடு" என்று சொல்லி அவளை விரட்டினான்.

மிகுந்த துக்கத்தோடு திரும்பிச் சென்ற அவள், அடுத்த நாளும் அவனைத் தேடி வந்தாள். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்து உங்களுக்கு அற்புதம் செய்வார். என்று மிகுந்த அன்போடு அவள் சொன்னபோதும், அவன் கோபத்துடன் அவளை விரட்டினான்.

அவள் சோர்ந்து போகவில்லை.  மறுபடியும் ஒருநாள் புதிய ஏற்பாட்டினை எடுத்துக்கொண்டு வந்தாள். அவனுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. அவளுடைய கன்னத்தில் ஓங்கி அடித்து, வெளியே போ. என்று சொல்லி தகாத வார்த்தைகள் கூறி அவளை விரட்டினான்.

அப்பொழுது அவள் "நீங்க என்னை அடித்தாலும் பரவாயில்லை! இந்த வேதப் புத்தகத்தை வாசிங்க" என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை அவனிடத்தில் நீட்டினாள். 

அவனும் அவளை தன்னை விட்டு வெளியே அனுப்பி விடுவதற்காக, அந்தப் புதிய ஏற்பாட்டை வெறுப்புடன் வாங்கிக்கொண்டான். அவள் வெளியே போனதும், அந்தப் புத்தகத்தைத் தூக்கி ஒரு மூலையில் எறிந்து விட்டான். சில நாட்களுக்கு பின்பு அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். அதில் மதக் கோட்பாடுகளோ, அல்லது மத ஒழுங்குகளோ எழுதப்பட்டு இருக்கும். என்று அவன் எண்ணினான். ஆனால், அதில் இயேசு 'என்கிற மெய் தேவனைக் குறித்தும், அவர் செய்த அற்புதஙகளை குறித்தும் வாசித்தான்!

வேத வசனங்களை வாசிக்க, வாசிக்க, அவன் இளம் வயதில் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து, மனதில் குத்தப்பட்டு அவைகளை அறிக்கை செய்தான். மனம் திரும்பி பரிசுத்தமாக வாழ ஆரம்பித்தான்!

இயேசு கிறிஸ்துவினிடத்தில் இருந்து அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்டான்! கடைசியில் அவன் ஒரு ஊழியக்காரனாக மாறினான்! அந்த வாலிபன்தான், இன்றைய டாக்டர் பால் வாங்கி சோ அவர்கள்.

உலகில் மிகப்பெரிய ஆலயம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அது தென் கொரியாவில் என்று சொல்வார்கள். இந்த ஆலயத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சபை அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் அந்த சபையின் போதகர் தான் டாக்டர் பால் யாங்கி சோ. 

அன்பு தம்பி தங்கச்சி நாகமானின் சுகத்திற்கு காரமான சிறு பெண்ணைப் போலவே  இவருடைய மகத்தான ஊழியத்திற்கு காரணம், அந்த சிறுமிக்குள் இருந்த அன்பும், கர்த்தரைக் குறித்து அவருக்கு சொல்ல வேண்டும் என்கிற வைராக்கியம் தான் ஆகும். இந்த சிறுமிக்குள் இருந்த வாஞ்சையும் தாகமும் நமக்குள் இருக்கிறதா? உன்னைப்போன்ற ஒரு சிறுமியால் பால் யாங்கி சோ-வை மாற்ற முடியும் என்றால், உன்னை கொண்டும் பலரது வாழ்வை மாற்றுவார். நம் பரந்த பாரத தேசத்தில் எத்தனை எத்தனைப் பேர் கர்த்தரை அறியாதபடி நித்தமும் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். 
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்ற பொன்மொழிக்கேற்ப நீங்கள் பெற்ற தேவனின் ஆதரவையும், ஆசீர்வாதங்களை உன்னை போன்ற சிறுவர்கள் பெற வேண்டாமா? 

நீ தெருக்களுக்கும் வீதிகளுக்கும் செல்ல வேண்டாம். உன்னோடு படிக்கும் சக மாணவர்களுக்கு, உன் நண்பர்களுக்கு இயேசப்பா செய்த நன்மைகளை பகிர்ந்து கொள்ளலாமே? நீங்கள் செயல்பட ஆரம்பித்தால் வியாதியினால் மாத்திரமல்ல, பாவங்களிலும், சாபங்களிலும் கட்டப்பட்டு மரணத்தை நோக்கி போய் கொண்டிருக்கின்ற ஜனங்களுக்கு உங்கள் மூலம் தேவன் மகிழ்வான வாழ்வை கொடுப்பார் என்பது உறுதி. 

"கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. (எரே.1:7)

அடுத்த இதழில் மற்றொரு சுவாரசியமான கதையோடு உங்களை சந்திக்கிறேன். உங்கள் கருத்துக்கள், சாட்சிகளை 9750381784 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பலாம். அடுத்த இதழில் சந்திப்போம்..  

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
பாஸ்டர்.பெவிஸ்டன்

🙂 *தங்கள் சபையில் பிரசங்கம்பண்ண வெளியில் இருந்து பிரசங்கியார்களை அழைக்கும் ஊழியர்களுக்கு சில யோசனைகள்.* 🙂

🍀 *நன்கு ஜெபித்து, தேவநடத்துதலின்படி* பிரசங்கியாரை முடிவுசெய்யுங்கள்.

🍀 சபையாரை பரவசப்படுத்துகிற பிரசங்கிகளை அல்ல. *பக்திவிருத்தியடைய செய்கிற (எபேசி.4:12) பிரசங்கிகளை அழைப்பதில்* கவனமாக இருங்கள்.

🍀 நீங்கள் அழைக்கிறவர் *தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிற*
(2கொரிந்.2:17),  மனுஷருக்கு அல்ல, தங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற *தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிற (1தெசலோ. 2:4) பிரசங்கிதானா* என்று முன்பே நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

🍀 கூட்டம் நடத்துவதை முடிவுசெய்துவிட்டால், *ஜெபித்து, உடனடியாக நல்ல பிரசங்கியாரிடம்* தேதி வாங்கிக்கொள்ளுங்கள்.

🍀 கூடுமானவரை அவர் வந்துப் போவதற்கு வசதியாக *முன்கூட்டியே பேருந்தையோ, தொடர்வண்டியையோ பதிவுசெய்து* கொடுத்துவிடுங்கள்.

🍀 கூட்டத்திற்கான தேதியில் மாற்றம் செய்தாலோ, அல்லது கூட்டத்தை ரத்துசெய்யும் சூழல் ஏற்பட்டலோ, *அதை உடனடியாக பிரசங்கியாருக்கு தெரியப்படுத்த* கவனமாக இருங்கள்.

🍀 உங்கள் *சபையாரின் ஆவிக்குரிய நிலை, ஆவிக்குரிய தேவைகள்* இவைகளைப் பற்றி பிரசங்கியாரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

🍀 உங்கள் அபிலாசைகளுக்கு ஏற்றவாரு மக்களை மாற்ற பிரசங்கியாரைக் கேட்டுக்கொள்ளாமல், *தேவசித்தம் செய்கிறவர்களாய் சபையாரையும், உங்களையும் மாற்றத்தக்க செய்தியோடு* வரும்படிக்கு பாரப்படுத்துங்கள்.

🍀 வருகிற பிரசங்கியார் *தேவனுடைய தூதுவன். எனவே அவரை சரியான கனத்தோடு* நடத்துங்கள்.

🍀 அவருடைய *உடல்நலன் மற்றும் மனநலம் பாதிக்கப்படக்கூடிய செயல்ககளைத்* தவிர்க்கப்பாருங்கள்.

🍀 வருகிறவர் நன்கு *ஜெபிக்க, வேதத்தை தியானிக்க,  ஓய்வெடுக்கத்தக்க இடத்தை* ஏற்படுத்திக்கொடுத்தால் நலமாக இருக்கும்.

🍀 சில பிரசங்கியார்கள் தங்கள் உடல் நலத்தினிமித்தம், சில உணவை தவிர்க்கலாம். *எனவே, முன்பாகவே அவருடைய உணவுமுறைகளைப் பற்றி* விசாரித்துக்கொள்வது நலம்.

🍀 உடை மற்றும் வேறுசில காரியங்களில் *நீங்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறவர்களானால்,* அதை பிரசங்கியாருக்கு முன்னவே தெரியப்படுத்திவிடுங்கள்.

🍀 பிரசங்கியாரரோடு *மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும்  ஐக்கியம் பாராட்டுங்கள்.* தனது குடும்பத்தாரோடு இருப்பது போன்று அவர் உணரும்படிச் செய்யுங்கள்.

🍀 கூட்டம் நடத்தும் இடத்திற்கு தூரத்தில்  அவரைத் தங்கவைத்திருப்பீர்களானால், *கூடுமானவரை அவர் சிரமமின்றி வந்துசெல்லும்* வசதியை செய்துகொடுங்கள்.

🍀 வருகிற பிரசங்கியார் உயரம் குறைந்தவராக இருப்பாரானால், உங்கள் உயரமான பிரசங்கப்பீடத்தில் *மக்களை அவர் இடையூறு இல்லாமல் பார்க்கத்தக்கதாக, அவர் நிற்க* ஒரு  பலகையை ஏற்பாடு செய்யுக்கள். அல்லது பிரசங்கப்பீடத்தை அகற்றிவிட்டு, *அவருக்கு முன்பாக பொருத்தமான ஒரு மேசையை* போடுங்கள்.

🍀 பிரசங்கியார் குடிப்பதற்கு *மறவாமல் நல்ல தண்ணிர்* வையுங்கள்.

🍀 கூடுமானவரை *பிரசங்கியாரின் தொண்டையைப் பிடிக்காத மைக்* ஏற்பாடு செய்யுங்கள்.
*பாடல் மற்றும் செய்தி தெளிவாகக் கேட்கத்தக்கதாக* நல்ல ஔிப்பெருக்கியை ஏற்பாடு செய்துகொள்ளுதல் நலம்.

🍀 செய்திவேளையில் ஜனங்கள் அடிக்கடி வெளியே எழுந்து சென்றும், ஒருவருக்ககொருவர் பேசியும் *பிரசங்கியாரை தொந்தரவு செய்யாதபடிக்கு,* முன்னதாகவே சபையாருக்கு ஆலோசனை சொல்லிவையுங்கள்.

🍀 பாடல், ஆராதனையை அதிகநேரம் இழுத்துவிட்டு, *செய்திக்கு நேரத்தை சுருக்கிக் கொடுத்து பிரசங்கியாரை பதற்றப்படுத்தாமல், செய்தியளிப்பதற்குப் போதுமான* நேரத்தை அவருக்குக் கொடுங்கள்.

🍀 *எவ்வளவு நேரம் பிரசங்கிக்கவேண்டும், எப்பொழுது பிரசங்கத்தை முடிக்கவேண்டும்* என்று பிரசங்கியாரிடம் முன்னதாகவே சொல்லிவிடுங்கள். *நீங்கள் சொன்ன சரியான நேரத்தில் பிரசங்கியாரிடம் மைக்கைக் கொடுக்க* முயற்சிசெய்யுங்கள்.

🍀 பிரசங்கத்திற்கு முன்பு சபையாரை திட்டி *அவர்களின் மனநிலையை பிரசங்கத்தைக் கேட்கக்கூடாதபடிக்கு கெடுக்காதபடிக்கும்,* பிரசங்கத்திற்குப் பிறகு நீங்கள் ஒரு பிரசங்கத்தை செய்து, *ஏற்கனவே அவர்கள் கேட்டப் பிரசங்கத்தை மறக்கடித்துவிடாதபடிக்கும்* கவனமாக இருங்கள்.

🍀 பிரசங்கியாரின் பிரசங்கத்தில் ஏதாகிலும் *பிழையிருக்குமானால், அன்புடனும் மரியாதையுடனும் அவரிடம் தனிமையில் எடுத்துச்சொல்லி,* அடுத்த பிரசங்கத்திற்கு முன்பு *அவரே  ஜனங்களிடம் தனது பிழையை திருத்திசொல்ல* கேட்டுக்கொள்ளுங்கள்.

🍀 நீங்கள் அழைத்திருக்கிற பிரசங்கியார் *உங்கள் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறபடியால், மக்கள் அவரிடம் பேசாதபடிக்கு தடைச்சுவராக இருக்காதீர்கள்.* தடைசெய்தால் சபையார் உங்ளைக்குறித்து தப்பான எண்ணம் கொள்ளக்கூடும்.

🍀 பிரசங்கியாரை உட்காரவைத்துவிட்டு, *நீங்களே ஜனங்களுக்கு ஜெபிக்கும் அநாகரீகத்தைத் தவிர்த்து,* பிரசங்கியாரை ஜெபிக்கக் கேட்டுக்கொள்ளங்கள். *அவருடைய செய்தியோடு கிருபையும் சபையாருக்கு* பிரயோஜனப்படட்டும்.

🍀 பிரசங்கியாரிடம் ஜெபித்துக்கொள்கிற விசுவாசிகள் *அவரிடம் என்னப் பேசுகிறார்கள், அவருக்கு எவ்வளவு காணிக்கைக் கொடுக்கிறார்கள் என்று கண்கொத்திப் பாம்பாக* கவனித்துக் கொண்டிருக்காதீர்கள். *இதை கவனிக்கும் விசுவாசிகளின் நல்லெண்ணத்தை* நீங்கள் இழக்கக்கூடும்.

🍀 பிரங்கியாரின் மூலம் *ஆவியானவர் விசுவாசிகளின் தவறுகளை கண்டித்துப் பேசும்போது* சந்தோஷப்படும் நீங்கள், *உங்கள் தவறுகளையும் சுட்டிக்காட்டும்போது, பிரசங்கியாரை ஐயப்படவும், அவர்மேல் கோபப்படவும் வேண்டாம்.*
ஜனங்கள் மனந்திரும்பிவிட்டு, *நீங்கள் மனந்திரும்பாமல்போனால்,* சிறிது காலத்திற்குப்பின் *அவர்கள் பழைய நிலைக்கே* வந்துவிடுவார்கள்.

🍀 ஜெபித்துக்கொண்ட ஜனங்களில் சிலர் *பிரசங்கியாருக்குக் கொடுத்த காணிக்கைகளை மனதில்வைத்து, நீங்கள் அவருக்குக் கொடுக்கும்படி நிர்ணயித்திருந்த காணிக்கையில் கைவைப்பது* அநியாயம்! விசுவாசிகள் *உங்கள் பணத்திலிருந்தோ, நீங்கள் கொடுக்க வைத்திருந்த காணிக்கையிலிருந்தோ* எடுத்துக் கொடு்க்கவில்லையே. *மேலும் நீங்கள் குறைக்கும் கணிக்கையைவிட அவர்கள் பிரசங்கியாருக்குக் குறைவாகவும்* கொடுத்திருக்கக்கூடும்.

🍀 எத்தனைப் பிரசங்கம்? எவ்வளவு நேரம் பண்ணினார்? என்று கணக்குப்பண்ணி காணிக்கைக் கொடாதீர்கள். *பிரசங்க ஆயத்தத்திற்கும், அதற்காய் ஜெபிக்கவும் அவர் செலவழித்த நாட்களையும், நேரத்தையும் அவருடைய பிரயாண தூரத்தையும், அதற்கான அவருடைய செலவுகளையும்* மனதில்வைத்து காணிக்கைக்கொடுங்கள். *கொடுக்கிற நீங்களும் பெற்றுக்கொள்ளுகிற பிரசங்கியாரும் மகிழத்தக்கதாக* காணிக்கைக் கொடுத்தனுப்புங்கள். *திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிற ஊழியரை இரட்டிப்பான கனத்திற்கு (கவனிப்புக்கு) பாத்திரராக* எண்ணவேண்டும். 
(1தீமோத்.5:17)

🍀 நீங்கள் உண்மயிலேயே கஷ்டப்படுகிறவராக இருந்தால், உங்கள் நிலையை *பிரசங்கியாரை அழைக்கும்போதே அவரிடம் சொல்லிவிடுங்கள்.*
அப்படியிருந்தும் வருகிற பிரசங்கியார்கள் அநுசரித்துப்போவார்கள். *ஆனால் கொடுக்க நல்ல திராணியிருந்தும் பிசிணித்தனம்பண்ணாதிருங்கள்.*
"நியாயசாஸ்திரியகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் *ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு"*
(தீத்து 3:13) என்கிற தீத்துவுக்கான  பவுலின் ஆலோசனை உங்களுக்கும்தான்.

🍀 நீங்கள் அழைத்தவர் கண்டிப்பான பிரசங்கியாராக இருந்தாலும் *உண்மையும் உத்தமமுமான ஊழியரை* விட்டுவிடாதீர்கள்.

🍀 அப்படிப்பட்ட *ஒரு நல்ல ஊழியரை உங்கள் சபைக்கு அனுப்பிவைத்த தேவனுக்கு சபையாரோடு* ஸ்தோத்திரம் செலுத்துங்கள்!

கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக!!

- *தேவனுடைய ஊழியன்....*
ஊழியர்களுக்கு சில யோசனைகள்.

மகிமையான விசேஷங்களின் ஆண்டு  - சங்கீதம் 87:3

1.பாதுகாப்பின் விசேஷம். 
        யாத்திராகமம் 8:22,23
2. பிரசன்னத்தில் விசேஷம் 
        யாத்திராகமம் 33:16
3. ஆசீர்வாதத்தில் விசேஷம் 
        உபகாரம் 33:16
4.ஆவியில் விசேஷம் 
        தானியேல்5:12
5.அற்புதங்களில் விசேஷம் 
         அப்போஸ்தலர் 19:11
விசேஷங்களின் ஆண்டு